Thursday, April 30, 2009

கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள்:அதிர்ச்சி தகவல்













கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள
(secrete jails in kilinochi, srilanka.)

( Since this message has to reach all over the world, I tried in english. Please forgive me for any mistakes.)

The youths aged between 15 to 35 (both male and female) have been kept house arrest in kilinochi areas. The civilians who and all comming to army camps are seperated into males and females. If army gets any doubt about these civilians, then they were arrested in the separate houses. These arrested peoples are made naked. They have been made nude, so as they won't try to escape from the camps. They have been provided food for once in a day. Even for urinals atleast two should go at a time. The young ladies are suffering more in camps. they have been used for sex in camps. These peoples are truely civilians. This kind of arrest is very secret.
(This photo has been given by a srilankan singala friend who can't able to bare this(Even though he is singala he can't bare this ie he is human, ie true singalan).
கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும், ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்ல வழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இராணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந்த மர்ம சிறைச்சாலைகளில் கழிப்பிட அறைகளுக்கு அருகாமையில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும். மலம் கழிப்பதற்க்கு கூட இருவராக செல்லும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அடைக்கப்பட்டுள்ள வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பல சிங்கள சமையல்காரர்கள் தற்போது கிளிநொச்சியில் இராணுவத்திற்காக வேலைசெய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மனம் தாங்கமுடியாமல் கசிந்த செய்திகளே இவை. பல வாரங்களாக அடைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரிவித்த அவர், அந்த மர்ம சிறைச்சாலைகளை புகைப்படம் எடுத்துத்தரவும் சம்மதித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

எம் இன மக்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகின்ற ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் முன் மக்களாகிய நீங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும்.




Thursday, March 5, 2009

இன படுகொலை தொகுப்பு - 1

உங்கள் பொழுது போக்கு நேரங்களை (மனித குலத்திற்கு) பயன் அளிக்கும் வைகையில் செலவிடுங்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
1 ) Sri Lanka - Humanitarian Crisis in Tamil Areas - 1

2) Sri Lanka - Humanitarian Crisis in Tamil Areas - 2

3) Sri Lanka - Humanitarian Crisis in Tamil Areas - ௩.
( killed and Hanged childrens) - ***( childrens killed, raped, orphanage attack, starvation to death 600,000 )

4) Sri Lanka - Humanitarian Crisis in Tamil Areas - 4
( we can't digest this " you shot my father raped and killed my mother, hanged my brother, tortoured and killed my sister. I have nothing left. When I decide to leave this planet, I will take you with me" ) Who is responsible for this ???

5) Sri Lanka - Humanitarian Crisis in Tamil Areas - 5
6) How Sinhalas r mass killing Unarmed Tamils: Colombo & Jaffna (Abduction of tamils 5000 in 12 months)

7) Air bombing [ Sri Lankan Govermment Terrorism ] - School Childrens Attack :

8) Sri Lanka State Terrorism Unleashed on Tamil orphanage

9) Sri Lanka Kills Tamil Children

10) 53 School girls killed in 2006 SLAF bombing, remembered-1of2

11) 53 School girls killed in 2006 SLAF bombing, remembered-2of2

12 ) Crisis in Tamil EELAM ( North west SriLanka)

13 ) Crimes & Terrorism done by the Sri Lankan Government

14 ) Sri Lanka: The Killing Field for Tamils

15) Sri Lanka Battle front - Killing Tamils with MBRL

16) umanateri humanaterian crisis in vanni - part - one

17) Humanitarian Crisis in Vanni due to bombing & shelling of SriLankan forces

18 ) VIOLENCE IN SRI LANKA PART 2 (1983- Black July)

19 ) Humanitarian Crisis in Vanni - Sep-01-2008

20 ) Srilankan force brutal attack (and rape) on Tamil Women

21 ) Army attack in Matthalan
( சிறிலங்கா மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையின் இன்றைய காட்சிகள் - (எச்சரிக்கை: படங்கள் கோரமான காட்சிகளைக் கொண்டவை)
22 ) சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி//இந்த வீடியோ
காட்சி

எனக்கு கிடைத்த தகவலை பரிமாறி உள்ளேன். உங்களிடம் நிறைய தகவல் இருக்க வாய்ப்புண்டு. தாங்களிடம் உள்ள தகவலை பிண்ணுடம் மூலம் அனுப்பி வையுங்கள். முடிந்தால் மற்றவர்களுக்கு மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வையுங்கள். " நாம் ஒருவர் அனுப்பி என்ன ஆக போகுது" என்று நினைக்க வேண்டாம். ஒவ்வேருவருடைய செயலுக்கும் நேரகவோ , மறைமுகமாகவோ விளைவு உண்டு. நானும் அப்படிதான் நினைத்தேன். வட இந்தியர் ஒருவருக்கு மின் அஞ்சல் மூலம் தெரிய படுத்தியவுடன் அவர் சொன்ன வார்த்தை " இவ்வளவு கொடுமைகள் நடந்து கொண்டிருப்பது" எனபது எங்களுக்கு தெரியாது. நேரில் அவரிடம் வரலாறை விளக்கிய பிறகு அவர் தமிழர்களின் நிலையை புரிந்து கொள்ள ஆரம்பித்தார். இதற்க்கு முன்னால் தமிழர்கள் இலங்கைக்கு சென்று அங்கே உரிமை கேட்கிறார்கள்" என நினைத்தார் எனபது முக்கியம்.அங்கே உள்ள செய்தி தால்களும் தெரிவிப்பதில்லை. ஏன் நம்ம உடகங்களின் ( ஒரு சில தவிர) போக்கே அப்படிதான் இருக்கிறது. நிறைய உண்மைகள் மறைக்க படுகின்றன. திசை திருப்ப படுகின்றன. தயவு செய்து முடிந்தவரை மற்றவர்களிடம் விளக்க முயற்சியுங்கள். உங்கள் முயற்சிக்கும், நேரம் செலவிட்டமைக்கும் நன்றி. நிறைய நேரங்களில் தேவையில்லாத நிறைய விசியங்களுக்கு நாம் செலவிடும் நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள்.

Monday, March 2, 2009

காங்கிரஸ் தேர்தல் சாதகமும், பாதகமும்

தேர்தல் வருகை - காங்கிரசின் நிலை :

தேர்தல் வருவதால், இவ்வளவு நாளாக கூறி வந்தது போல் " போரை நிறுத்த சொல்லி இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது" என்பதை விட்டுவிட்டு

1) "போரை நிறுத்தி பொது மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதை கூ றுகிறார் வெளி உறவு துறை அமைச்சர்.
2) தமிழர் அதிகார பகிர்வு பற்றி பேசியுள்ளார்.
( இதை பற்றி நாம் பேசுவது கனவில் உணவு அருந்துவது போல். இலங்கை அதிபர் வாய் திறக்காமல் எந்த முடிவும் வர போவது இல்லை).
இதற்க்கு தான் வெளி உறவு துறை அமைச்சர் நாசுக்ககா கூறுகிறார் "விடுதலை புலிகள் கோரும் போர் நிறுத்தத்தை பயன் படுத்தி , பொது மக்களை வெளியற்றி விட்டு, புலிகளை அழித்துவிட்டு, பிரபாகரனை பிடித்துவிடலாம் என்று இலங்கைக்கு அறிவுறுத்துகிறார். இலங்கை அதிபர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என தெரியவில்லை. ( விடுதலை புலிகளை போரிட்டு அழிக்க வேண்டும் என்பதிலும் , பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படிக்க வேண்டும் என்பதிலும் எந்த ஒரு மாற்று கருத்தே இல்லை காங்கிரசிடம். இதை தேர்தல் என்பதால் வெளிபடையாக கூற முடியாத சூழ்நிலை உள்ளது.)
பாதகம் ;

1) போரை நிறுத்த இந்திய கோர முடியாது என்றது பாதகமே.

2) ஆயுதமோ, பண உதவியோ இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறி வந்த நிலையுல், ஊடகங்கள் வாயிலாக ஆதாரத்தோடு செய்தி வெளி வந்த நிலையில், மௌனம் காப்பதால், மக்களுக்கு காங்கிரஸ் கூறுவது எல்லாம் உண்மையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. நம்பக தன்மை மீதும் எழுந்த கேள்வி தான் இது. இது பாதகமே.

3) சட்டம், ஒழுங்கு, நியாயம், நீதி என்று பேசினாலும், அங்கே மக்களுக்கு ஏற்படும் கொடுமைகளை, அநிதி, கொலை, மனித உரிமை மீறல், கற்பழிப்பு எல்லவற்றையும் கை கட்டி வேடிக்கை பார்க்க தான் வேண்டி இருக்கிறது. தமிழகத்தில் விடுதலை புலிகள் என்று வாய் திறந்தாலே உள்ளே போக வேண்டிய நிலை மாறி, இப்போது விடுதலை புலிகள் ஆதரவாக வெளிப்படியாக கோஷங்கள் போடுவது, கையில் கொடி ஏந்தி போராடுவது என நடப்பது ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிகிறது. இதில் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்திருப்பது காங்கிரஸின் ஆதரவு குறைதிருப்பதையே காட்டுகிறது. ஆதரவு அளிப்பவர்கள் பாமர மக்கள் மட்டும் அல்ல படித்தவர்களும் தான். பேராசிரியர்கள், எழுத்தாளர்கள். இது பாதகமே.
சாதகம் :
1) விடுதலை புலிகளை அழிப்போம், பிரபாகரனை பிடிப்போம் என்று வெளிபடையாக கூறுவதை விட்டது சாதகமே.
2) போர் நிறுத்தம்,அதிகார பகிர்வு என்று பேச துவங்கியது தேர்தலுக்கு சாதகமே.

தேர்தல் காங்கிரசாரின் எண்ணத்தில் இன்னும் மாற்றம் ஏற்படுத்தும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.
மக்களுக்கு தகுந்தார் போல் காங்கிரஸ் மாறுமா ?.
காங்கிரஸ் தகுந்தார் போல் தமிழக மக்கள் மாறுவர்கள?.
கிராம புற மக்களின் எண்ணம் மிகுந்த தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தும். அந்த மக்களின் எண்ணம் என்ன?.
அவர்கள் பிரச்சனை ஈழ மக்கள? இல்லை வேறு பல பிரச்சனை உள்ளாத?. தேர்தலுக்கு ஈழ பிரச்சனைக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கும் ?
எனபது எல்லாம் தேர்தல் முடிவு தான் சொல்லும்.
இது பாமர மக்களின் எண்ணம் மட்டுமே.

(பின் குறிப்பு : மேல் கூறியாவை அனைத்தும் உறங்கி கொண்டிருக்கும் போது கனவில் ஜோதிடர் ஒருவர் கூறினார். இது அவர் கனவில் கடவுள் வடிவில் வந்தவர் கேள்வி எழுப்பியதாக அவர் கூறினார். இது கனவே தவிர வேறு ஒன்றும் இல்லை. )

Thursday, February 19, 2009

இலங்கையில் நிகழும் பாலியல் வன் கொடுமைகள்

ஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ, யாரையாவது தலைவனாக்க கால் தேடி கொண்டிருக்கும் அடிமை இனமே பாருங்கள்.
தயவு செய்து திவிரவாதம் என்று அரசியல் ஆக்க வேண்டாம். நான் சொல்வது எல்லாம் "பெண்ணை" பற்றி தான் ஆம் நம் ஈழ சகோதிரிகள் பற்றி தான். ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமையை பாருங்கள்.

//மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது//
//யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை,//
//மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது//
//மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி//

இந்த வீடியோ காட்சி

http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

அடி மனதில் இரத்தம் வருகிறதா.
வரும்...
வந்தே தீரும் ....
உன் தகப்பன் ஒரு தமிழன இருந்த ....
உன் தாய் ஒரு தமிழச்சிய இருந்த ...
நீ குடித்தது தமிழ் பாலா யை இருந்த ...
வர வில்லை என்றால்...
நீ தமிழனாய் அல்ல மனிதனை வாழ தகுதி அற்றவன் ...

இதுவே ஒரு தமிழன் சிங்கள சகோதிரியை செய்திருந்தால் எல்லோரும் கொக்கரிபீர்கள் மரபு தவறிவிட்டான் என்று. கண்ணியமான தமிழன் என்றும் இவ்வாறு செய்யமாட்டன் கவலைபடாதீர்கள் சிங்கள சகோதரர்களே .... நீங்களும் எங்கள் சகோதரர்கள் தான் நீங்கள் ஏற்று கொண்டாலும் கொள்ளாவிட்டாலும். நீங்கள் உங்கள் சகோதரிகளை தான் நிர்வாணமாக்கி உள்ளீர். சகோதரியை நிர்வாணமாய் பார்த்த ஈன இனம் நாங்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்.

மனிதன் உருவில் திரியும் மிருகங்களே... இந்த ஈன செயலை செய்ய வெக்கமாய் இல்லை. விலங்கிளில் இருந்து மனிதனை வேறுபடுத்துவது, தன் தகப்பனை கை காட்ட தெரிந்த குணமே.
நிங்கள் மானிதர்களா?. உன் சகோதரி நினைவிற்க்கு வரவில்லை?. தாய்
நினைவிற்க்கு வரவில்லை?. புதனின் அந்த துய்மையான, அமைதியான முகம் கூடவா நினைவிற்க்கு வரவில்லை?.
அடேய் மூடர்களே... எந்த மதம் கூறியது ஈன செயலை செய்ய?. எந்த கடவுள் கூறினான் இந்த ஈன செயலை செய்ய?.
சொல்...
போரிட வேண்டியது உங்களிடம் அல்ல அவனிடம் தான்.

புத்தன் பிறந்த மண்ணின் மைந்தர்களட இவர்கள். இவர்கள் கால் பூமியுள் பட குடுத்து வைத்தவர்கள் நீங்கள். பிழைகா தெரியாதவர்களே.

பெண்கள் விரும்புவதெல்லாம் குழந்தைகளை தூக்க, ஆயுதங்களை அல்ல... உலகம் முழுவதும் தேடி பாருங்கள் , எண்ணி பாருங்கள் ஆயுதம் ஏந்தும் பெண்களை. குழந்தைகளை தூக்கும் பெண்கள் ஆயுதங்களை தூக்கு கிறார்கள் என்றால் "எங்கோ யாரோ மன்னிக்க முடியாத தவறு செய்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்கள் நாட்டு பெண்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறார்கள் என்றால் வெக்க படவேண்டியது நீங்கள் தானே. குழந்தைகள் தூக்கும் பெண்கள் ஆயுதம் ஏந்துவது யார் தவறு. இதயம் என்று ஒன்று இருந்தால், மனசாட்சி என்று ஒன்று இருந்தால் சிந்தித்து பாருங்கள்.

உயிரோடு இருக்கும் போது தான் உரிமைகளை விட்டு வைக்கவில்லை, இறக்கும் போதாவது மானத்தை விட்டு வைங்களேன்... மனிதர்களாய் இருப்பின்.

ஊலையுடும் உலக நாடுகளே ஏன் ஊமையாய் நிற்கிறீர்கள் ?. ஆம் உண்மைக்கு எப்போதும் வாய் இருப்பதில்லை உலகில் " எனபது சரியே.
மிருகங்களுக்கெல்லாம் சட்டம். வதை படுவதை தடுக்க இயக்கம் ஆனால் இவர்களுக்கு இல்லை. சொல்லுங்கள் ... இவர்களை காப்பாற்ற முடியுமானால் இன்றே இவர்களை மிருகங்களக்கி விடுங்கள். நிர்வானமாய் இருக்கும் இவர்கள் இப்போதே பாதி மிருகங்கள் தான்.

மிருகமாய் கொலை செய்த மரண தண்டனை கைதிக்கு கூட வழக்காட மனித உரிமை சங்கம் உண்டு. எங்கே அவர்கள் ?.

வந்தாரை எல்லாம் தலைவனாகி வாழ வைத்த தமிழ் இனம் இன்று அவல நிலையில். தலைவர்களே உங்களுக்கு என்ன வேண்டும் நாங்கள் செய்ய தயார். உங்கள் மகன், பேர குழந்தைகளை எல்லாம் நாங்கள் எங்கள் தலையில் தூக்க தயார். அடிமைகளாய் வாழ்ந்த எங்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை ஆனால் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் போர் நிறுத்தம் தான். என்றோ தின்ற ரொட்டி துண்டிற்கு வாழ்நாள் முழுவதும் வாழ் ஆட்டும் நன்றி இனமே நாங்கள். நன்றி மறக்க மாட்டோம். புறப்படுங்கள்...உங்கள் கால் தமிழ் நாட்டில் வைக்குமேயானால் .... உங்கள் நுனி நாக்கில் தமிழ் தவளுமேயானால்....புறப்படுங்கள்... போரை நிறுத்துங்கள் !!!

எல்லாவற்றையும் தூக்கி எரியுங்கள். புறப்படுங்கள் ... எதிரியோ... துரோகியோ... யாரும் மடிய வேண்டாம். அவனவன் இறப்பதற்கு முன் தன் மனசாட்சிக்கு பதில் கூறியே ஆகவேண்டும். தவறு செய்தவன் இறப்பதற்கு முன் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் இதுவே சத்தியம்...

Wednesday, February 18, 2009

ஒரு முட்டாளின் முன்று கேள்விகள்

ஒரு சாதாரண இந்திய குடிமகனான என்னுள் எழுந்த முன்று கேள்விகள்.

1) இந்தியா, ஈழத்தில் உள்ள தமிழர்களின் உரிமைகளை வாங்கி கொடுக்க உத்திரவாதம் தர முடியுமா?.

இந்தியாவின் பதில் : இது உள்நாட்டு பிரச்சனை. வலியுறுத்தலாம் தவிர, ஒரு நாடு இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது.

2) இந்தியா, ஈழத்தில் உள்ள ராணுவத்தால் கொல்லபடுகின்ற தமிழர்களின் உயிருக்கு உத்திரவாதம் தர முடியுமா?.

இந்தியாவின் பதில் : இது உள்நாட்டு பிரச்சனை. வலியுறுத்தலாம் தவிர ஒரு நாடு இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது.

அப்போ இப்ப இலங்கையில் நடக்குற சண்டையும் உள்நாட்டு பிரச்சனை தானே?. இலங்கை நாட்டில் ஒரு தரப்பு மக்கள் தங்களின் உரிமைக்காக அந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளரை எதிர்த்து போராடுகிறார்கள்.

இந்த உள்நாட்டு பிரச்சனைகாக இந்தியா ஏன் பணம், ஆயுத உதவி செய்ய வேண்டும்?.

இந்தியா பணம், ஆயுத உதவி செய்யும் போது மட்டும் இது உள்நாட்டு பிரச்சனையில் தலையிடுவதா தெரியுலையா?.

என்னை போன்ற பல பேருக்கு புரியாத புதிரா தான் ....

Friday, February 13, 2009

இறப்பது இந்தியர்களா ? தமிழர்களா ?

அதிகம் பேசவும் தேவை இல்லை விளக்கவும் தேவை இல்லை. கேள்வி ஒன்றே போதுமானது. ஆனால் ஆதங்கம் விடுவதா இல்லை என்ன செய்வது ?. வேறு மாநிலத்தில் வாழும் என்னைப்போலவர்களிடம் மற்றவர்கள் பேசும் போது தான் தெரிகிறது நமக்கு. பேசும் போது "This is the problem of Tamils in SriLanka" ( இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை ). நானும் நுட்பமாக கவனிக்காமல் சாதாரணமாக நினைத்தேன். பிறகு தான் கேள்வி எழுந்தது "இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை" சரியா ? என்று. ஏன் இது இலங்கையில் வாழும் இந்தியர் பிரச்சனை இல்லையா? . தமிழர் பிரச்சனை வேறு இந்தியர் பிரச்சனை வேறா? . பிரச்சனை முடிவுக்கு வராத காரணம் இப்போது தான் புரிந்தது என்னக்கும். புரிந்தது இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று. சரிதானே இறப்பது தமிழன் தானே ... இந்தியர்கள் பழி யானால் துடி துடித்து போகும் இந்தியாவிற்கு ஏன் பல இந்தியர்கள் இலங்கையில் ரத்தம் சிந்துவதை பார்த்து கொண்டிருக்கிறது ?. இறப்பது இலங்கையில் வாழும் இந்தியன் என்று இந்தியா நினைக்குமேனால் பிரச்சனை முடிந்துவிடும் . "மறப்பவர்கள் தான் தமிழ் மக்கள் " எல்லாம் ஆறு மாதத்தில் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தால்...
மிகவும் வருத்த பட வேண்டிய விஷயம் தான் இது