Monday, August 31, 2009

சுவின் ப்ளு வுக்கு இடையே கல்யாணம்

புனாவில் ஒரு கல்யாணம்


ஸ்வைன் ப்ளு உங்களை அன்போடு வரவேற்கிறது










Thursday, August 27, 2009

தன்னம்பிக்கை கதை

( இது நண்பர் David மின்னஞ்சல் மூலம் அனுப்பியது )

எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க...

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”

Tuesday, August 25, 2009

மன இறுக்கத்தைத் தளர்த்த பத்து எளிய வழிகள்

( இது நண்பர் சதீஷ் சுந்தரின் மின்னஞ்சல் மூலம் கிடைத்த பயனுள்ள தகவல் )

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்கவனியுங்கள்...
ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.


2. நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.
3. நடங்கள்! ஓடுங்கள்!
தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.
4. ஓய்வெடுங்கள்.
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள்... கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.
5. சிரியுங்கள்
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.
6. மனம்விட்டுப் பேசுங்கள்.
மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.
7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்
உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.
8. தெளிவாகச் செய்யுங்கள்
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.
9. விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.
10. மற்றவர்களையும் கவனியுங்கள்
உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும்... ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள். இவற்றை மட்டும் தினமும் கடைப்பிடியுங்கள்...
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் புதிய திருப்பத்தைக் காணுங்கள்.
நாம் ஓயும் முன்னே சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய உள்ளது............

Monday, August 24, 2009

Health Benefits of Water

Health Benefits of Water
Our bodies are made up of mostly water. Just look at the facts: The brain contains 74% water, blood contains 83% water, lean muscle has 75% and bone has 22% water. Experts agree that water is one of the most powerful forms of treatment. So how come most people don't drink enough water?

10 Health Benefits of Water:


1. Water prevents kidney stones. The most common cause of kidney stones is not drinking enough water. Since water dissolves the substances that form stones in the urine, drinking 12 glasses daily helps treat kidney stones.

2. Water treats urinary tract infection. The more water you drink, the more you will urinate. "Drinking lots of water will help flush out harmful bacteria from your bladder," says Medical City kidney specialist Dr. Roberto Tanchanco.

3. Water helps patients with diarrhea by preventing dehydration. As a first-aid for diarrhea, you can make your own oral rehydration solution at home. Mix a glass of water with 2 teaspoons sugar and ¼ teaspoon salt, and drink as much as you can tolerate. This is similar to the dextrose solution in the hospital.

4. Water helps reduce fever. For symptoms of flu, water can help lower your body temperature when you urinate the "heat" out of your body. If you're sick, drink more water for you to recover faster.

5. Water helps treat cough and colds, sore throat, and respiratory infections. Water helps loosen sticky phlegm. A respected lung specialist told me that some mucolytics out there are just as beneficial as drinking lots of water.

6. Water reduces heartburn. Taking 2-3 gulps of water every 20 minutes or so can help flush the stomach acid away. Bananas and water are effective alternatives to taking antacids. Try it.

7. Water prevents constipation and its complications. Too little water can harden the stools and lead to hemorrhoids and diverticulosis, a disease of the large bowel. Drink water and eat lots of vegetables to soften your stools.

8. Water keeps you alert and energetic. If you're dehydrated, your blood is literally thicker. This makes it harder for the blood to circulate. As a result, the brain can become less active and you can feel confused and fatigued. Some studies also show that water may help cure migraine headaches.

9. Water helps reduce weight. By drinking a glass or two of water before a meal, you will lessen the amount of food you can take in order to feel full. Water has zero calories and will not make you fat.

10. Water keeps your skin soft and radiant. Just as a dehydrated person will have deep-set eyes and wrinkled skin, so will a fully hydrated person exhibit a normal and beautiful skin tone.

The Correct Way To Drink Water:


1. Drink water when you wake up. Your body loses water while you sleep, so drink a glass before you go to sleep and another glass when you wake up. You are naturally thirsty or dehydrated in the morning. Drinking water in the morning helps flush out the toxins that have accumulated all night.

2. Drink 8 to 12 glasses a day. According to the Mayo Clinic, a 120-pound individual needs 8 cups of water a day, while a 190-pound person would require 12 cups daily. Dr. Robert Tanchanco says that we should monitor our urine color and keep it on the light side. However, drink only a maximum of 16 glasses a day, and not more.

3. Drink little by little throughout the day. It is preferable to sip water throughout the day rather than to drink two glasses all at once. This will lessen the stress on the heart (especially if you have heart disease) and give your body more time to absorb it.

4. Don't wait until you're thirsty to drink water. By the time you feel thirsty, you're probably already 2 glasses below your normal water needs. Elderly people are also less sensitive to the body's need for water.

5. Drink water, not soft drinks, alcohol or coffee. Some experts believe that tea, sodas and coffee can be potentially dehydrating. Moreover, the high phosphorus and sugar content in cola drinks can lead to conditions like osteoporosis and diabetes. One study shows that adults who drank six cups of coffee daily experienced mild dehydration. Drinking alcohol is much worse because it actually dehydrates you by making you urinate a lot.

6. Train children to drink water. Set a good example to your kids and drink water together. Make sure that children drink enough water when they're active. Pack a large bottled water in their lunch box.

7. Drink more when it's hot. People living in hot climates like the Philippines need to drink more water. They are more prone to develop kidney stones compared to those living in cooler regions.

8. Drink more as you exercise. When you exercise, you need to drink more water to compensate for fluid loss. Go for an extra 500 ml of water for a 30-minute to 1-hour exercise. Eating a banana also helps keep your potassium up.

9. Drink more when you're sick. Even though you don't feel like it, you really need to drink more water to help your body recover from various infections. If you're dehydrated, you'll feel much worse.

10. Drink more if you're pregnant. Women who are expecting or breast-feeding need additional fluids to stay hydrated. The Institute of Medicine recommends that pregnant women drink 10 cups of fluids daily and women who breast-feed take in about 13 cups of fluids a day.