Thursday, April 30, 2009

கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள்:அதிர்ச்சி தகவல்













கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள
(secrete jails in kilinochi, srilanka.)

( Since this message has to reach all over the world, I tried in english. Please forgive me for any mistakes.)

The youths aged between 15 to 35 (both male and female) have been kept house arrest in kilinochi areas. The civilians who and all comming to army camps are seperated into males and females. If army gets any doubt about these civilians, then they were arrested in the separate houses. These arrested peoples are made naked. They have been made nude, so as they won't try to escape from the camps. They have been provided food for once in a day. Even for urinals atleast two should go at a time. The young ladies are suffering more in camps. they have been used for sex in camps. These peoples are truely civilians. This kind of arrest is very secret.
(This photo has been given by a srilankan singala friend who can't able to bare this(Even though he is singala he can't bare this ie he is human, ie true singalan).
கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும், ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்ல வழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இராணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந்த மர்ம சிறைச்சாலைகளில் கழிப்பிட அறைகளுக்கு அருகாமையில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும். மலம் கழிப்பதற்க்கு கூட இருவராக செல்லும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அடைக்கப்பட்டுள்ள வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பல சிங்கள சமையல்காரர்கள் தற்போது கிளிநொச்சியில் இராணுவத்திற்காக வேலைசெய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மனம் தாங்கமுடியாமல் கசிந்த செய்திகளே இவை. பல வாரங்களாக அடைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரிவித்த அவர், அந்த மர்ம சிறைச்சாலைகளை புகைப்படம் எடுத்துத்தரவும் சம்மதித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

எம் இன மக்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகின்ற ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் முன் மக்களாகிய நீங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும்.