Monday, March 2, 2009

காங்கிரஸ் தேர்தல் சாதகமும், பாதகமும்

தேர்தல் வருகை - காங்கிரசின் நிலை :

தேர்தல் வருவதால், இவ்வளவு நாளாக கூறி வந்தது போல் " போரை நிறுத்த சொல்லி இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது" என்பதை விட்டுவிட்டு

1) "போரை நிறுத்தி பொது மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதை கூ றுகிறார் வெளி உறவு துறை அமைச்சர்.
2) தமிழர் அதிகார பகிர்வு பற்றி பேசியுள்ளார்.
( இதை பற்றி நாம் பேசுவது கனவில் உணவு அருந்துவது போல். இலங்கை அதிபர் வாய் திறக்காமல் எந்த முடிவும் வர போவது இல்லை).
இதற்க்கு தான் வெளி உறவு துறை அமைச்சர் நாசுக்ககா கூறுகிறார் "விடுதலை புலிகள் கோரும் போர் நிறுத்தத்தை பயன் படுத்தி , பொது மக்களை வெளியற்றி விட்டு, புலிகளை அழித்துவிட்டு, பிரபாகரனை பிடித்துவிடலாம் என்று இலங்கைக்கு அறிவுறுத்துகிறார். இலங்கை அதிபர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என தெரியவில்லை. ( விடுதலை புலிகளை போரிட்டு அழிக்க வேண்டும் என்பதிலும் , பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படிக்க வேண்டும் என்பதிலும் எந்த ஒரு மாற்று கருத்தே இல்லை காங்கிரசிடம். இதை தேர்தல் என்பதால் வெளிபடையாக கூற முடியாத சூழ்நிலை உள்ளது.)
பாதகம் ;

1) போரை நிறுத்த இந்திய கோர முடியாது என்றது பாதகமே.

2) ஆயுதமோ, பண உதவியோ இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறி வந்த நிலையுல், ஊடகங்கள் வாயிலாக ஆதாரத்தோடு செய்தி வெளி வந்த நிலையில், மௌனம் காப்பதால், மக்களுக்கு காங்கிரஸ் கூறுவது எல்லாம் உண்மையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. நம்பக தன்மை மீதும் எழுந்த கேள்வி தான் இது. இது பாதகமே.

3) சட்டம், ஒழுங்கு, நியாயம், நீதி என்று பேசினாலும், அங்கே மக்களுக்கு ஏற்படும் கொடுமைகளை, அநிதி, கொலை, மனித உரிமை மீறல், கற்பழிப்பு எல்லவற்றையும் கை கட்டி வேடிக்கை பார்க்க தான் வேண்டி இருக்கிறது. தமிழகத்தில் விடுதலை புலிகள் என்று வாய் திறந்தாலே உள்ளே போக வேண்டிய நிலை மாறி, இப்போது விடுதலை புலிகள் ஆதரவாக வெளிப்படியாக கோஷங்கள் போடுவது, கையில் கொடி ஏந்தி போராடுவது என நடப்பது ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிகிறது. இதில் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்திருப்பது காங்கிரஸின் ஆதரவு குறைதிருப்பதையே காட்டுகிறது. ஆதரவு அளிப்பவர்கள் பாமர மக்கள் மட்டும் அல்ல படித்தவர்களும் தான். பேராசிரியர்கள், எழுத்தாளர்கள். இது பாதகமே.
சாதகம் :
1) விடுதலை புலிகளை அழிப்போம், பிரபாகரனை பிடிப்போம் என்று வெளிபடையாக கூறுவதை விட்டது சாதகமே.
2) போர் நிறுத்தம்,அதிகார பகிர்வு என்று பேச துவங்கியது தேர்தலுக்கு சாதகமே.

தேர்தல் காங்கிரசாரின் எண்ணத்தில் இன்னும் மாற்றம் ஏற்படுத்தும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.
மக்களுக்கு தகுந்தார் போல் காங்கிரஸ் மாறுமா ?.
காங்கிரஸ் தகுந்தார் போல் தமிழக மக்கள் மாறுவர்கள?.
கிராம புற மக்களின் எண்ணம் மிகுந்த தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தும். அந்த மக்களின் எண்ணம் என்ன?.
அவர்கள் பிரச்சனை ஈழ மக்கள? இல்லை வேறு பல பிரச்சனை உள்ளாத?. தேர்தலுக்கு ஈழ பிரச்சனைக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கும் ?
எனபது எல்லாம் தேர்தல் முடிவு தான் சொல்லும்.
இது பாமர மக்களின் எண்ணம் மட்டுமே.

(பின் குறிப்பு : மேல் கூறியாவை அனைத்தும் உறங்கி கொண்டிருக்கும் போது கனவில் ஜோதிடர் ஒருவர் கூறினார். இது அவர் கனவில் கடவுள் வடிவில் வந்தவர் கேள்வி எழுப்பியதாக அவர் கூறினார். இது கனவே தவிர வேறு ஒன்றும் இல்லை. )

No comments: