Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Wednesday, October 3, 2012

இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்

மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான் என 91 அகவை நிரம்பிய இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஆனந்த விகடனிடம் தெரிவித்துள்ளார்...
.

மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங் இப்படி கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து தலைவர்களையும் செவ்வி கண்டிருக்கும் இவர் இப்பொழுதும்
14 மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாமல் கட்டுரைகள் எழுதுகிறார் என ஆனந்த விகடன் குறிப்பிடுகிறது.

இவரிடம் ''2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, இந்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா?'' என விகடன் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்

”இலங்கைப் போர் இந்த நூற்றாண்டின் மாபெரும் சோகம் என்று இங்கிலாந்து சேனல்கள் சொல்கின்றன. ஆனால், பக்கத்து நாடான இந்திய மீடியாக்கள் மௌனித்தது ஏன்?’ என 'சேனல் 4’ என்னிடம் கேட்ட‌ கேள்விக்கு, இன்றுவரை என்னால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 'நம்முடைய மௌனமும் மறுதலிப்பும்தான் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை, கர்ப்பிணிப் பெண்களை, பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறது’ என்ற குற்ற உணர்வு மனசாட்சிகொண்ட ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியனையும் ஆட்சியாளனையும் காலம் முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும். போரின்போது தமிழர்களிடையே எழுந்த எழுச்சியை இந்தியா முழுக்கப் பரப்ப தமிழக அரசியல்வாதிகள் தவறிவிட்டதாகவே நினைக்கிறேன். பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளின் உதவியோடு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு அழித்தொழித்தது ராஜபக்ஷே அரசு. இதைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, 'இலங்கை எங்கள் நட்பு நாடு’ என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை. இது போதாது என இப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்துவருகிறது. சீனாவையும் பாகிஸ்தானையும் பேலன்ஸ் செய்ய இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.

இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு அந்த நாட்டில் சுய மரியாதையுடன் வாழும் உரிமையும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. அதைத் தமிழர்கள் கேட்கும்போது காலங்காலமாக காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் விடுதலைப் புலி கள் ஆயுதம் ஏந்திப் போராடி னார்கள். மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான். (குரல் கம்முகிறது) ஏனென்றால், அவர்கள் நம் மக்கள்!'' என்றார்
 

Thursday, August 23, 2012

டெசோ மாநாடு – கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஓர் ஏதிலியின் கடிதம்…- சூனியர் விகடன்


நட்பு பதிவு செய்த நாள் : 13/08/2012

டெசோ மாநாடு – கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஒரு அகதியின் கடிதம்…- சூனியர் விகடன்

மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்கட்கு,
எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் துன்பத்திலும், துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின்
தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது. எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே!
தங்களுக்கு நிகர் தாங்களே தான்.
 கந்தக வெடிப்பில் உடல் சிதற, செங்கழுநீர் வன்னி மண்ணில் காட்டாறாக ஓட, எம்மவர் உயிர்கள் இடம்பெயர்ந்து பறக்க – இந்த அவலங்கள் கண்டு துடிதுடித்தெழுந்து நீங்கள் சுழற்றிய வாளின் வீச்சு கண்டு திகைத்துத்தான் போய்விட்டோம் ஒரு போது.
உலகத்தமிழரின் தலைவனாக முடி தரித்து, செங்கோல் ஏந்தி அரியாசனத்தில் வீற்றிருக்க தங்களை விட்டால் யாருக்கு தகுதி இங்கு உண்டு.
காலைச் சிற்றுண்டிக்கும் மதியபோசனத்திற்கும் இடையே நீங்கள் இருந்த “சாகும்வரை உண்ணாவிரதம்” சரித்திரத்தில் ‘பிளாட்டினம்’ எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது. எமது வரலாற்றாசிரியர்களின் எழுது கோலை “சாணை” கொண்டு தீட்டி கூர்மையாக வைத்திருக்க வேண்டும். உங்களின் வரலாறு ‘கூர்’மையாகப் பதிவு செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முனை மழுங்கிய எழுத்தாணி;கள் தங்கள் பிளாட்டினக் காலவரலாற்றைச் சேதப்படுத்தி விடக் கூடாதல்லவா? தமிழின உணர்வாளர்களுக்கு ஒரு முன்னோடி தாங்கள். திராவிட பாரம்பரியத்தின் பெருமையினையும் தமிழின் தொன்மையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முன்னோடிகளில் இன்றுவரை உயிரோடிருப்பவர் நீங்கள் மட்டும் தான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய எம் மொழியின் தொன்மைச்; சிறப்புக்களை, அம்மொழியின் மூத்த குடிகளின் சீரார்ந்த வாழ்வின் பண்பாடுகளை உங்கள் எழுத்து மூலமும் பேச்சுக்கள் மூலமும் முரசறைந்து நிறுவியவர் தாங்கள். தமிழுக்குள்ளே அதன் முறையான பிரயோகங்களிலே எத்துணை அழகும் இனிமையும் இருக்கிறது என்று எடுத்துக் காட்டியவர் தாங்கள்.
தமிழ் கொஞ்சும்;
தமிழ் ஆனந்தம் பாடும்;
தமிழ் காதல் செய்யும்;
தமிழ் கோபப்படும்;
தமிழ் இரங்கும்;;
பொங்கும், நெருப்பாய் மாறும், சுவாலையாய் எரிக்கும், எரிமலையாய் வெடிக்கும், தீமையைப் பொசுக்கும்.
இவற்றைத் தங்களின் தமிழ் பிரயோகங்களிலிருந்து நாமறிந்தது. தமிழின் பெயரால் கம்பனை, இளங்கோவை, பாரதியை நாமறிந்ததை விட கருணாநிதியை நாம் அறிந்தது அதிகம்.
தந்தையின் கையைப் பிடித்து தளர் நடையில் ஆரம்பப்பள்ளி சென்று ‘அ,ஆ’ எழுதிப் பழகும் காலத்திலே இலங்கை வானொலியில் ‘மனோகாரா’ திரைப்படத்தின் வசனங்களைக் கேட்டவன் நான். அப்போது ஏதும் புரியாத போதும் தமிழின் மீது தீராக் காதல் கொண்ட எந்தையும் தாயும் மனோகரா திரை வசனத்தைச் சிம்மக் குரலோனின் கர்ச்சனையில்; கேட்டு அதை சிலாகித்துப் பேசும் போது “கருணாநிதி” எனும் பெயரை காதுகளில் வாங்கியவன் நான்.
காலவேகத்தில், விபரம் அறியும் வயதின்போது ‘நானும்’ என்னைப் பெற்றவர்கள் போல் மெய்மறந்து நின்றது உண்டு; தங்கள் வசனங்களைக் கேட்டு.
வெளிப்படையாகச் சொல்வதானால் தங்களது தமிழைக் கேட்டே தமிழ் மீது ‘காதல்’ கொண்டவன் நான்.
தமிழுக்கும் தமிழருக்கும் ஒரே தலைவன் ‘கருணாநிதி’ தான் என என்னளவில் நம்பவும், மற்றவர்க்கு நம்பிக்கையூட்டவும் என்னை முனையச் செய்தது தங்களது தமிழ் தான். தங்கள் மீது கொண்ட பற்றினால் தங்கள் கண்களை அலங்கரிக்கும்(?) விழிக்கண்ணாடி போன்றதொன்றை தந்தையைச் சிரமப்படுத்தி அங்காடிகளில் அலையவிட்டு வாங்கி வைத்திருந்தவன் நான்.
பெரியவனாகி திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றபோதும் – அந்தக் கண்ணாடி மட்டும் புது மெருகு மாறாமல் என் பொக்கிசப்பெட்டியில், பெறுமதியான பேழையொன்றில் தனி சாம்ராஜ்யத்தையே நடாத்திக்கொண்டிருந்தது.
எனது குழந்தைகளுக்குக் கூட அந்தக் விழிக்கண்ணாடியையும், தங்களது புகைப்படத்தையும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது வர்ணத்தொலைக்காட்சியில் (இலவசமாகக் கிடைத்தது அல்ல) வரும் தங்கள் பிரதிமைகளையும் காட்டி – திரைப்படங்களையும் காட்டி ‘கருணாநிதி’ புகழ்பாட தவறியவனல்ல நான்.
அந்த கறுப்புக்கண்ணாடி போர் இடப்பெயர்வுகளின் போது தொலைந்து போனது என் பொக்கிசங்களைப் போலவே; எனதும் என் இனத்தினதும் கனவுகள் போலவே…!!
எனது பொக்கிசங்கள் தொலைந்ததற்கும், எம் கனவுகள் அழிந்ததற்கும் இன்றுவரை இரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன் – விழிக்கண்ணாடி தொலைத்ததற்கு அல்ல. தொலைந்தவற்றை இன்றும் தேடுகின்றேன். “கறுப்புக்” கண்ணாடியையும் கூட. என்ன முரண்நகையாகத் தெரிகிறதா?
ஒருவேளை எனது தேடுதல் வேட்டையின் போது அந்தக் ‘கண்ணாடி’ கண்டுபிடிக்கப்பட்டால்……… மீண்டும் பாதுகாக்க மாட்டேன். மாறாக என் காலில் போட்டு மிதித்து உடைப்பேன். உடைந்த அந்தத் துகள்களை ஒரு பொலித்தீன் பையிலிட்டு எனது வீட்டு வரவேற்பறையில் வைப்பேன், துரோகச்சின்னமாக.
ஒரு தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை நிர்மூலமாக்கிய துரோகத்தின் அடையாளம் அது.
நம்பிய ஈழத் தமிழ் மக்களின் முதுகில் குத்தி குப்புறச் சாய்த்த சுயநல வெறியின் அடையாளம்! ‘காப்பாற்றுங்கள்’ என அவலக் குரலெடுத்துக் கதறி அபயம் கேட்டு நீட்டிய கைகளை குறுகத் தறித்தெறிந்த அரசியற் துரோகத்தின் அடையாளம்!
அண்ணாவை விட, ராஜாஜியை விட, காமராஜரை விட உண்மையில் தாங்கள் பெரும் புத்திசாலி தான்.
பாவம் அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். வங்கி இருப்பில் சேமிப்பேதும் இல்லாமல் செத்துத் தொலைத்தவர்கள் அவர்கள். கருணாநிதியின் சாதுரியம் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்களது சந்ததியினர் இன்று “கோடி”களில் புரண்டிருப்பார்கள்; தங்களது சந்ததியினரைப் போலவே.
8ஆம் வகுப்புக் கல்வியையே இடைநடுவில் முறித்துக் கொண்டு, தற்குறியாக இரயில் (அல்லது பேரூந்து) கட்டணத்தை மட்டுமே சட்டைப்பையில் கொண்டு, ‘பெரியாரின்’ முகாமுக்குத் தொண்டனாக வந்து, – இன்று பல்லாயிரம் கோடி ரூபா மோசடி ஊழலில் பெயர் அடிபடும் அளவுக்கு உயர்ந்து விட்ட உங்கள் “தமிழ்ப்பணி” அவர்களுக்குக் கைகூடி வரவில்லை. உண்மையிலேயே தாங்கள் மேதாவி தான்.
நீங்கள் கொண்ட இலட்சியத்தை அடைந்து விட்டீர்கள் இனியுமென்ன நாடகம்? இனியும் ஏன் வேசங்கள்? உலகளந்த பெருமாளுக்கும், உலக நாயகனுக்கும் ஆகக்கூடியது பத்து அவதாரங்கள் தான். ஆனால் தங்களுக்கு….
எத்தனை முகங்கள்?
மாநில அரசியலில், மத்திய அரசியலில், குடும்ப அரசியலில், வர்த்தக அரசியலில், புலம்பெயர் ஈழத்தவர் அரசியலில், சினிமா அரசியலில், சுயமரியாதை அரசியலில், ஆன்மீக அரசியலில், சிறை அரசியலில், ஊழல் அரசியலில், ஊடக அரசியலில் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். போயின் பக்கங்களும் போதாது; எனது ஞாபகசக்தியும் போதாது. இவ்வாறு ஒவ்வொரு அரசியலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடான, முரண்நகையுள்ள அவதாரங்கள் அவற்றுக்கு பூசிய அரிதாரங்கள்.
இந்த அரிதாரங்கள் நாட்பட்டு, கலைந்து வழிந்து நாற்றமும் வீசத் தொடங்கியதின் பின்பும், மீண்டும் நீங்கள் ‘கதா’யுதத்துடன் மேடையேற இந்தத் தள்ளதா வயதிலும் நினைப்பது தான் சற்றும் இரசிக்க முடியாமல் உள்ளது.
‘உங்கள் அவதாரம் கலைந்து போனது ஈழத்தமிழனின் குருதியிலே’ என்பதை நாமுணர்ந்து பல காலமாகி விட்டது.
‘உங்கள் கூத்து மேடை சரிந்து போனது எங்களது சாவிலே’ என்பதைத் தாங்கள் உணர இன்னும் வெகுகாலம் பிடிக்குமோ?
“விடுதலைப் புலிகளை ஆதரிக்கமாட்டேன், ஆனால் தமிழீழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்” என்று தாங்கள் கூறியபோது, அதிலுள்ள முரண்நகையை தங்கள் மீது கொண்டிருந்த அபிமானம், எம் புலனுணர்வுக்கு மறைத்து விட்டது.
தமிழ்ச்செல்வனின் சாவிற்கு நீங்கள் வரைந்த கவியாஞ்சலி, அதற்கு நாம் இசைப்பாடல் வடிவத்தை ரி.எல்.மகாராஜன் குரலில் வழங்கி, பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கச் செய்து மெய்யுருகிக் கண்ணீர் விட்டோமே…. அப்பொழுதும் நாம் தங்களின் முடைநாற்ற அரிதாரப்பூச்சுக்களைக் கண்டுபிடிக்கவில்லை நாம்.
காலை உணவு அருந்தி விட்டு, அண்ணா சிலையடியில் திடீரென நீங்கள் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம், ஏற்கனவே எம் இதய வாயிலருகில் வீற்றிருந்த உங்களை இதய கர்ப்பக்கிரகத்துக்குள்ளே உங்களை குடியமரச் செய்தது. “அந்தப்புரம்” உட்பட தங்களது சகல பரிவாரங்களும் குளிரூட்டி பொருத்திய சொகுசு பெருவாகனத்துடன் தங்கள் சாவைக் காணக் கால்கடுக்கக் காத்திருக்கும் செய்தி எம்மை உருக வைத்தது.
எறிகணைகளுக்கும், விமானக்குண்டுகளுக்கும், சீறிவரும் கனரகத் துப்பாக்கிச் சன்னங்களுக்கும் அஞ்சி குழந்தை குட்டிகளோடு எம்முடன் இடம்பெயர்ந்து கூடவே வந்த ஆட்டுக்குட்டி, நாய் போன்றவற்றையும் அருகிலே வைத்துக் கொண்டு பதுங்கு குழிக்குள் நாமிருந்த வேளை; காற்றிலே கலந்து வந்த செய்தி தான் தாங்கள் எடுத்த உண்ணாவிரத அவதாரம்.
சக்தியிழந்து செயலற்றிருந்த மின்கலங்களுக்கு பற்களால் கடித்தும், கற்களால் தட்டியும் அவற்றின் உருளை வடிவத்துக்கு நவீன சிற்பங்களைப் போல வினோதமான நெளிந்த வடிவங்கள் கொடுத்து, சற்று உசுப்பி அவை மூலம் வானொலியில் வரும் தங்கள் செய்திக்காக செவிமடுத்துக் காத்திருந்தவேளை “ஏதாவது நடக்கும்” “நல்ல செய்தி வரும்” “எம்மை காப்பார் உலகத் தமிழர் தலைவர்” என நம்பிக்கையுடன் நாம் காத்திருந்த வேளை….
வந்ததையா நற்செய்தி! காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நடந்த மிகத் தீவிரமான சாகும் வரையான உண்ணாவிரதப் போருக்கு மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உருவிலே வந்தது தீர்வொன்று.
“கனரக ஆயுதப்பாவனை நிறுத்தம்” “போர் நிறுத்தம்” “இனி ஈழத்தமிழர் வாழ்வில் விடிவு”
“தமிழக முதலமைச்சரின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவு”
பலவீனமான மின்கலத்தால் முனுமுனுப்பாகக் கேட்ட வானொலியின் அறிப்பில் கூட திடீரென சக்தி கூடியதான உணர்வு எமக்கு “வெற்றி….வெற்றி….. தமிழர் தலைவன் கருணாநிதி எம்மைக் காப்பாற்றி விட்டார்.”
குதூகலத்துடன் கூவியபடி குஞ்சு குருமான்களுடன் பதுங்குகுழியிலிருந்து பாய்ந்து வெளியே வந்தோம்.
ஆடவேண்டும்…… பாடவேண்டும்…… மனம் மகிழ்ச்சியில் துள்ள ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள……
வந்ததையா எறிகணைகள்…..
கொள்ளை கொண்டு போனதையா எம்மவர் உயிர்களை.
தொடர்ந்தும் இந்திய வனொலியில் “கருணாநிதி ஈழத்தமிழரைக் காத்து அருள்பாலிக்க வந்த தேவதை. வெற்றி வாகை சூடி ஈழத்தமிழர் தலையிலே முடி சூட வந்த கருணைக்கடல்.”
இப்படியாக……… இப்படியாக……… தொடர் புகழாரங்கள்!
நாம் கண்ணீரில் மிதந்தோம், இந்த நயவஞ்சகத்தை எதிர்த்துக் கருணாநிதி எனும் வீரத்தலைவன் தன் போர்க்;கலத்தைத் தூக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தோம்.
அன்றைய தினம் மட்டும் காவு கொள்ளப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேலாகும்.
ஆனால் அவ்வளவு தான்.
நம்பிக்கை கானல் நீரானது. கருணாநிதியின் முடிவு – மத்திய அரசின் முடிவைச் சார்ந்ததே என்றானது. ஆவியே வெந்து போனது.
எம்மால் என்ன செய்ய முடியும்?
கருணாநிதி நினைத்திருந்தால்; மத்திய அரசில் அவரது கட்சிக்கிருந்த பலத்தைக் கொண்டு ஈழத்தமிழரைக் காத்திருக்கலாம்.
அவர் தம் வாழ்வியல் உரிமைக்கான அரசியல் வேணவாவைப் பேணி இருக்கலாம். எம்மைக் காக்கும் கவசமாக தமிழ் நாட்டையே மாற்றி இருக்கலாம்.
எனினும் நாம் நம்பிக்கை இழக்கவில்லை. “தமிழகம் தொப்புள் கொடி உறவு. கருணாநிதி அதன் முதலமைச்சர். அவரது தலைமையில் எம்மை மீட்க தமிழகம் திரளும். எம்மைக் காத்து அணைத்து ஆறுதல் சொல்ல ஓடோடி வருவார் உலகத் தமிழர் தலைவன்” என இன்னும் நம்பினோம். அவரது மௌனம், எம்மைக் காக்கும் இராஜதந்திரமாக இருக்கலாம் எனும் ஒர் நப்பாசை.
“ஓடினோம்…ஓடினோம், வாழ்க்கையின் ஒரத்துக்கே ஒடினோம்.” அந்த ஓரம் தான் முள்ளி வாய்க்கால் ‘கடல் – ஒரம்’. பாராசக்தியின் பார்வதிக்காவது நியாயம் கேட்க குணசேகரன் என்ற அண்ணன் இருந்தான். அவன் பக்கம் பக்கமாக வசனம் பேச நீதிமன்றமும் இருந்தது. கேட்க நீதியரசரும் இருந்தார்.
எனினும் எமக்கு…?
“தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா….. ‘செந்நீரால்;;’ காத்தோம்….. கருகத் திருவுளமோ….”
ஏக்கத்துடன் வங்கக்கடலின் வானம் தொடு எல்லையை, அந்த நீண்ட விளிம்பைப் பார்த்திருந்தோம். ஏமாற்றம்! எம்மைக் காக்க எவரும் வரவில்லை. எம் குரல் கேட்கவும் எந்த நீதிமன்றமும் தயாராக இருக்கவில்லை.
356 என்ற சட்டப் பிரிவின் மீதான பயமா இது?
கலைஞரே! உங்களது சிலவருட பதவி நாற்காலிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு தேசிய இனத்தின் அழிவுக்குத் துணை போக உங்களால் எப்படி முடிந்தது?
அன்று பதவிகளைத் தூக்கி எறிந்து இந்திய அரசுக்குப் பாடம் புகட்டி எம்மைக் காத்திருந்தால் இன்று நீர் அல்லவோ உலகத் தமிழர் தலைவர். இப்படி அவமானகரமான தோல்விகளையும் இனத்துரோகி என்ற அவப்பெயரையும் சந்திக்க நேர்ந்திராது அல்லவா!
ஆட்சிக் கதிரையை மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதி நிலையையே இழக்க வேண்டிய அவலநிலை வந்திராது அல்லவா?
தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றிலேயே அறிஞர் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க என்ற புரட்சிக்கட்சி, இத்துணை தாழ் நிலைக்கு என்றுமே சென்றதில்லை.
‘தானாடாது விட்டாலும் தன் தசை ஆடுமாமே…’ வன்னிமண்ணின் இடப்பெயர்வு அவலங்கள் காணொளி இறுவெட்டுக்களாகத் தமிழ்நாட்டை அடைந்த போது தமிழகமே பொங்கி எழுந்ததாமே!
அப்போதும் கூட உங்கள் கண்ணில் கூட ஈரக்கசிவு ஏற்பட்டதாமே…?
அப்போதும் கூடத் தங்கள் கபட மூளை அந்த உணர்வெழுச்சிகளை உங்கள் குடும்ப, அரசியல் நலன்களுக்கான முதலீடுகளாக்கிக் கொண்ட சாமர்த்தியம் வேறு எவருக்கு வரும்?
கல்விச்சமூகம், சினிமாத்துறை, தொழில்துறைகள் எனப் பல்வேறு தரப்பட்டத் தமிழ்நாட்டு உறவுகளின் உண்மையான அக்கறையைக் கையாள, அவர்களின் பிரதிநிதியாக மீண்டும் ஒரு அரிதாரப்பூச்சு.
பதவி விலகல் கடித நாடகங்கள்.
கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்ட நாடகங்கள்.
இப்படி எத்தனை….. எத்தனை…..?
முத்துக்குமாரன் முதலானோரின் அக்கினிச் சங்கமங்கள் கூட உங்கள் அரசியல் கபட நாடகத்துக்கு உரமாக்கப்பட்டன. இத்தனை போராட்டங்களும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு விடிவினைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக மத்திய அரசில் கருணாநிதியின் அரசியல் சார்ந்த சலுகைகளையே வென்றுகொடுத்தன. சில வருடங்கள் ஆட்சியையும் தாக்குப்பிடித்துத் தக்க வைக்க முடிந்தது.
தங்கள் நாடகங்கள் முடியுமுன்னே பூசிய அரிதாரப்பூச்சுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இன்று சொறிந்து கொண்டிருக்கும் நிலையில் நீங்கள்.
கட்டபொம்மனுக்கு எட்டப்பன்! பண்டாரவன்னியனுக்குக் காக்கை வன்னியன்! ஈழத்தமிழருக்குக் கருணாநிதியா…?
எம்மை வீழ்த்தும் கூட்டுச்சதிக் கூட்டாளிகளில் தாங்களும் ஒருவன் என்பதை நாம் நன்கு அறிவோம்.
எனினும் அந்தச் சதி அம்பலமானதைப் பூசி மெழுக, நீங்கள் சொன்ன காரணங்கள் இருக்கிறதே; அப்பப்பா…. பொய்யின் மொழிப்புலவர் தாங்கள்.
கனிமொழியைச் சிறைக்கூண்டுக்குள் சந்தித்தபோது நா தழுதழுத்ததாமே, கண்ணரும் கசிந்ததாமே.
ஊழல் செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாக்களைக் கபளீகரம் செய்த குற்றச்சாட்டில் அடைக்கப்பட்ட கனிமொழியின் தந்தைக்கு மகளிருந்த கம்பிக்கூண்டு கண்ணீரை வரவழைத்தது என்றால்…..
இங்கே இந்த மண்ணிலே வாழும் உரிமையைக் கேட்டதால் கொத்துக் கொத்தாக மடிந்து போன பிள்ளைகளின் தாய் தந்தையரின் கண்களில் என்ன வரும்…?
இதை உணராதவர் போல், ஒன்றுமே தெரியாதவர் போல், ‘ஈழத்தமிழர் வீழ்ச்சிக்குச் சகோதர இயக்க மோதல்களே காரணம்’ என நாம் எப்போதோ மறந்து போனவற்றை இன்று ஞாபகம் வைத்துப் பேசும் முன்னாள்; முதல்வர் கருணாநிதி – அந்தச் சோற்றுக்குள்ளே தன் துரோகம் எனும் முழுப்பூசனியை மறைக்க நினைப்பது தான் வேடிக்கையானது.
இந்த நிலையில் மீண்டும் சில நாடகங்களின் அறிவிப்புகள்.
“தமிழீழம்
“டெசோ
என்ன இவை….? வரலாற்று நாடகங்களா..?
இருபத்தோராம் நூற்றாண்டில் மட்டுமல்ல் இனி வரப்போகும் சில நூற்றாண்டுகளுக்கும் இதுவே பெரும் நகைச்சுவையாக இருக்க முடியும்.
உண்ணாவிரத நாடகத்தைப் போல் ஒரு ‘ரெசோ’ மாநாட்டு நாடகம். உச்சக்கட்டக் காட்சியாக தமிழீழத் தீர்மானம். பரபரப்பாக ஒத்திகை பார்க்கப்பட்ட இந்த நாடகம் எதை இலக்காகக் கொண்டது என்பதை யார் அறியாவிட்டாலும் ஈழத்தமிழர் நாம் அறிவோம். அதனால் நாம் பரபரப்படையவில்லை….. சிலிர்க்கவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.
“உண்ணாவிரத” நாடகத்தில் வந்தது போலவே உச்சக்கட்டக் காட்சி. “மத்திய அமைச்சர் சிதம்பரம் வருகை!”
அதே நாடகத்தில் வந்தது போலவே இறுதி முடிவு….. பிசுபிசுப்பு…..! தாங்கள் தமிழீழம் என்று முணுமுணுக்கும் போதே எமக்குப் புல்லரிப்பை ஊட்டவில்லை. மிகப்பெரும் கோமாளித்தனமாகவே தெரிந்தது.
முடிவு எப்படியிருக்கும் என்று புரிந்ததால் மயிர்க் கூச்செறிவு எதுவுமில்லை.
அதிலும் உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால்;; ஈழத்தமிழர் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் பற்றித் தாங்கள் பேசுவது! அக்கறை காட்டுவது! அது மட்டுமல்ல உங்களது நேர்மையை நிரூபிக்க எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் அழைத்திருப்பதாகச் சொன்னது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா கலைஞரே….? உங்களை விடப் பெரிய நடிகர்கள்; எமது அரசியற் தலைவர்கள். அவர்கள் எம்மைக் கைவிட்டு நீண்ட காலமாகிவிட்டது தெரியுமா….?
உங்களது மாநாட்டில் அவர்கள் பங்குபற்றுவது இருதரப்புக்கும் அவரவர் தரப்பு மக்களை ஏமாற்ற உதவக்கூடுமே தவிர எமது வாழ்வில் எந்த விடிவையும் கொண்டு வந்துவிடப் போவதில்லை.
நாமும் கட்டப்பட்டு கடலில் தான் போடப்பட்டுள்ளோம்….. எம்மால் கட்டுமரங்களாக மிதக்க முடியவில்லை. எந்தக் கட்டுமரங்களும் எம்மை கரைசேர்க்க வரவில்லை.
இதுவரை காலமும் இடம்பெயர்ந்து அல்லலுறும் எமக்காக தங்கள் ‘கஜானா’ விலிருந்து ஒரு ரூபாய் கூட கொடுக்க மனம் வராதவர் நீங்கள். தமிழைச் செம்மொழியாக்கி விட்டுத் தமிழனைக் கொன்றொழித்தவர் நீங்கள். உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இதய சுத்தியுடன் வாருங்கள். எமது காயங்கள் ஆற்றமுடியாதவையானாலும் எம்மைத் தேற்றலாம். உங்கள் உண்மையான மனமாற்றம் எமது இனத்தின் மீளெழுச்சிக்கு, ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உதவுமேயாக இருந்தால் – கடந்தகாலத்தை மறக்க முடியாவிடினும் கூட மன்னிக்கவாவது செய்யும் மனிதத்துவம் இன்னும் எங்களிடம் இருக்கிறது.
தயவுசெய்து எம்மைப் பகடைகளாக்கி விளையாடாதீர்கள்.
ஏனெனில் நாம் மனிதர்கள்.
எங்கள் வாழ்வுரிமைக் கோசத்தை உங்கள் மூலதனமாக்காதீர்கள்.
ஏனெனில் அது எமது இனத்தின் இருப்பு.
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால்……
எம்மை வாழ விடுங்கள்.

இவ்வண்ணம்
ஈழத்தமிழ் அகதி.



http://thiru2050.blogspot.in/2012/08/blog-post_2067.html

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Monday, May 21, 2012

உறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறும் ஈழத்தமிழர்கள் - தினமணி

உறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறும் ஈழத்தமிழர்கள் - தினமணி
[ சனிக்கிழமை, 19 மே 2012, 00:36 GMT ]
ராஜபக்சவுக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒருவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஆகிவிட முடியுமா, முடியாதல்லவா?

ஆனால், சரத் பொன்சேகா விஷயத்தில் மட்டும் இப்படி யாரும் யோசிக்கவில்லை.

இப்போது ராஜபக்சவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையேயான மோதல் நாடகத்துக்கு ஒருவழியாக சுபம் போடப்பட்டிருக்கும் வேளையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவராகிவிட்டார் அவர்.

அதாவது, தமிழ் இனப்படுகொலையை இறுதிவரை முன்னின்று நடத்தி எல்லா வகையான மனித உரிமை மீறல்களையும் செய்த பொன்சேகா, இப்போது தியாகி அளவுக்குச் சித்திரிக்கப்படுகிறார்.

தமிழர் பகுதியைச் சுடுகாடாக மாற்றிய பெருமைக்குரிய இவரைத்தான் அதிபர் தேர்தலில் சில தமிழ் அமைப்புகள் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கடைசிநாள் வரை யுத்தகளத்தில் தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, திடீரென ராஜபக்சவுக்கு எதிராகத் திரும்பி, படுகொலைகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காட்டிக் கொள்ள முற்பட்டவர் பொன்சேகா.

கோத்தபயவும் பிறரும் உத்தரவிட்டதால் தான் சரணடைய வந்தவர்களை ராணுவத்தினர் கொன்றார்கள் என்று கூறி தப்பிக்க முயன்றார்.

இதையெல்லாம் தமிழர்கள் நம்பினார்களோ தெரியாது. ஆனால், அரசியல் கட்சிகள் நம்பின.

ராஜபக்சவை பொன்சேகா ஏன் எதிர்த்தார்? ராஜபக்ச சகோதரர்கள் மீது பொன்சேகாவுக்கு என்ன காழ்ப்பு? பொன்சேகா அதிபராகியிருந்தால் தமிழர்களுக்கு என்ன செய்திருக்க முடியும்?

பொன்சேகா சிறையில் இருந்தபோது கருணை வேண்டுமா என ராஜபக்ச அடிக்கடி கேட்டுக் கொண்டது ஏன்?

இதில் எந்தக் கேள்விக்கும் உறுதியான பதில் தெரியாமல் ஒருவித உத்தேசக் கணிப்பில்தான் பொன்சேகாவுக்கு தமிழ் இயக்கங்கள் ஆதரவளித்தன.

தங்களது கோபத்தால் பொன்சேகாவை பொசுக்க வேண்டியவர்கள்கூட, அவர் அதிபரானால் தமிழினத்துக்கு மறுவாழ்வு கிடைத்து விடும் என்று நம்பும் அற்ப நிலை ஏற்பட்டது.

அரசியல் தந்திரோபாயம், மக்களைப் பாதுகாக்கும் அக்கறையில் எடுக்கப்படும் நடவடிக்கை என்றெல்லாம் நியாயப்படுத்தினாலும் கூட, பொன்சேகாவை ஆதரித்தது அருவருக்கத்தக்க நிலை என்பது எல்லா தமிழர்களின் மனசாட்சிக்கும் தெரியும்.

நாட்டைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தார் என்று யார்மீது குற்றம்சாட்டினார்களோ அதே பொன்சேகாவை விடுவிப்பதற்கு ராஜபக்ச குடும்பம் ஓடோடி வருகிறது.

முன்னர் ராஜபக்ச கேட்டுக் கொண்டது போல, பொன்சேகாவோ அவரது குடும்பத்தினரோ கருணை கோராதபோது, வலியவந்து விடுவிப்பதற்குப் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தமோ, வேறு எதுவோ இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால், பொன்சேகாவுக்கும் - ராஜபக்சவுக்கும் இடையே எப்போதும் ஒரு பிணைப்பு இருந்து வருகிறது என்பது மட்டும் உண்மை.

இனப்படுகொலையில் உறவுகளை இழந்தவர்களால் பல விஷயங்களில் உறுதியான முடிவெடுக்க முடியவில்லை.

ராஜபக்ச அரசையும், தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் எப்படி அணுகுவது என்பதில்கூட ஒருமித்த கருத்து இல்லை.

அவ்வளவு ஏன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லை இலங்கை அரசு கூறுவது போல நந்திக்கடல் பகுதியில் கிடைத்தது அவரது உடல்தானா என்கிற குழப்பத்துக்கே இன்னமும் விடை கிடைக்கவில்லை.

இறந்துவிட்டார் என்று அஞ்சலி செலுத்தவும் முடியாமல், உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக்கை வைக்கவும் முடியாமல் தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருபக்கம் போர்க்குற்றங்களுக்காக ராஜபக்சவையும் அவரது சகோதரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர் அமைப்புகள் போராடி வருகின்றன.

இன்னொரு பக்கம், இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியா சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்படுகின்றன; வீட்டுச் சாவிகளை மகிழ்ச்சியுடன் பெறும் தமிழ்ப்பெண்களின் படங்கள் ஊடகங்களில் பிரசுரமாகின்றன.

"மேற்கூரை இன்னும் உயரமாக வேண்டும், புகைபோக்கி பெரிதாக அமைக்க வேண்டும்' என்று அவர்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகின்றன.

இதையெல்லாம் பார்த்தால், நிவாரணப் பணிகள் முக்கியமா, நீதி பெறுவது முக்கியமா என்று குழப்பம் எழுந்து விடுகிறது.

சுஷ்மா ஸ்வராஜ் களுத்துறைக்குப் போய் இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்பில் உருவான ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். கூடவே "இங்கு யாரும் தனி ஈழம் கேட்கவில்லை' என்றும் கூறுகிறார்.

உடன் சென்ற தமிழ்த் தலைவர்களும் "ஆமாம்' என்கின்றனர். சில நாள்கள்வரை சுஷ்மாவின் நிலைப்பாட்டைத் திட்டித் தீர்த்த ஊடகங்கள், பிறகு "ஆளுத்கம - களுத்துறை இடையே ரயில்பாலங்கள் புனரமைக்கப்படுவதால் சில நாள்கள் ரயில்கள் இயங்காது' என்று சேவைச் செய்தி வாசிக்கக் கிளம்பி விடுகின்றன.

"இலங்கையிலுள்ள தமிழர்களே ஈழம் கேட்காதபோது...' என்கிற வாதம் தமிழர்கள் மத்தியில் நுழைந்துவிடுகிறது.

இப்போதைக்கு தனி ஈழம் தேவையா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

ஏற்கெனவே இருக்கும் தடுமாற்றங்களுக்கு மத்தியில், யுத்தத்தில் கொன்றது போக எஞ்சியிருந்த தமிழர்களின் வாக்குகளைப் பெற்ற பொன்சேகா இப்போது விடுதலையாகிறார்.

இவர் ரணிலுடன் சேர்ந்து புதிய அரசியல் அவதாரம் எடுக்கலாம். அல்லது ராஜபக்சவுடன் போய் ஒட்டிக் கொள்ளலாம்.

ஒருவேளை ராஜபக்சவின் மோசடிகளை அம்பலப்படுத்துவேன் என்று கூடச் சூளுரைக்கலாம்.

என்னவாக உருவெடுத்தாலும், தமிழர்களைக் கொன்றொழித்த அவரே, ஐ.நா.விலும், சர்வதேச நீதிமன்றத்திலும் ராஜபக்சவுக்கு எதிராக நின்று நீதியைப் பெற்றுத் தருவார் என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது.

ராஜபக்சவை எதிர்த்தாலும், எதிர்க்கா விட்டாலும் மே 18 என்பது பொன்சேகாவுக்கு வெற்றி நாள்.

தமிழர்களுக்கு அதுவே இனப்படுகொலை நாள்.

இந்தப் புரிதல் இல்லாமல் தமிழர்களின் ரத்தக்கறை படிந்த அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு நீதியைத் தேடிச் செல்வது, முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

வழிமூலம் - தினமணி

Wednesday, April 25, 2012

கலைஞர் அய்யா... தயவு செய்து பேச வேண்டாம்! சிரித்தபடி கேட்கும் சீமான் - ஜுவி பேட்டி


தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது. 'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். 
''ஆற்ற முடியாத காயங்​களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீ​ரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவரு​டைய திடீர் 'தமிழீழஆர்​வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ?
இறுதிப்போர் நடந்துகொண்டு இருந்த​போது, 'ஈழம் இனி சாத்தியம் இல்லைஎன பேசினீர்கள். 'மத்திய அரசின் நிலைப்​பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடுஎன்றீர்கள். 
ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாகச் சொன்னார். 65 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், மிகப்பெரிய வலிமையான கட்சியை நடத்தும் கலைஞரின் முழக்கமே 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சிஎன்பதுதான். அதையே அவரால் அடைய முடியவில்லை. இந்தியாவிலேயே இந்த நிலைமை என்றால், இலங்கை ஜனநாயக நாடே இல்லை. அது, பவுத்த மதத் தீவிரவாத நாடு. அங்கு ஒரு சிங்கள பவுத்தனைத் தவிர யாருமே தலைமை அமைச்சராக வரமுடியாது. அங்கே எப்படி மாநில சுயாட்சி கிடைக்கும்? இதை உணராத கலைஞர், மாநில அதிகாரம் பெற வேண்டும் என்று ஈழத் தமிழனுக்கு அறிவுரை சொன்னார். இப்போது, 'ஈழத்தை அடையும் வரை ஓயமாட்டேன்என்று சொல்கிறார். நியாயப்படி, அவர், 'ஈழத்தை அழிக்கும் வரை ஓயமாட்டேன்என்றுதான் சொல்லி இருக்க வேண்டும்!
அண்ணன் திருமாவளவன், சென்னையில் ஈழஆதரவு மாநாடு நடத்தியபோது, அதற்கான விளம்பரங்களில் 'ஈழம்என்ற வார்த்தையைக் காவல்துறையைக் கொண்டு அழித்தவர் நீங்கள். அதை மறைக்க முடியுமா? ஈழம் என்ற சொல் இருக்கக் கூடாது என்​பதற்காக, இலங்கைத் தமிழர்... இலங்கைத் தமிழர் என்று பேசி​வந்தவர்.  தொடர்ச்சியாக, என்னை ஐந்து முறை சிறைப்படுத்தினீர்களே, நான் என்ன பேசினேன்?
இன்றைக்கு நீங்கள் பேசியிருப்பதைத்தானே, அன்றைக்கு நான் பேசினேன்? 'இறுதிப்போர் காணொளி காட்சியைப் பார்க்க முடியவில்லைஎன்கிறீர்கள். இந்தக் காணொளிக் காட்சியை, அச்செடுத்து, வீடுவீடாகக் கொடுத்த​போது, கொடுத்தவர்களைத் தேடித்தேடி சிறைப்​பிடித்தீர்களே ஏன்? நீங்கள் இன்றைக்குச் சொல்லும் ஈழ விடுதலைக்காகத்தானே தம்பி முத்துக்குமார் தீக்குளித்தான்? ஏன் நீங்கள் அவனுக்காக ஒரு இரங்கல்கூட தெரிவிக்க​வில்லை? அவன் மரணத்துக்காகத் திரண்ட இளைஞர்களின் எழுச்சியை, கல்லூரி விடுதிகளை மூடி ஏன் அடக்கினீர்கள்? பெரும் ஊடகம் வைத்திருக்கிற நீங்கள் அதைப்பற்றி சிறு செய்திகூட அதில் வெளியிடவில்லையே, ஏன்? இன்றில்லாவிட்டாலும் நாளை மலரும் என்று நீங்கள் சொல்லும் ஈழத்துக்காகத்தானே, வழக்கறிஞர்கள் போராடி​னார்கள்? ஏன் அவர்களைக் காவல்துறையை விட்டு வெறிபிடித்த மாதிரி அடித்தீர்கள்?
'ஈழம் அடையும்வரை ஓயமாட்டேன்என்று, என் தலைவர் பிரபாகரன், அந்த ஈழ மண்ணில் கருவியோடு நின்றுகொண்டு இருந்தபோது, ஏன் நீங்கள் சொல்லவில்லை? பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் சிந்திய ரத்தம் வீண்போகாது என்று இப்போது சொல்கிற நீங்கள், 'மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டினதைவிட வேற காரியத்துல கவனம் செலுத்தியிருக்கலாம்என்று அப்போது சொன்னது ஏன்?
'தேவையில்லாமல் ஈழத்தைப் பற்றிப் பேசி தமிழகத்தில் வீணாக அரசியல் செய்கிறார்கள்என நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பேசினீர்களா, இல்லையா? அந்த மக்களின் மீது இவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டிருக்கிற நீங்கள், போர்க்குற்ற வீடியோவை உங்களின் ஊடகத்தின் மூலம் வெளியிடாதது ஏன்? இறுதிப் போரிலே, எதிரியால் உருக்குலைக்கப்பட்ட தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழகம் முழுவதும் குருவி சேர்த்ததுபோல, அத்தியாவசிய மருந்துப் பொருட்களைச் சேகரித்தார்களே, தமிழ் இளைஞர்கள். அவர்களை எல்லாம்  வேட்டையாடி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்தீர்களே, ஏன்?
'சிங்களர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்​கூடாதுஎன்று அப்போது  சொன்னீர்கள். இன்று, நீங்கள் ஈழத்துக்காகப் பேசுவதற்கு கோத்தபய ராஜ​பக்ஷே கோபப்படுகிறாரே?
ஈழத் தமிழர்களுக்காக கண்ணீராக வருகிறது என இன்று சொல்கிறீர்களே. அன்று இறுதிப் போரில் தமிழ்க் குழந்தைகள் கரிக்கட்டையாகக் கிடந்த படங்கள் வரும்போது, பத்திரிகையின் அதே பக்கங்களில், உங்கள் பிள்ளை மதுரையில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய படமும் வந்ததே ஐயா? மறக்க முடியுமா எங்களால்? இன்றும் நா கூசாமல் சகோதர யுத்தம் என்று பேசுகிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் நடப்பது என்ன அன்பு முத்தமா? அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒன்றாக இருக்க முடியுமா? எம்.ஜி.ஆரை ஏன் நீக்கினீர்கள்? வைகோவை ஏன் நீக்கினீர்கள்?
ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.
இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?

- இரா. தமிழ்க்கனல்


Monday, March 26, 2012

கமலா ஹசன் வரிகள்

போர் நல்ல முறை அல்ல என்பது உலகு அறிந்த விஷயம்
அஹிம்சை நல்லது என்பது இந்திய உணர்ந்த விஷயம்
இருந்தாலும் உரிமைகளுக்கு உத்திரவாதம் இல்லாத பொது தீவிரவாதம் பிறந்தே தீரும்...
நாளை சுதந்திரம் என்று ஒன்று கிடைக்கும் பொது தீவரவாதிகளை தியாகிகள் என்று சொல்வார்கள்..

Above quote is not said by any leading politician,freedom fighter or leader..
WORDS FROM DR.KAMALHAASAN.HE IS NOT UNDER A CIRCLE CALLED "HERO OR CINE CELEBRITY"

Hit like and share f am true..

Sunday, March 18, 2012

Ram journalism faces criticism in JNU for pro-Sri Lanka bias, endorsing genocide

Ram journalism faces criticism in JNU for pro-Sri Lanka bias, endorsing genocide

[TamilNet, Thursday, 15 March 2012, 06:04 GMT]
Activists of Delhi Tamil Students’ Union, Democratic Students Union, Students for Resistance and other common students raised slogans against N. Ram accusing him of being a ‘media fascist’ and ‘a stooge of Rajapaksa’ at a public meeting in JNU after his reply to a question on The Hindu’s role in whitewashing the Sri Lankan state genocide of the Eezham Tamils, wherein he had extensively blamed the LTTE. The meeting on ‘Paid news and media ethics’ was organized at JNU on Wednesday by the Student’s Federation of India, which is the students wing of the CPI(M). The fact that N.Ram and The Hindu have unethically manipulated news to cover up the war crimes of Colombo makes them complicit in the genocide committed on the Eezham Tamils, a Tamil Nadu research scholar in JNU told TamilNet.

Mr. Ram was talking about journalist coverage in India elections and during the US’ wars and on the theme of media ethics, referring greatly to Noam Chomsky’s Manufacturing Consent, a classic on understanding how news is manipulated and on editorial bias.

An activist of the DTSU raised a question on why Ram, who had talked about journalists being attacked in Palestine and Iraq, had nothing to say about media freedom and assault on journalists in Sri Lanka, including murder of Sinhala journalist Lasantha Wikramatunga.

When he has been silent about this, used his newspaper to support the genocidal war on the Eezham Tamils, called a visit to the IDP camps in Vavuniya an uplifting experience when they were reality in concentration camps, how could he talk about the ethics of journalism, the activist further asked.

As a reply, N. Ram had said that those who criticize the GoSL do not criticize the LTTE [an argument highlighted by Mahinda Rajapaksa too nowadays]. After criticizing the ‘ruthlessness’ of the LTTE in his reply, he added a line that had the GoSL committed excesses, he would criticize that too.

When an activist of the DSU observed that his bias was obvious in his reply itself, where he had criticized the LTTE for ten minutes, but had only one line to say about the GoSL, and whether this was his idea of media ethics, Ram fumbled for a response. At this, students in the audience remarked loudly that ‘this is why they gave you Sri Lanka Ratna’ and shouted ‘shame’.

Student organizations and common students then raised slogans calling him a ‘media fascist’ and a ‘stooge of Rajapaksa’.

“More than anyone else, N. Ram and The Hindu know what happened in Vanni was genocide. They had access to not just the highest rungs of power, but their reporters were also in the field, with the invading Sinhala army. The fact that they have unethically manipulated news to cover up all the war crimes which are now being exposed by outlets like Channel 4, makes them complicit in the genocide of the Eezham Tamils,” a DTSU activist in JNU told TamilNet.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34994

Saturday, March 17, 2012

முடிந்தால் இவருக்கு ஒரு நன்றிக்கடிதம் எழுதுங்கள் :

முடிந்தால் இவருக்கு ஒரு நன்றிக்கடிதம் எழுதுங்கள் :

Subject : Sri Lanka's Killing Fileds

Dear Mr.Jon Snow,

Thanks for broadcast as You have done a great service humanity.

Please continue your efforts for the hapless people who deserve justice!

thanks,


Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished

In 2011 Channel 4 exposed damning evidence of atrocities committed in the war in Sri Lanka. Jon Snow presents this powerful follow-up film, revealing new video evidence as well as contemporaneous documents, eye-witness accounts, photographic stills and videos relating to how exactly events unfolded during the final days of the civil war.

The film forensically examines four specific cases and investigates who was responsible.

The four cases include: the deliberate heavy shelling of civilians and a hospital in the 'No Fire Zone'; the strategic denial of food and medicine to hundreds and thousands of trapped civilians - defying the legal obligation to allow humanitarian aid into a war zone; the killing of civilians during the 'rescue mission'; and the systematic execution of naked and bound prisoners - featuring new chilling video footage of a 12-year-old boy who has been brutally executed.

This painstaking investigation traces ultimate responsibility up to the highest echelons of the chain of command, asking questions of both President Rajapaska and his brother, the Defence Secretary.

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3303398

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8dtrfpVJJWg

http://www.youtube.com/watch?v=8dtrfpVJJWg


Friday, March 16, 2012

Curse of Human Brain

Mostly we have, follow two rules. One is for us and one is for others. And one of the curse of human brain is we have justification for the rules which is for our own. And we have justification for the rules which is for others. And we also have justification for the rules which is for others.

We use to set the brain from the childhood and Train it subsequently which leads to “Practice” in one’s life. This is of 3 steps 1) Setting of brain 2) Training which results in Practice in once’s life.

I pray in god (if he has only one rule and he also follows it), to think about the people to have one rule.

Before justifying things , please think about own brothers, sisters, childrens and think about humans and think about living things . ie justify by own not justification of others.

http://thaaitamil.com/?p=12314

http://thaaitamil.com/?p=12212

http://thaaitamil.com/?p=12036

http://thaaitamil.com/?p=12027

http://thaaitamil.com/?p=12011

http://thaaitamil.com/?p=11947

http://thaaitamil.com/?p=11044

http://thaaitamil.com/?p=3983

http://www.youtube.com/watch?v=8dtrfpVJJWg&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=Rz_eCLcp1Mc

http://www.youtube.com/watch?v=fK9q_htV6HM&feature=related

http://www.youtube.com/watch?v=b7FyjqnUriU&feature=related

http://www.youtube.com/watch?v=DpzmgJPwPII&feature=related

Channel 4 on sri lanka war crimes Nov 2010

http://www.youtube.com/watch?v=i_IV4JHAo5E&feature=related

Sri Lanka's Killing Fields Part 2 of 4.mpg

http://www.youtube.com/watch?v=htBhT90Azeg&feature=related

Sri Lanka's Killing Fields Part 3 of 4.mpg

http://www.youtube.com/watch?v=b7FyjqnUriU&feature=related

Sri Lanka's Killing Fields Part 4 of 4.mpg

http://www.youtube.com/watch?v=WRo0WCTJOWk&feature=related

Exclusive: New Sri Lanka 'war crimes' evidence

http://www.youtube.com/watch?v=jZC1uclgbc0&feature=related

war crime srilanka Movie_0003.wmv

http://www.youtube.com/watch?v=ThLknLhOYsU&feature=related

Sri Lanka War Crime Crucial evidence analysis on Tamil masscres.mp4

http://www.youtube.com/watch?v=tuxi-WHsklk&feature=related

www.justice4tamil.wordpress.com


Last days of Sri Lankan genocide of Tamils , Sri Lankan military became bunch of animals and staged an ugliest crime against humanity. The president Mahinda and his brother defence Secretary Gottab...
.

http://salem-news.com/articles/march022012/lanka-genocide-tk.php
A Very Uncivil War Ghastly Images- Gross Detail and Denial of Sri Lanka's Genocide - Salem-News.Com
www.salem-news.com
In the Sri Lanka Tamil Genocide, civilian refugees were routed into so-called 'safe zones' - where the Sri Lanka Army just smashed people into pieces.This is just one part of the terrible Sri Lanka civil war under a microscope with the United Na.....
.
Sex Abuse and Murder in Sri Lanka- New Photos Emerge - Tim King - Salem-News.com
Be forewarned, that the photos of war crime and sex abuse victims shown below, are shocking and gruesome.
http://salem-news.com/articles/march082012/lanka-death-photos-tk.php?message=1

http://justice4tamil.wordpress.com/2012/03/07/new-war-crimes-pictures-emerge/

New War crimes Pictures emerge!
http://justice4tamil.wordpress.com


Last days of Sri Lankan genocide of Tamils , Sri Lankan military became bunch of animals and staged an ugliest crime against humanity. The president Mahinda and his brother defence Secretary Gottab...
.


http://salem-news.com/articles/march022012/lanka-genocide-tk.php
A Very Uncivil War Ghastly Images- Gross Detail and Denial of Sri Lanka's Genocide - Salem-News.Com


www.salem-news.com


In the Sri Lanka Tamil Genocide, civilian refugees were routed into so-called 'safe zones' - where the Sri Lanka Army just smashed people into pieces.This is just one part of the terrible Sri Lanka civil war under a microscope with the United Na.....
.


Where is the Justice???