Friday, February 13, 2009

இறப்பது இந்தியர்களா ? தமிழர்களா ?

அதிகம் பேசவும் தேவை இல்லை விளக்கவும் தேவை இல்லை. கேள்வி ஒன்றே போதுமானது. ஆனால் ஆதங்கம் விடுவதா இல்லை என்ன செய்வது ?. வேறு மாநிலத்தில் வாழும் என்னைப்போலவர்களிடம் மற்றவர்கள் பேசும் போது தான் தெரிகிறது நமக்கு. பேசும் போது "This is the problem of Tamils in SriLanka" ( இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை ). நானும் நுட்பமாக கவனிக்காமல் சாதாரணமாக நினைத்தேன். பிறகு தான் கேள்வி எழுந்தது "இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை" சரியா ? என்று. ஏன் இது இலங்கையில் வாழும் இந்தியர் பிரச்சனை இல்லையா? . தமிழர் பிரச்சனை வேறு இந்தியர் பிரச்சனை வேறா? . பிரச்சனை முடிவுக்கு வராத காரணம் இப்போது தான் புரிந்தது என்னக்கும். புரிந்தது இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று. சரிதானே இறப்பது தமிழன் தானே ... இந்தியர்கள் பழி யானால் துடி துடித்து போகும் இந்தியாவிற்கு ஏன் பல இந்தியர்கள் இலங்கையில் ரத்தம் சிந்துவதை பார்த்து கொண்டிருக்கிறது ?. இறப்பது இலங்கையில் வாழும் இந்தியன் என்று இந்தியா நினைக்குமேனால் பிரச்சனை முடிந்துவிடும் . "மறப்பவர்கள் தான் தமிழ் மக்கள் " எல்லாம் ஆறு மாதத்தில் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தால்...
மிகவும் வருத்த பட வேண்டிய விஷயம் தான் இது

7 comments:

Anonymous said...

They are tamilians only not indians. The name 'INDIA'was created only after the arrival of europeans. Tamils have been there for thousands of years. You can imagine one can travel to Srilanka from Rameshwaram within 1.5 hours by boat. So migration was possible from the date of the invention of boat.

Anonymous said...

மாப்ளே அவர்கள் இலங்கையில் வாழும் இந்தியர்கள் கெடயாது. நம்மதான் இந்தியாவில் வாழும் தமிழர்கள்.

Anonymous said...

அனானி யா வந்தாலும் ... நாங்க மோப்பம் பிடிசிருவோம் ... மாமா ..... நீங்க சொன்னது புரிஞ்ச மாதிரி இருக்கு... புரியாத மாதிரி இருக்கு ...

கணேஷ் said...

//
இந்தியர்கள் பழியானால் துடி துடித்து போகும் இந்தியாவிற்கு //



செந்தில்,

சீரியசா எழுதும் போது தயவு செய்து இந்த மாதிரியான காமடிகளை தவிர்க்கவும்...

கணேஷ் said...

இலங்கை தமிழர் பிரச்சனை அடுத்த நாட்டு விவகரம்னு சொல்ற அறிவுஜீவிகள் கிட்ட ஒரே ஒரு கேள்வி...

ராமேஸ்வரம் இந்தியாவுல தான இருக்கு.... அங்க இருக்குற மீனவர்கள் இந்தியர்கள் தான?... அவிங்கள சிங்களன் தினம் சுடுறான்... இந்திய அரசாங்கம் என்ன கிழிச்சிருக்கு இது வரைக்கும் ???

உலக மற்றும் உள் விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு நம்ம கைப்பிள்ளையை ஒத்தது தான்...

"வேண்டாம்.....வலிக்குது.......அழுதுருவேன்..."

கணேஷ் said...

எப்பா இந்த word verificationa எடுத்து வுடு.... தாவு தீருது ...

Anonymous said...

//செந்தில்,

சீரியசா எழுதும் போது தயவு செய்து இந்த மாதிரியான காமடிகளை தவிர்க்கவும்...//

நான் எழுதும் போதே இந்த எடத்துல உதச்சிது. கரக்டா கண்டுபிடிசிடிங்க. நான் " மும்பை குண்டு வெடிப்பை" பிரச்சனைல தினம் தினம் துடிகிரத்தை வச்சி சொன்னேன். அப்ப அதுவும் "படம்" தானா?. சொன்ன மாதிரியே வடிவேல் சார் பில்ட் அப் தான் போலிருக்கிறது.