Monday, June 27, 2011

டாஸ்மாக்

அரசாங்கம் நடத்தும்
அவமானச்சின்னம்
டாஸ்மாக்

பாதை தவறியவர்கள்
போதை வாங்குமிடம்
டாஸ்மாக்

காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
குடிமகன்களுக்கு பிடித்த இடம்
டாஸ்மாக்

குடிமகன்களிடமிருந்து கரந்து
அரசாங்கத்திற்கு வழங்கும்
கற்பக காமதேனு டாஸ்மாக்

வருமானம் பெருகப் பெருக
அவமானம் பெருகுகின்றது
டாஸ்மாக்

பாஸ் மார்க் வாங்கியும்
க்ளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக்

ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
நிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மாக்

போதை சுகத்தில் குடிமகன்
சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
டாஸ்மாக்

விதவைகளின் எண்ணிக்கையை
விரிவாக்கம் செய்யுமிடம்
டாஸ்மாக்

வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
டாஸ்மாக்

இலவசமாய் நண்பன் தருவதாக
இளித்துக் கொண்டு போகுமிடம்
டாஸ்மாக்

இமயமாக உயர வேண்டியவன்
படு பாதாளத்தில் விழுமிடம்
டாஸ்மாக்

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Saturday, June 25, 2011

இனவெறியைச் சுமக்கும் தழும்புகள்!












''18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்காதீர்கள்!’ - இந்த எச்சரிக்கையுடன்தான் அந்தக் காட்சி ஓடியது. ஆனால், 18 வயதைக் கடந்தவர்கள்கூட அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியமற்றுக் கடந்துபோனார்கள். 'இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்!’ என்பதை, 49 நிமிடம் 4 நொடிகள் ஓடிய அந்தக் காட்சியின் மூலமாக உலகத்தின் மடியில் போட்டு உடைத்தது 'சேனல் 4’ தொலைக்காட்சி.


போர்ஆரம்பித்தது தொடங்கி முள்ளி வாயக்கால் வரை நீண்டு, இறுதிக் களத்தில் ரத்தமும் சதையுமாக முடிந்தது வரையிலான இன அழிப்புக்கு அதி முக்கிய சாட்சி... அந்த ஒளிபரப்பு. புலிகளின் கைகளைக் கட்டி குப்புறத் தள்ளி பின்னந் தலையில் சுடுவதும், அலறக்கூட அவகாசம் இல்லாமல் பொத்தெனச் சரியும் உடல்களைக் கண்டு கை கொட்டிச் சிரிப்பதும் சிங்களர்களின் சீரிய குணமாக உலக அரங்கில் ஒளிபரப்பாகியது. செத்துக்கிடக்கும் பெண் போராளிகளின் உறுப்புகளைக் காட்டி கொக்கரித்துச் சிரிக்கிற சிங்களக் கொடூரம் உலகத்தின் மனசாட்சியையே ஒரு கணம் தலை குனியவைத்தது.
''முழுக்கப் பார்க்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப் படுகொலை என்பதற்கு இதைவிட சாட்சி தேவை இல்லை!'' என அலறுகிறார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். ''எங்களின் அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள்போல் தெரிகிறது. இவற்றை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது!'' எனப் பதற்றத்தோடு சொல்கிறார் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட்.


''இன அழிப்பு, போர் மரபு மீறல், பெண்கள் மீதான சித்ரவதை என அத்தனை விதமான அட்டூழியங்களையும் சிங்கள ராணுவத்தினர் அரங்கேற்றி இருக்கிறார்கள். மனிதப் பட்டியலில் சிங்களர்கள் இனியும் நீடிக்க வேண்டுமா என்பதை உலகம் யோசிக்க வேண்டும்!'' என மனித உலக உரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன. ஆனால், எதற்கும் சலனமே காட்டாத சிங்கள அரசு, 'சேனல் 4 ஒளிபரப்பிய காட்சி கள் நம்பும்படியாக இல்லை. புலிகளின் வழக்கமான சித்திரிப்பு வேலைதான் இது!’ எனப் பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக அறிவித்ததுஊடவீ, அதி முக்கிய விளக்கமாக, 'சேனல் 4 இசைப்பிரியா என்பவரை ஊடகவியலாளர் என்று மட்டுமே சொல்கிறது. ஆனால், இசைப்பிரியா புலிகள் அமைப்பில் லெப்டி னென்ட் கர்னலாக இருந்தவர்!’ என்கிறது இலங்கை அரசு. இசைப்பிரியா வுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப்பற்றி வாய் திறக்கும் வல்லமை இலங்கைக்கு இல்லை. இனப் படுகொலையின் ஆவணப்படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் கெலம் மெக்ரே, ''போர் நடந்தபோது தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டவை தனியாகவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தனியாகவும், எங்களுக்குக் கிடைத்தன. நிராயுத பாணியாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், சித்ரவதை செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் சிங்கள ராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள் எந்த வகையான செல்போனில் எடுக்கப்பட்டவை, என்ன தேதியில் எடுக்கப்பட்டவை என்பதைக்கூட எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து உண்மை என உறுதிப்படுத்திய பிறகுதான் வெளியிட் டோம். நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளை எங்களாலேயே கண்கொண்டு பார்க்க முடிய வில்லை என்பதுதான் உண்மை!'' என்கிறார் வருத்தமாக.
கொக்கரித்துச் சிரிப்பதற்கும் கூடிப் பேசி ரசிப்பதற்கும், போர்க்களத்தில் சிங்கள வீரர் களால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளே, இனப் படுகொலையின் சாட்சியாக உலகை வலம் வருவதுதான் வேதனையான வேடிக்கை.


இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரகுமார், '' 'சேனல் 4’ ஒளிபரப்பியகாட்சி கள் உலகத்தின் கவனத்தை இரக் கத்தோடு திருப்பி இருக்கின்றன. தமிழக முதல்வராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, இலங்கை அரசின் போர்க் குற்றங் களைக் கண்டித்தும் பொருளா தாரத் தடை விதிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இருப்பது உலகளாவிய தமிழர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது. 'சேனல் 4’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொடூரங்கள் குறித்தும் தமிழக முதல்வர் உலக அரங்கில் கேள்வி எழுப்ப வேண்டும். 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளைக் காட்டிலும், இதயம் கனக்கச் செய்யக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்கள் எங்களிடம் நிறைய இருக்கின்றன. உடல் முழுக்க சிங்கள அரசின் கொடூரங்களைத் தாங்கியபடி தப்பித்து வந்த உயிர் சாட்சியங்கள் பலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இனச் சித்ரவதைக்கு ஆதாரமாகக் காயங்களைச் சுமந்திருக்கும் அந்த உயிர் சாட்சிகளை உலக அரங்கில் நிறுத்த நாங்கள் தயாராக இருக் கிறோம். முதுகைப் பிளந்தது, ஆணியால் எழுதியது, ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்துகளை சிகரெட் நெருப்பால் எழுதியது எனத் தழும்புகளையே சிங்கள வெறியின் சாட்சியங் களாகச் சுமந்து திரிபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன வெறிக் கொடூரங்கள் குறித்து அவர்கள் வாய் திறந்தால், இந்த உலகத்தால் தாங்க முடியுமா எனத் தெரியாது. பிரிட்டனில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ஒப்புக்கொள் கிறார்கள். 13 நாடுகளில் விரவி இருக்கும் எங்கள் அமைப்பு, அனைத்துக் கட்சிகளையும் ஒருசேர எங்களுக்கான தீர்வுக்காக வலியுறுத்தி வருகிறது. 'சுவாமி ரவிசங்கர்ஜி காட்டிய காணொளிகளைப் பார்த்த பிறகுதான், ஈழத்தில் நடக்கும் கொடூரங்கள் எனக்குத் தெரிந்தன’ என முன்பே சொன்னார் ஜெயலலிதா. உயிர் சாட்சியங்களின் குரல் களைப் பதிவு செய்து அவருக்குக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழர்களுக்கு என்று இருக்கும் ஓர் அரசு இலங்கை மீதான நடவடிக்கையை வலியுறுத்தினால், அந்த வார்த்தைகளுக்கான வல்லமை வலுவாக இருக்கும்!'' என்கிறார் எதிர்பார்ப்புடன்.


உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார், ''ஹிட்லர் காலத்தில் இன அழிப்பு நடந்தபோது, அதனை உரக்கச் சொல்ல ஊடக வசதி இல்லை. ஆனால், இன்றைக்கும் ஜெர்மனியில் இன அழிப்பு சம்பந்தமான புகைப்படங்களை ஆராய்ச்சி செய்து ஆவணமாக்கி வருகிறார் கள். இன வெறிக் கொடூரங்கள் உலக அரங் கில் ஒருபோதும் ஊக்குவிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தவே அத்தகைய ஆவணங் கள் தேடப்படுகின்றன. ஆனால், இன்றைக்கு கண் முன்னரே நடந்திருக்கும் இன வெறிக் கொடூரத்தை உலகம் மிகுந்த தயக்கத்தோடு ஒப்புக்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. காரணம், இலங்கை அரசுக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளைச் செய்தன. ஆனால், இலங்கை அரசின் இன வெறிப் போக்கை, உதவிசெய்த அந்த நாடுகளால்கூட நியாயப்படுத்த முடியாது. 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சி களைக் கண்டு சர்வதேசமும் பொங்கி வெடிக்கிறது. சிங்கள அரசின் இன வெறிக் கொடூரங்கள் அம்பலமாக்கப்படும் இன்றைய சூழலிலும், அங்கே வதை முகாம்களில், பசி, பட்டினிக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவதுதான் பெரும் துயரம்.
இலங்கையின் இன வெறிப் போக்கை மறுக்க முடியாத உலக நாடுகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி னால் மட்டுமே, அங்கே நடந்த - இன்றைக்கும் நடக்கும் கொடூரங்களுக்குத் தீர்வாக இருக்கும்!'' என்கிறார் ஆதங்கமாக.
லண்டனில் வாழும் சுதா என்கிற நிர்வாகி, ''இன வெறிக் கொடூரங்களாக 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மனசாட்சிகொண்ட யாராலும் மறுக்க முடியாது. மனித உரிமை அமைப்புகளுடன் பெண் சித்ரவதைகளுக்கு எதிரான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கைகோக்க வேண்டும். தாய்த் தமிழீழ உறவுகள் கைகொடுத்திருக்கும் இந்தச் சூழலில் உலகளாவிய மீடியாக்களும் உரக்கக் குரல் எழுப்பி, உலகின் மனசாட்சியை உலுக்க வேண்டும்!'' என்கிறார் ஏக்கத்துடன்.


எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நிகழும் புரட்சி, போர் ஆகியவற்றை அதிமுக்கியத்துடன் காட்டிய ஊடகங்கள், 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மறந்தும் காண்பிக்கவில்லை. தொப்புள் கொடி உறவாகத் துடித்திருக்க வேண்டிய தமிழக சேனல்களும் மருந்துக்குக்கூட அந்தத் துயரங்களைக் காட்டவில்லை.


தமிழக சேனல்கள் போட்டி போட்டு அந்தக் காட்சிகளை வெளியிட அது ஏதாவது சாமியாரின் படுக்கை அறைப் பதிவா என்ன?
- ஆனந்த விகடன்

Friday, June 3, 2011

Why Kashmir belongs to India

This is a smart one...
An ingenious example of speech and politics occurred recently in the United Nations Assembly that made the world community smile. ☺ A representative from India began: “Before beginning my talk I want to tell you something about Rishi Kashyap of Kashmir, after whom Kashmir is named. When he struck a rock and it brought forth water, he thought, 'What a good opportunity to have a bath.' He removed his clothes, put them aside on the rock and entered the water. When he got out and wanted to dress, his clothes had vanished. A Pakistani had stolen them.” The Pakistani representative jumped up furiously and shouted, “What are you talking about? The Pakistanis weren't there then.” The Indian representative smiled and said, “And they say Kashmir belongs to them. And now that we have made that clear, I will begin my speech.”