Monday, June 27, 2011

டாஸ்மாக்

அரசாங்கம் நடத்தும்
அவமானச்சின்னம்
டாஸ்மாக்

பாதை தவறியவர்கள்
போதை வாங்குமிடம்
டாஸ்மாக்

காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
குடிமகன்களுக்கு பிடித்த இடம்
டாஸ்மாக்

குடிமகன்களிடமிருந்து கரந்து
அரசாங்கத்திற்கு வழங்கும்
கற்பக காமதேனு டாஸ்மாக்

வருமானம் பெருகப் பெருக
அவமானம் பெருகுகின்றது
டாஸ்மாக்

பாஸ் மார்க் வாங்கியும்
க்ளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக்

ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
நிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மாக்

போதை சுகத்தில் குடிமகன்
சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
டாஸ்மாக்

விதவைகளின் எண்ணிக்கையை
விரிவாக்கம் செய்யுமிடம்
டாஸ்மாக்

வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
டாஸ்மாக்

இலவசமாய் நண்பன் தருவதாக
இளித்துக் கொண்டு போகுமிடம்
டாஸ்மாக்

இமயமாக உயர வேண்டியவன்
படு பாதாளத்தில் விழுமிடம்
டாஸ்மாக்

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

2 comments:

பனித்துளி சங்கர் said...

கவிதை சிந்திக்கத் தூண்டும் வகையில் சிறப்பாக இருக்கிறது .

Unknown said...

மிக்க நன்றி !