( ஏற்று கொண்டால் நீங்கள் படிக்க தேவை இல்லை படித்து உங்கள் நேரத்தை வீண் அடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஏற்க மனம் மறுத்தால் , மேற்கொண்டு நீங்கள் படிக்கலாம். பிறகு முடிவு உங்கள் கையில் )
நம்ம வூரு கட்டபஞ்சயதுல இருந்து எடுத்துகோங்க வலிமையுள்ளவன் சொல்லறதே தீர்ப்புகிரத விட நியாயமும் அது தான். வலிமையுள்ளவன் னா 1) பணம் உள்ளவர் 2) (சட்டம் ஒழுங்கை காப்பத்துற) பதவியுல்லவர் 3) பெரிய
அரசியல்வாதி . இதுல யார் பெரிய ஆலோ அவர் சொல்றது தான் உண்மை , நியாயம். ( நான் எல்லோரையும் குறை குறைவில்லை)
இது ஒன்னும் புதுசு இல்ல ஆனா உலக முழுவதும் அப்படி தான் னு சொன்ன ஆச்சர்யமா இருக்க? ஆனா அது தான் உண்மை.
நிகழ்வு 1 : தமிழர்களை நிர்வாணமா கைகளை கட்டி , துப்பாக்கில சுடுறான், கண் முன்னாடி உயிர் பிரிகிறது, இன்னும் ஆக்கபூர்வமா ஒன்னும் நடக்கல. அது உண்மையா? பொய்யா ? கேட்டுட்டு இருக்காங்க. சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு ஊசி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ? பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என கூட்டாக சேர்ந்துருக்க மாட்டார்களா ?. இந்தா மாதிரி நிகழ்வு சதாம் உசேன் செய்ததாக ஊ டகங்களில் வந்த போது உலகமே அதிர்த்து . எவ்வளவு விரைவாக செயல் பட்டு தண்டனை வழங்கினார்கள். இன்று அதே கொடுரத்தை ஒரு நாடு செய்கிறது. இன்னும் உலகமே அமைதி மட்டுமே காக்கிறது. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? அவர்கள் பின்னாடி சீனா போன்ற வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.
நிகழ்வு 2 : ஒரு நாடு தன்னுடைய மக்களை ராசாயுன ( பாஸ்பரஸ் ) குண்டு போட்டு தீயுனால் கருக வைக்கிறது. இன்றுவரை இலங்கையை தவிர எந்த ஒரு பயங்கர வாத இயக்கமும் இதை செய்யாவில்லை . இதை கேக்கும் போது யாரும் உணர முடியாது . ஒரு சிறு எடுத்து கட்டு திபாவளி வெடிகள் பஸ்பரஸல் ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். தெரியாமல் கையில் காயம் பட்டுவிட்டால் இரண்டு நாட்கள் அந்த எரிச்சல் தாங்க முடியாது . அவ்வளோ மோசமான குண்டுகளை மனிதர்கள் மீது விசுறாங்க . ஒரு நாடு செய்யும் வேலையா , ஒரு இராணுவம் செய்யும் வேலையா இது ?. இன்னிக்கி வரை யாரும் கண்டுகவே இல்லை . சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு ஊசி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ?. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? என்னா ? அவர்கள் பின்னாடி வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.
நிகழ்வு 3 : பெண்களை நிர்வாண படுத்தி பல இடங்களில் காயம் செய்து , கடித்து கொன்று இழுத்து செல்கிறது. பல பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து கொல்கிறது. இந்த கேவலமான செயலை இன்று வரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் நமக்கு தெரிந்து செய்தது இல்லை . ஒரு நாடு செய்யும் வேலையா , ஒரு இராணுவம் செய்யும் வேலையா இது ?. குறி பாத்து சுட்டு , தோல் பட்டை முழுக்க பதக்கங்கள் வாங்கினா மட்டும் வீரனா ஆயுற முடியுமா என்ன ?. அதையும் தாண்டி மனித நேயம் காப்பவனே உண்மையான வீரன். இதை உணர அறிவு வேண்டும் அதுவும் ஆறாம் அறிவு வேண்டும் அது இல்லாதவர்களுக்கு இது சிரிப்பா தான் வரும். இன்னிக்கி வரை யாரும் கண்டுகவே இல்லை . சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு ஊசி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ?. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? என்னா ? அவர்கள் பின்னாடி வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.
சமிபத்தில் ஒரு நிழல் படம் பார்த்தேன். அமெரிக்க வீரர் ஒருவர் போர் களத்தில் ஒரு கையில் துப்பாக்கி , மறு கையில் ஈராக்கிய குழந்தையை பாதுகாப்பாக தூக்கி முத்தம் இட்டு இறுக்கி அணைக்கிறார் . உடம்பு சிலிர்த்தது . இவன் அல்லவா வீரன். அந்த குழந்தை யார் என நினைக்க வில்லை . யாரை எதிர்த்து போர் புரிகிரானோ அவன் குழந்தையாக கூட இருக்கலாம் . அவனுள் மனிதநேயம் ஓங்கி நிற்கிறது. அவன் அல்லவா வீரன் . அந்த வீரனுக்கு தலை வணக்கம். கூ ட்டு பயிற்சியில் இதை யாரும் சொல்லிதர மாட்டர்கள் . நீ மனிதனாக இருந்தால் மட்டுமே வரும் .
நிகழ்வு 4 : போர் காலத்தில் எத்தனை குழந்தைகள் இறந்தன. குடல் சரிந்து, முகம் சிதைந்து , கை, கால்களை இழந்து. மனித உரிமை ஆணையாம் , யுனிசய்ப் , ஐ நா , செஞ்சிலுவை எல்லாம் நிராயுதமாய் , அறிக்கையால் வலி யுறுத்தி கொண்டு மட்டும் இருந்தது. இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால் , உலகம் சும்மா விட்டிருக்குமா ?. உடனே நடவடிக்கை எடுத்துருக்கும் அல்லவா ?. உலகம் அமைதி காப்பது ஏன் ?. ஒரு நாடு செய்கிறது. ஒரு நாட்டின் இரானுவம் செய்கிறது . வலிமையுள்ள நாடுகள் உதவி செய்கிறது. இதனாலா ?
நிகழ்வு 5: மக்களை ஆடு மாடு போல் பட்டிகளில் அடைத்து , ரொட்டி துண்டுகளை வீசி, உணவை மட்டுமே சிந்திக்கும் மிருகங்களை போல் , மாத கணக்கில் அடைத்து , அதற்க்கு யாரும் நம்ம முடியாத பல கதைகள் கூற, உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. உலகம் அமைதி காப்பது ஏன் ?. வலிமையுள்ள நாடுகள் பின்னால் இருப்பதாலா ? .
சுமார் 60 வருடங்களாக சம உரிமைகள் இல்லாமல் வாழும் மக்களுக்கு உலக நாடுகள் உரிமை வங்கி தர முடியவில்லை. கேட்டல் அது இலங்கை நாட்டின் இறையாண்மை சார் ந்தாம் , அப்புறம் அது உள் நாட்டு விசயமாம். அப்புறம் எதுக்கயா உள்நாடுல நடக்குற விசயத்துக்கு எல்ல நாடும் உதவி செய்யுது ?. ஆயுதம் வழங்குரவங்க உரிமையும் வாங்கி தரனும் இல்லாட்டி அமைதியா உள்நாடுல நடக்குற விஷத்தை தலையிடாம இருக்கணும். உலகம் அமைதி காப்பது ஏன் ?. வலிமையுள்ள நாடுகள் பின்னால் இருப்பதாலா ? .
இதன் மூலம் நமக்கு தெரிவது என்ன வென்றால்
வலிமை இல்லாதவன் செய்தால் அது குற்றம் , பயங்கரவாதம் அது தண்டனைக்கு உரியது . இதுவே வலிமை உள்ளவன் செய்தால் அது குற்றமோ , பயங்கரவாதமோ ஆகாது. அதனால தண்டனையும் கிடையாது.
என்ன ஆச்சர்யம் என்றால் ஒரு ஊர் அல்ல , ஒரு நாட்டில் அல்ல, உலகமே இது தான் எனபது கசப்பான உண்மை .
நியாயம் , தர்மம், நீதி என்றெல்லாம் யோசிப்பதை விட்டுவிட்டு நான் யோசிப்பது எல்லாம் பல வருடங்களுக்கு முன்னால் படித்த "டார்வின் கோட்பாடுகளை மட்டுமே". அது மட்டுமே என்றும் உண்மையாகிறது .
உண்மை கசக்கிறது ...