Wednesday, January 28, 2009

இது இளைய சிங்கள சகோதரனுக்கு...

( இது என் சொந்த கருத்தே தவிர ... யாரையும் புண் படுத்த இல்லை )

இது இளைய சிங்கள சகோதரனுக்கு...

பாலஸ்தினத்தில் இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டாமென்று போர் கொடி ஏந்தினான் பல நாட்டு கிருஸ்தவன். ஏன் இஸ்ரேல் கிருஸ்தவன் பாலஸ்தினத்தில் இஸ்லாமிய மக்களுக்காக போர் கொடி ஏந்தினான். இதுவல்லவா மனித நேயம். இந்த மக்களை கொண்ட இஸ்ரேல் வளர்ச்சியை யார் தடுக்க முடியும்.

இராக் இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டாமென்று போர் கொடி ஏந்தினான் பல நாட்டு கிருஸ்தவன். ஏன் அமெரிக்கா கிருஸ்தவன் போர் கொடி ஏந்தினான். இதுவல்லவா மனித நேயம். இந்த மக்களை கொண்ட அமெரிக்க வளர்ச்சியை யார் தடுக்க முடியும்?.
நான் கேட்பது எல்லாம் படித்த இளைய தலைமுறை சிங்களவர்களை தான். படித்த என்றால் வெறும் புத்தகம் படித்துவிட்டு ஒரு முழம் பெயருக்கு பின்னால் கல்யாண பத்திரிக்கையுள் போட எண்ணுபவர்களை அல்ல .... உண்மையாய் படித்த சிங்கள இளைனரை தான்.

இனம், பதவி, கட்சி, ஒட்டு இதை எல்லாம் தள்ளி வைத்து விட்டு கொஞ்சம் அமைதியாய் யோசித்து பாருங்கள்....
நீங்கள் மட்டுமே இதற்க்கு தீர்வு காண முடியும்.
சிந்தித்து பாருங்கள் ....
நீர் உண்மையை உணர்த்து பாருங்கள்...
எங்களை பொறுத்தவரை தமிழர் என்பதை விட "இலங்கை தமிழர்" என்று தான் எல்லோரும் குறுப்பிடுகிரர்கள். ஆனால் உங்களை பொறுத்தவரை
"எங்களது நாட்டு (தமிழ்) மக்கள் " என்ற எண்ணம் எப்பொழுது உங்களுக்கு வருகிறதோ அன்றே நீங்கள் மிக பெரிய வல்லரசு ஆகும் நாள் நெருங்குகிரத்தை நீங்கள் உணர்வீர்கள் .
"எங்களது நாட்டு (தமிழ்) மக்களை கொன்று குவிக்கதே" என்று சிங்களவர்கள் என்று போர் கொடி ஏந்துகிறார்களோ அன்றே நீங்கள் மிக பெரிய வல்லரசு ஆகும் நாள் நெருங்குகிரத்தை நீங்கள் உணர்வீர்கள் .
பல நாட்டு பீரங்கி மழை பொழிந்தும் பெறாத அமைதியை நீங்கள் அன்பு மழையால் பெற முடியும் என்பதை உணர்வீர்கள்.

தமிழன் உலகிற்கே நல்லவன் உங்களை தவிர ........

உண்மையாய் பழகி பார் ...
உயிர் எடுப்பவன் தமிழன் அல்ல...
உயிர் கொடுப்பவன் தமிழன் ...
உயிர் விடுபவன் தமிழன் ...
இதை உணர்த்து பார்த்தல் மட்டுமே உலகிற்கு புரியும் ...

இன்று உங்கள் மண் சிங்களனுக்க இல்லை தமிழன்னுக்க சொந்தம் என்பதை விட... ஆனால் நாளை இது கடலுக்கே சொந்தம் எனபது மட்டும் நிச்சயம்.
கடல் விழுங்கும் நாடே ...
இரத்தத்தால்....
கண்ணீரால்....
மரம் வளர்த்து போதும் ...
மிதி இருக்கும் ஓர் இரு தலைமுறையாவதாவது
தண்ணிரால் வளருங்கள்...

எங்கள் கோரிக்கை எல்லாம் ஒன்று தான் ...
இனத்தை உட்டி வளர்த்தது போதும் ...
இனி வரும் தலைமுறைக்காவது பால் உட்டி வளருங்கால்...

நம்பிக்கையுடன் மதத்தை, இனத்தை தாண்டிய தமிழன் ...

சந்திப்போம் சிந்திப்போம்
மு. செந்தில் குமார்

No comments: