Tuesday, September 16, 2014

டேய் நண்பா எங்கடா இருக்கே இப்போ ?


இப்போ எல்லாம்  நீ போன் ல கூட பேசுறது இல்ல கூகிள் ல சாட் பண்றது இல்ல .. ஆனா நான் உன்ன மறந்தாலும் ஏதோ ஒரு வடிவத்துல உன் ஞாபகம் வர வச்சிரங்க ...

கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி காலைல இருந்து நைட் வரைக்கும் வேணாம் வேணாம் னு ஓடுனாலும் விடாம எனக்கு தெரிஞ்ச கல்யாணம் ஆகாத பொண்ணுக பத்தி கேட்டு கேட்டு கூகிள் ல சாட் செய்வியே?

எங்க ஊரு புள்ளைக கிட்ட என் ப்ரென்ட் நல்லவரு, வல்லவரு னு சொல்ல சொல்லி எனக்கும் “லவ் டார்ச்சர்” கொடுத்தியே ?

 எங்க ஊரு டவுன் பஸ்ல “அலர்ஜி , ஆஸ்த்மா, நரம்பு தளர்ச்சி, எய்ட்ஸ்  .... க்கு உடனே தீர்வு ...அணுகவும் டாக்டர் X ...  னு ஒவ்வேருத்தர் மடியுலும் வேணும்னாலும் வேணாம்னாலும் பிட் நோட்டீஸ் வச்சிட்டு போறவன் மாதிறி,  கல்யாணம் ஆகாத பொண்ணுங்க எல்லாத்துக்கும்  கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம ஒரு பிட் நோட்டீஸ் குடுத்தியே ... உனக்கு ஞாபகம் இருக்க இல்லையோ எனக்கு நல்லவே இருக்கு...

உனக்கு கல்யாணம் னு கேள்வி பட்டதும் சந்தோஷ பட்டது கல்யாணம் ஆகாத பொண்ணுங்க மட்டும் இல்ல ...நானும் தான் ...

ஏண்ணா, சார் உங்க ப்ரென்ட் எனக்கும் அப்ளிகேசன் குடுத்தார் ... எனக்கும் அப்ளிகேசன் குடுத்தார்... னு இனி யாரும் சொல்லமாட்டங்க னு ...
ரொம்ப சந்தோஷ பட்டேன்

 ஆனா...

அந்த சந்தோசம் ரொம்ப நாள் நிலைக்கல ...

சமிபத்துல கல்யாணம் ஆகி குழந்தையோட இருந்த ஒரு பொண்ணு பேசும் போது சார் உங்க பிரெண்ட எனக்கும் தெரியும் ... அவரு “தமிழ் மேட்ரிமோனி” ல எனக்கும் இண்டரெஸ்ட் அனுப்பினார் ... னு சொன்னப்ப இருந்த நிம்மதி யும் போச்சி ...

இப்போ ஒரு குழந்தையோட இருக்கிற பொண்ணுங்கள பாத்தாவே உண் பேர சொல்ல பயமா இருக்குட ...

டேய் நண்பா எங்கடா இருக்கே இப்போ ?


No comments: