விட்ட இடத்தில் கதையைத் தொடங்க இன்னொரு குழந்தை பிறக்கும்!’
காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து…
-கமல்ஹாசான்
ஈழத் தமிழர்களின் வலியைப் பதிவு செய்ய ‘போருக்கெதிரான பத்திரிகையாளர்கள்’ உருவாக்கியுள்ள ‘மௌனத்தின் வலி’ புத்தகத்தில்…
No comments:
Post a Comment