Monday, October 19, 2009

ஈழ சகோதரர்களே சிந்தியுங்கள்

தற்போது தமிழ்நாட்டு தலைவர்கள் இலங்கை பயணம் பற்றி நெறைய விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து சிந்தியுங்கள் ஈழ சகோதரர்களே . திருமாவையோ , தமிழ்நாட்டு தலைவர்களை குறை கூறுவதில் அர்த்தமில்லை. போரை நிறுத்த எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய் விட்டது . உண்மையில் எல்லோரும் போராட வில்லை என்பது அவர்களளுடைய நிர்பந்தம். இதை நான் நியாய படுத்த வில்லை . அரசியல் , பதவி, கூட்டனி, ஊடகங்களின் நிலை , சூழ்ச்சி, தந்திரம் , பழிவாங்கும் எண்ணம் , அண்டை நாடுகளின் சூழ்ச்சி என்று பல காரணங்கள் இருந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் . ஆனால் தமிழர்காக )போரடிய தமிழர்கள் பலர் உண்டு என்பதுவும் உண்மை. இறுதியில் ராஜபக்ஷேவின் தந்திரம் தான் ஜெயுத்தது. ஒரு இன அழிப்பை பயங்கரவாதம் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்து தன் நோக்கமான "வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களின் எண்ணிக்கையை குறை " என்ற என்னத்தை நிறைவேற்றி கொண்டது தான். இன்றைய ஈழ தமிழர் நிலைமை இன்னும் ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மை , வரலாறு. பல சூழ்ச்சியின் தொகுப்பே இது.

இன்றையா நிலைமையில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியாது அடுத்து என்ன எனபது தான்?. மக்கள் தங்கள் இடங்களுக்கு இடம் பெயர் வேண்டும். அது ராஜபக்சே நினைத்தால் மட்டுமே முடியும் . ஐ நா (உண்மையில்) நினைத்தால் கூட முடியாது. கன்னி வெடி ... அது இது என்று திசை திருப்பும் வேளையில் தான் ஈடுபடுவது ராஜபக்சே வின் உண்மையான எண்ணம் . மக்கள் தங்கள் இடத்துக்கு இடம் பெயன்றால், அடுத்து தமிழர்கள் உரிமைகள் பற்றி எல்லோரும் கேள்வி ஏலுபபுவார்கள் . இதை தவிர்க்க , விஷத்தை ஆற போட்டு திசை திருப்பவே காரணங்களை சொல்லி வரும் நிலையில், தொங்க வேண்டி இருக்கிறது. வேறு வழி இல்லை. இன்றைய நிர்பந்தம் இது. திருமா நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். மத்திய அரசின் கட்டுபாட்டில் , மாநில அரசு. மாநில அரசின் கட்டுபாட்டில் கூட்டனி கட்சியில் ஒரு கட்சி யின் தலைவர். அவர் அங்கு வாய் திறந்து தண்ணி , உணவு மட்டுமே குடிக்கவோ, உண்ணவோ செய்ய முடியும். திருமா அரசியல் சூழ்ச்சியின் சிக்கி கொண்டது தான் உண்மை. இது நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவர் அங்கு சென்றிருக்க மாட்டார் . அங்கு போகாமல் தவிர்த்திருக்கலாம். ஒரு ஈன பயலுக்கு கையெடுத்து கும்பிடும் நிலை. அவன் சொல்வதற்கெல்லாம் சிரிக்க வேண்டிய நிலை. ( கொஞ்சம் சிந்தியுங்கள் அங்கே யார் இருந்தாலும் இதை தான் செய்திருக்க முடியும் ).

எனவே தமிழர்கள் யாரையும் பகைத்து கொள்ளாமல், என்ன உதவி பெற முடியும் என்பதை மட்டுமே எண்ணுவது சிறந்தது. அரசியால் எனபது சுயநலம் கலந்த ஒன்று . அரசியால் வாதிகள் எல்லாவற்றையும் அளப்பது ஓட்டால். நின்றால் எத்தனை ஒட்டு விழும், உக்கார்தால் எத்தனை ஒட்டு விழும் , மருத்துவமனையில் படுத்தால் எத்தனை ஒட்டு விழும் என்பதை மட்டுமே வாழ்வில் சிந்திப்பார்கள். இது ஜுலியஸ் ஸீஸர் காலம் முதல் தெரிந்த உண்மை. எனவே தமிழர்கள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் அதை வெளிபடையாக விமர்சிக்காமல் , அவர்களை திட்டாமல் அவர்களால் என்ன உதவி பெற முடியும் , உங்கள் முன்நேற்றதுக்கு எவ்வாறு பயன் படுத்த முடியும் என்பதை மட்டுமே சிந்திக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

காலம் பதில் சொல்லும் ... தேவை நம்பிக்கை
தமிழ் நாட்டில் இருந்து ஒரு குரல் ...

6 comments:

ISR Selvakumar said...

//இன்றையா நிலைமையில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியாது அடுத்து என்ன எனபது தான்?. மக்கள் தங்கள் இடங்களுக்கு இடம் பெயர் வேண்டும். அது ராஜபக்சே நினைத்தால் மட்டுமே முடியும்//

இன்றைய நிலையில் ஈழச் சகோதர சகோதரிகள் இதனை புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவார்கள் என்று நம்புகின்றேன். இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, ஒருங்கிணைந்து செயல்பட (தமிழகத் தமிழர்கள் உட்பட) அனைவரும் செயல்படும்.

Anonymous said...

ஆடடே பாலுவோட ஊர்க்காரனா நீங்க எங்கள விற்று எங்கட வெயிலில் குளிர் காயும் கருணாநிதி போன்ற அரசியல் வாதிகளுக்கு எங்கடா விளங்க போகுது எங்கட நிலவரம்.பெரிய அடிதடி தர்பார் நடத்திவிட்டு போய் இருக்காருடா உங்கட பாலு இதோட பெரிய விசயம் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கு என்று கேட்டாரு இதவிட வேற என்ன வேணும் தம்பி உங்களுக்கு அது சரி தமிழ் நாட்டில் எப்போ தமிழரை விற்கும் அரசியல் முடிவுக்கு வருமோ அப்போதான் விளங்கும் உங்கட வீடு

கந்தர்மடம் கவின் said...

// கொஞ்சம் சிந்தியுங்கள் அங்கே யார் இருந்தாலும் இதை தான் செய்திருக்க முடியும் //

மிக சிறப்பான ஒரு அலசல், யதார்த்தத்தை யாரையும் புண்படுத்தாமல் சொல்லியிருக்கிறீர்கள்.

இப்போதைக்கு தமிழர்களுக்குள் வேற்றுமையை களைய வேண்டும், அதன் பின்னர் ஒற்றுமையை வளர்க்க வேண்டும்.

தொடர்ந்தும் இது போல் ஆக்கபூர்வமாக எழுதுங்கள்

ஒரு சின்ன வேண்டுகோள்
ஒரு சில தனிப்பட்டவர்களின் கருத்தை கருத்திற்கொண்டு ஒட்டுமொத்த ஈழ தமிழரையும் விளிப்பதை தவிருங்கள்.

ஏனெனில் இங்கிருப்பவர்கள் குறை சொல்வது மிகக்குறைவு , எங்களுக்கு ஏதாவது நன்மை நடக்காதா என்று ஏங்குவதை தவிர எங்களால் வேறொன்றும் சிந்திக்க முடிவதில்லை.

ஒரு சிலர் எம்மீது இருக்கிற அதீத அன்பாலோ, அக்கறையாலோ என்னவோ சற்று அதிகமாக ஆத்திரப்பட்டு எழுதிவிடுகிறார்கள் , அவர்கள் மீதும் பிழை சொல்வதற்கு இல்லை, நாம் பாசம் வைக்கும் ஒருவருக்கு அநியாயம் நடக்கும் போது நம்மால் ஒன்றும் செய்யமுடியாதிருக்கிறதே என்கிற ஆதாங்கமும் காரணமாயிருக்கலாம்.

எமக்குள் கருத்து வேற்றுமை இருக்கலாம், அதுவே பிரிவினையாக மாறக்கூடாது என்பதே என் ஆதங்கம்.

கருத்து பிழை இருக்கலாம், சுட்டி காட்டுங்கள்.

நன்றி.

Unknown said...

நன்றி செல்வகுமார் அவர்களே
தங்கள் வருகைக்கும், கருத்துக்கு நன்றி. சுயநலம் விட்டு , மீழ்வது எவ்வாறு என்பதை மட்டும் சிந்தித்து ஒருமித்த கருத்துடன் செயல் படவேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம்.

Unknown said...

அனானி அவர்களின் ஆதங்கம் புரியாமல் இல்லை. வறுமையுன் வலி, வறுமையில் இருப்பவனுக்கு மட்டுமே உணர முடியும். அதை பற்றி அராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகோ, தன்னை படைத்த ( படைத்திருந்தால்) கடவுலானாலும் உணர முடியாது.

நீங்கள் துப்பாக்கி முனையில் நிற்கிறீர்கள் என்றால்...
தமிழ்நாடு நிர்பந்தத்தின் முனையில் நிற்கிறது...

உங்கள் வேதனையும் வலியையும் உணர நீங்கள் மட்டும் இல்லை நாங்களும் தான்...

அரசியலை தாண்டி உணர்வுபூர்வமான செயல் தேவை இன்றைக்கு

Unknown said...

கந்தர்மடம் கவின் அவர்களே ...

//இப்போதைக்கு தமிழர்களுக்குள் வேற்றுமையை களைய வேண்டும், அதன் பின்னர் ஒற்றுமையை வளர்க்க வேண்டும்.//

வழிமொழிகிறேன்... இன்றைக்கு இது தான் மிக முக்கியமான ஒன்று.


//ஒரு சின்ன வேண்டுகோள் ஒரு சில தனிப்பட்டவர்களின் கருத்தை கருத்திற்கொண்டு ஒட்டுமொத்த ஈழ தமிழரையும் விளிப்பதை தவிருங்கள். //

நான் ஈழ தமிழர் மீதும் வருத்த பட வில்லை... நான் பயப்படுவது ஒன்று தான், ஒரு சிலர் தங்களுக்கு உதவ வில்லை என்றாலும் பரவா இல்லை, உபத்திரம் தந்து விடுவார்களோ என்ற பயம் தான். அந்த ஆதங்கம் தான். ஒட்டுமொத்த ஈழ தமிழரையும் நான் அப்படி நினைக்க வில்லை. நீங்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் வெளிபாடு தான் இது...