Wednesday, February 18, 2009

ஒரு முட்டாளின் முன்று கேள்விகள்

ஒரு சாதாரண இந்திய குடிமகனான என்னுள் எழுந்த முன்று கேள்விகள்.

1) இந்தியா, ஈழத்தில் உள்ள தமிழர்களின் உரிமைகளை வாங்கி கொடுக்க உத்திரவாதம் தர முடியுமா?.

இந்தியாவின் பதில் : இது உள்நாட்டு பிரச்சனை. வலியுறுத்தலாம் தவிர, ஒரு நாடு இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது.

2) இந்தியா, ஈழத்தில் உள்ள ராணுவத்தால் கொல்லபடுகின்ற தமிழர்களின் உயிருக்கு உத்திரவாதம் தர முடியுமா?.

இந்தியாவின் பதில் : இது உள்நாட்டு பிரச்சனை. வலியுறுத்தலாம் தவிர ஒரு நாடு இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது.

அப்போ இப்ப இலங்கையில் நடக்குற சண்டையும் உள்நாட்டு பிரச்சனை தானே?. இலங்கை நாட்டில் ஒரு தரப்பு மக்கள் தங்களின் உரிமைக்காக அந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளரை எதிர்த்து போராடுகிறார்கள்.

இந்த உள்நாட்டு பிரச்சனைகாக இந்தியா ஏன் பணம், ஆயுத உதவி செய்ய வேண்டும்?.

இந்தியா பணம், ஆயுத உதவி செய்யும் போது மட்டும் இது உள்நாட்டு பிரச்சனையில் தலையிடுவதா தெரியுலையா?.

என்னை போன்ற பல பேருக்கு புரியாத புதிரா தான் ....

8 comments:

Anonymous said...

பாய்ன்ட்ட புடிச்சுடீங்கன்னே........ கலக்குங்க

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கேள்வி விடைதான் தெரியல...

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Unknown said...

அண்ணன் Karuppu அவர்களுக்கும் ஆ.ஞானசேகரன் அவர்களுக்கும் நன்றி "பின்னுட்டம் இட்டமைக்கு" .....

// நல்ல கேள்வி விடைதான் தெரியல... //

விடை தெரியாமல் நாம் இல்லை...

அடி முதல் முடி வரை விடை தெரியாதது போல் நடிக்க வேண்டியதாயுற்று ...
ஏன் என்றல் நாம்
"இந்தியர்கள்"

Anonymous said...

நீங்கள் எல்லம் இழிச்ச வாயனுகள் எப்டு தெரியும்.

Anonymous said...

லூசாப்பா நீ?

Unknown said...

//pukalini said...
லூசாப்பா நீ?
//

ஹலோ ... ஏன் இந்த கொல வெறி...

1) ஒரு அறிவாளி என் வலைபக்கத்துக்கு வந்தமைக்கு நன்றி.
2) ஒரு அறிவாளி என் வலைபக்கத்துக்கு படித்ததுக்கு நன்றி.
3) ஒரு அறிவாளி என் வலைபக்கத்துக்கு பிண்ணுடம் இட்டமைக்கு நன்றி.
4) ஒரு அறிவாளி என்னை பற்றி விமர்சித்ததற்கு நன்றி.

நான் உங்களை நினைத்து பெருமைபடுகிறேன்.

senthil said...

புகழினி வாய் ல என்னைக்கி நல்ல வார்த்தை வந்திருக்கு...

அசிங்கமா ஒரு பின்னுட்டம் எழுதி இருந்தார்.. அதை நல்ல வேலை நான் அனுமதிக்க வில்லை ...

ஒவ்வெருவருக்கும் ஒவ்வெரு கருத்து இருக்கும் அது அவரவருடைய சொந்த கருத்து, உரிமை...

மாற்று கருத்து உள்ளவன் எல்லாம் லுசு இல்ல எனபது இந்த அறிவி ஜீவிக்கு தெரியனும்.

மரியாதை எனபது குடுத்து பெறுவது