Monday, December 2, 2013

வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் சொல்றதுடைய நியாயம்

என் சாதி காரன் நீதிபதியா வேனும் ! 

என் சாதி காரன் IAS a வேனும் ! 

என் சாதி காரன் top 10 சீனியர் லாயர் ல ஒருவர் வேணும் !

என் சாதி காரன் IG யா வேணும் !

என் சாதி காரன் முதலமைச்சரா வேணும் !

என் சாதி காரன் மத்திய மந்திரியா வேணும் னு 

வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் சொல்றதுடைய நியாயம் 
சங்கர ராமன் கொலைவழக்கு ஒரு நேரடி சாட்சி !

Share Please 
Senthil kumar

Friday, March 22, 2013

ஜெனிவா யில் இலங்கை எதிராக நவநீதம்பிள்ளை பேசி உரை:-


ஜெனிவா யில் இலங்கை எதிராக நவநீதம்பிள்ளை பேசி உரை:-

1.இலங்கையில் நடத்தது இனப்படுகொலை.

2.2009 யில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது அதிகமான போர் குற்றம் செய்து உள்ளது .
 ...
3.இலங்கை ராணுவம் பெண் மற்றும் குழந்தைகளை அதிகமாக கற்பழிப்பு மற்றும் கொலை வெறியாக செய்து உள்ளது.

4.இறுதி கட்ட போரில் சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் .

5.இலங்கை அரசிடம் சரண் அடைந்தவர் கூட கொல்லப்பட்டன்.

6.டிவி சேனல்-4 யில் கூட அங்கு அனைத்து செய்திகளும் தெளிவாக அளித்து உள்ளது.

7.இலங்கை அரசு மீது பன்னாட்டு நாட்டு விசாரானை வைக்க வேண்டும்.

8.அந்த விசாரானையில் மனித உரிமை யில் பல நாடுகளில் உறுப்பினர் குமு அமைக்க வேண்டும் .

9.பாலசந்தர் என்ற இளம் குழந்தை கொலை செய்த இலங்கை அரசு மீது முமு நடவடிக்கை வைக்க வேண்டும்.

10.இலங்கையில் பல லட்சம் தமிழர்களின் மண்டை ஒடுகள் இதற்கு சான்று என கூறினார்.

நவநீதம் பிள்ளைக்கு நன்றி..!

Wednesday, February 27, 2013

சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம்

ஜூனியர் விகடன் (27.02.13)

சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி


‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே ஈழத்தமிழர் படுகொலை குறித்து பரபரப்பான பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:

கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது?

ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர் கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள்.

உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவல்ம்களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த வீடியோக்களை எடுத்த இரண்டு சிங்களப்படை வீரர்கள் என்னிடம் சொன்னவை. வீடியோவாகவும் பதியப்பட்டவை. அவர்கள் இருவரும் 53ம் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இறுதிக் கட்டம் வரை இலங்கையில் போர் நடக்கும் இடங்களில் பணியாற்றியவர்கள். போர் முடிந்தவுடன் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர்.

எல்லா வீடியோக்களும் அவர்களின் மொபைல் போன்களில் எடுக்கப்பட்டவை. போர் நடக்கும் இடங்களில் வீடியோவோ, புகைப்படங்களோ எடுக்க அனுமதி கிடையாது. மொபைலில் எடுத்ததும் ரகசியமாக எடுத்தவைதான்.

இறுதிக்கட்டப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதி ஒரு கிலோ மீட்டர் சதுரப் பரப்பளவில் இருக்கும் சிறிய பகுதி. அந்தப் பகுதியில்தான் மக்களை கொன்று குவித்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

2009 மே மாதம் 18-ந் தேதி இரவு போர் தீவிரமடைந்து, அங்கிருக்கும் மரங்களையும் வாகனங்களையும் ராணுவம் கொளுத்தியது. அப்போது பாலச்சந்திரன் தன் மெய்காப்பாளர்கள் நால்வருடன் இரவு முழுவதும் பதுங்கு குழியில் இருந்திருக்கிறார். காலையில் வேறு வழியே இல்லாமல் மெய்க்காப்பாளர்களின் முடிவுப்படி 53ம் படையில் சரணடைந்தனர்.

மே 19ம் தேதி காலை 7.30 மணிக்கு அவர்கள் சரணடைந்ததும், பாலச்சந்திரனையும் அவரது மெய்க்காப்பாளர்களையும் தனித்தனியே பிரித்து விட்டனர். சரணடைந்தவர்களைப் பற்றி அங்கே பணியில் இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கோத்தபாய ராஜபக்சவுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்.

கோத்தபாய இந்தத் தகவலை கருணாவிடம் சொல்லி இருக்கிறார். ‘அவனை உயிரோடு விட்டால், அது நமக்குத்தான் பிரச்சினை. அந்த பையன் ஒரு மைனர். சட்டத்தின்படி எந்தத் தண்டனையும் வழங்க முடியாது. சட்டத்தின் பிடியில் இருந்து அவன் தப்பிவிட்டால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகக்கூட அவன் வந்து விடலாம். எல்லோரையும்போல அவனையும் கொன்று விடலாம்’ என்று கோத்த பாயவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்.

அதற்கான உத்தரவு 53-ம் படைக்குப் பிறப்பிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு பாலச்சந்திரன் உடல் அருகில் துப்பாக்கியை வைத்து ஐந்து முறை சுட்டிருக்கிறார்கள். யாரைக் கொன்றாலும் தடயம் இல்லாமல் எரித்து விடுவதும்தான் அந்த படைப்பிரிவின் வழக்கம். பாலச்சந்திரனையும் அப்படித்தான் தூக்கிச் சென்று விட்டனர்.

பாலச்சந்திரன் சரணடைந்தபோது காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோவும், 9.30 மணிக்கு அவர் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவும்தான் இப்போது வெளியானது.

கே: பாலச்சந்திரனிடம் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறதா?

ப: பாலச்சந்திரனிடம் அவரின் அம்மா பற்றியும், அக்காவைப் பற்றியும் கேட்டார்களாம். ‘நானும் என் அம்மாவும் நேற்று ஒன்றாகத்தான் இருந்தோம். தப்பிக்க வேண்டும் என சொன்னவுடன் அவர்கள் ஒரு குழுவாகவும், நாங்கள் ஒரு குழுவாகவும் கிளம்பும் போது இடையில் அம்மாவைக் காணோம். அவர்கள் இப்போது எங்கே என்று எனக்கு தெரியாது’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார். வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை. சுடுவதற்காக துப்பாக்கியை பாலச்சந்திரனுக்கு அருகில் நீட்டியபோதுகூட, தன்னைச் சுடப்போசிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை.

கே: வீடியோ பொய் என்று இலங்கை அரசு சொல்கிறதே?

ப: அந்த மொபைலில் இருந்த வீடியோவை நானே பலமுறை பார்த்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்த பிறகுதான் ஆவணப்படம் எடுத்தோம். வீடியோவை இங்கிலாந்தில் ஆய்வுக்கும் உட்படுத்தினோம். வீடியோவில் இருப்பது அத்தனையும் உண்மை... உண்மை... உண்மை. இப்போதுகூட அங்கிருக்கும் தமிழர்கள் உணவு, உடை, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு எந்த உதவிகளையும் இலங்கை அரசு செய்வது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

‘நோ பயர் ஸோன்’ தொகுப்பில் இடம்பெற்ற வீடியோக்கள் பலவற்றைக் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். கடைசிக் கட்டப்போரில் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர். அவர் சொல்கிறார்.

இந்த நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்பின் சோகம் இது. மிகச்சிறிய பரப்பளவு கொண்ட பகுதி முள்ளிவாய்க்கால். அந்தப் பகுதிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான். பாதிப்பேர் உணவு இல்லாமல் கடல் நீரைக் குடித்தே செத்துப்போனார்கள்.

தமிழ் மக்கள் கூட்டம் ராணுவத்திடம் சரணடைய வந்தனர். ‘நாங்கள் உங்களைச் சுட மாட்டோம். நீங்கள் அனைவரும் துணிகள் இல்லாமல், நிர்வாண நிலையில்தான் எங்களிடம் வரவேண்டும்’ என்று கட்டளை இட்டது ராணுவம். வேறு வழி இல்லாமல் அப்பா முன் மகளும், மகனின் முன் தாயும், அண்ணனின் முன் தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர்.

வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகாமிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள்.

போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து சென்று தாக்கும். உலக நாடுகள் எதுவும் அந்த குண்டுகளைப் பயன்படுத்தாது. ஒயிட் பாஸ்பரஸ் அதைவிடக் கொடூரமானது. ஒரே ஷாட்டில் 100க்கு மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் சுற்றியிருக்கும் எல்லா ஆக்ஸிஜனையும் உறிஞ்சிக் கொண்ட பிறகுதான் வெடிக்கும். அதனால் குண்டு பாதிப்பையும் தாண்டி பலர் மூச்சுத் திணறியே இறந்தனர். சானல் 4 வெளியிட்டு இருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் உதாரணங்கள் மட்டும்தான். ஒட்டு மொத்தமும் வெளிவந்தால், இலங்கை தாங்காது.

-- Courtesy :ஜூனியர் விகடன் (27.02.13) via Andy Robert

Thursday, February 14, 2013

காந்திய வழியில் நடப்பவர்களா காங்கிரஸ் காரர்கள் ?


1) காந்திய வழியில் நடப்பவர்கள் என்றால்... எத்தானை காங்கிரஸ் காரர்கள் சில்லி சிக்கன் மட்டன் பிரியாணி , மீன் ப்ரை உண்ணாமல் சைவம் சாப்பிடுகிறவர்கள்?

2) அவர் குடும்பங்களில் எத்தனை பேர் சைவம் ?
 அவ்வாறாக இல்லை என்றால் அகிம்சையை பின்பற்றாத அவரும், அவர்கள் குடும்பம்மும்  இப்படி இருக்க , எப்படி மேடை ஏறி பேச முடிகிறது ? காந்தியின் கதரை கட்டி கொண்டு வலம் வர முடிகிறது ? காந்தியின் படத்தை வைத்து
ஓட்டு கேக்க முடிகிறது ?

3) காந்தியுன் அகிம்சை உண்மை என்றால் "மரண தண்டனை" என்ன ?

4) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் எப்படி ஊழலில் ஈடுபடுகிறார்கள் ?

5) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் மது அருந்தாத காங்கிரஸ் காரர்கள் எத்தனை பேர் ?

6) காந்தியவாதியகவும் காங்கிரஸ் காரர் ராக தொப்பி , ஜுப்ப உடன் திரிந்த கிழ வயது N  T திவாரி ( முன்னால் ஆந்திர ஆளுனர் ) பெண்களுடன்  உருண்டு பிரண்டது ஏனோ ? (இவர் அடிமட்ட தொண்டர் இல்லை இவர் மதிப்பிற்குரிய  தலைவர்களில் ஒருவர் )

7) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் இந்திர காந்தி அம்மையார் கொலையுண்ட போது சீக்கியர்களை தாக்கி , பலரை கொலை செய்தது ஏனோ ?

8) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால், அகிம்சை வாதிகள் என்றல் ராஜீவ் காந்தி கொலையுண்ட போது வன்முறையில் ஈடுபட்டது ஏன் ?

வாய்ப்பு ஒன்று தான்  இறுதி என்றால் இதற்க்கு ஏன் காந்தி போட்டோ, காதர் ...

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் யார் ?


கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்?

From Face Book - The Voice of People


கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்? இனப்படுகொலை சமயத்தில் அவர் அப்படி என்ன செய்தார்? இது போன்ற கேள்விகளுக்கான சில விளக்கங்கள் உதாரணத்தோடு:

1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கினார்

2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர் ... சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டது.

3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது

4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக மே பதினேழு இயக்க தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்

5. கருணாநிதி ஆட்சி மாறும் வரை ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’ என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை சிலவற்றை மூடியதும், வழக்கு பதிவு செய்து அச்சுக் கூடங்களை கையகப்படுத்தியதும் நடந்தது.

6. கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து வருபவர்களை கைது செய்வதும், உதவி பொருட்கள் அனுப்பபடுவது தடுக்கபட்டும் செய்யப்பட்டது.. மறைந்த தோழர். புதுக்கோட்டை முத்துக்குமார். இதை சொல்லி இருக்கிறார்.

7. கருணாநிதியை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்களை மூன்று மாதம் பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்

8. தமிழீழ போர் சி.,டிக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய சி.டிக்களை நகல் எடுக்க முடியாமல் தடை செய்தது. காரைக்குடிக்கு சி.டிக்களை கொண்டு வந்த எங்களது தோழர் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

9. போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக அரசு.

10. சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள் . அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும். ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்

11. தமிழீழப் படுகொலையை கண்டித்தும், திமுக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய் வழக்கில் அடைக்கப்பட்டார்

12. முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்தார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.

13. இரண்டாவது ஈகியரான பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும்., உடல் நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது அரசு. பின்பு இதை மாற்றி எழுதவைக்க போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

14. தமிழீழ தேசியதலைவர் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி.. விடுதலை சிறுத்தைகளுக்கே கூட இது ந்டந்தது. அவர்களின் சுவரெழுத்தில் பிரபாகரன் படம் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது

15. மூன்றாவது ஈகியரான சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது. இன்று வரை கிடைக்கவில்லை.

16. அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் உடனடியாக நடத்த கோரி நெருக்கடி செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.

17. தமிழீழ போர் காட்சிகள் தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என சட்டம் கொண்டுவந்து தடுத்தார்.

18. போர்காட்சிகளை வெளியிடலாம் என உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.

19. போர்காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அச்சகங்கள் அச்சடிக்கவில்லை. மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்ப்ட்டன.

20 சென்னை மற்றும் இதர இடங்களில் உள்ள அரசு கருத்தரங்க கூடங்கள் தமிழீழ பிரச்சனைக்கும், தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழி பிரச்சனை என்ற எதற்கும் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுக்கப்ப்ட்டது.

21. சென்னை தேவ நேய பாவணர் அரங்கம் ஒவ்வொருமுறையும் காவல்துறை அனுமதி பெற்று ந்டத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர் பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை..

22. தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி, மணியரசன், சீமான் கைது செய்யப்ப்ட்டனர் சனவரியில்.

23. பின்னர் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டார் பேசியதற்காக. நெல்லையில் இருந்து அவர் தலைமறைவாக வெளியேறி பல ஊர்களுக்கு பயணம் செய்து பேச வேண்டி இருந்தது. சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டார்கள்.

24. நாஞ்சில் சம்பத்தும், கொளத்தூர் மணியும் திரும்பவும் கைது செய்யப்பட்டார்கள்.

25 சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்து, திரள அனுமதி மறுக்கப்ப்ட்டதால் ‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

26. கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்தது

27. முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும் மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

28. முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.

29. கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது

30. போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்கானிக்கப்பட்டு நடவெடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்ப்ட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.

31. மே மாதம் 2009இல் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும் உடைத்தார்கள்.. பெதிக அலுவலகம் அண்ணா அறிவாலயத்திலிருந்து குறைந்த பட்ச தூரத்திலேயே உள்ளது. கருணா நிதியின் கோபாலபுர வீடு இருக்கும் அதே பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

32. இது தவிர இது தவிர இவை அனைத்தும் போர் நடக்கும் போது அங்கு 420,000 மக்கள் இருக்கிறார்கள் என அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சொல்லிகொண்டிருந்த போது பிரணாப் மட்டும் 70,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக சென்னையிலும், பிர ஊரிலும் பொய் பேசியதை திமுக கண்டிக்கவே இல்லை...

33. தஞ்சையில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களது இல்லம் உட்பட பல த.தே.பொ.க. தோழர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டது காவல்துறை. ஈரோட்டில் பெ.தி.க. செயலாளரின் வீட்டில் குறுந்தகடுகளைக் கைப்பற்றி அவரை ரிமாண்ட் செய்தது காவல்துறை.

34. தஞ்சையில் இந்திய அரசின் விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கையின் பலாலி விமானத்தளத்திற்கு ஆயுதம் அனுப்புகிறார்கள் என்று செய்தியறிந்து, தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்ட, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன் உள்ளிட்ட தலைவர்களும், பெண்கள் - குழந்தைகள் உள்ளிட்ட தோழர்களுமாக 275 பேரை கருணாநிதியின் காவல்துறை ரிமாண்ட செய்தது. இரவு 4 மணிக்கு நீதிபதி வீட்டில் வழக்கறிஞர்கள் பலரும் போராடி பிணை வாங்கி அனைவரும் அதிகாலை 5 மணியளவில் விடுதலையாயினர்.

2009 போர் நடக்கும் வரை ந்டந்த அடக்குமுறைகள் இவை..

போர் நடந்த பிறகு 2009-2011 இரண்டு வருடங்களில் செய்த அயோக்கியதனம் இன்னும் அதிகம்

courtesy :  The Voice Of People


Wednesday, December 26, 2012

Swiss Bank - Black Money

"While cutting hair, the official Barber asked the Minister Kapil Sibal,
‘’What’s this Swiss Bank issue?”

Kapil Sibal shouted, “YOU, you are you cutting hair ...or conducting an inquiry?”
Barber: Sorry Sir, I just asked.

Next day, while cutting the hair, he asked President Pranab Mukherjee,
“Sir, what’s this Black money issue?’’

Pranab shouted, ‘’Why did you ask me this question?’’

Barber: ‘’Sorry Sir, just asked you’’

Next day, CBI interrogated the Barber, ‘’Are you an agent of Baba Ramdev?’’

Barber: No Sir.

CBI: Are you the agent of Anna Hazare?

Barber: No Sir.

CBI: Then while cutting the hair, why do you ask Congress Ministers about
Swiss Bank and Black money issues?

Barber: Sir, I do not know why, when I ask about Swiss Bank or Black money, Congress Ministers’ hairs stand up straight; and that helps me to cut the hair easily; that’s why I keep asking."
Courtesy : Admin:♥ Ganesh Kumar ♥ through
Facebook

Thursday, November 1, 2012

"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."

"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."

ஒரு பெண் புலியின் வாக்குமூலம்
இது ஒர் உண்மைக் கதை

"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."

ஒரு பெண் புலியின் வாக்குமூலம்
இது ஒர் உண்மைக் கதை

...வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.

உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.

''எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம் பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா’ விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்’ எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர். என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது. சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன். நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்? தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.



''பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?''

''1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி. பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார். ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடு தலைக்காகவும் போராடியவர். ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!''

''அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?''

''இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!''

''இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?'

''ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!''

''என்ன நடந்தது?''

''விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் ரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர். அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன். எமது போராட்டத்தில் தோற்றுப்போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்றுவிட்டோம். எமது போராட்டம் தோற்றுப்போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு ராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக் ஃபாம் முகாமில் தங்கியிருந்தபோது, ராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன். எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியா வில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் ராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன். எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தை களின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.



அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர். சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர். 'சோதியா படையணி’யில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக ராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர். காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்’ என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது. கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே ரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெட்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர். அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர். பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர். எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்தவண்ணம் இருந்தேன்!'

''விசாரணை சித்ரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?''

''சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத் தீவுக் காடுகளுக்குள் கொண்டுவிட்டனர். அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!'

''நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?'

''பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன. முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர். நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்துவிடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது. பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு 'பால்... பால்’ என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!''

''ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?''

''எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர். பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார். அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!''

''யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?''

''பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்ரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.''

''தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?''

''அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.''



''இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர் களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?''

(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது) ''இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர் களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை. 'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்’ என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப்போடு கின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன். (சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.) இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.

ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல் களைக்கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப் பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!''

''உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி’ என விமர்சித்...'

(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!''

(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)

Courtesy 

Vikatan