Monday, May 21, 2012

உறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறும் ஈழத்தமிழர்கள் - தினமணி

உறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறும் ஈழத்தமிழர்கள் - தினமணி
[ சனிக்கிழமை, 19 மே 2012, 00:36 GMT ]
ராஜபக்சவுக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒருவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஆகிவிட முடியுமா, முடியாதல்லவா?

ஆனால், சரத் பொன்சேகா விஷயத்தில் மட்டும் இப்படி யாரும் யோசிக்கவில்லை.

இப்போது ராஜபக்சவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையேயான மோதல் நாடகத்துக்கு ஒருவழியாக சுபம் போடப்பட்டிருக்கும் வேளையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவராகிவிட்டார் அவர்.

அதாவது, தமிழ் இனப்படுகொலையை இறுதிவரை முன்னின்று நடத்தி எல்லா வகையான மனித உரிமை மீறல்களையும் செய்த பொன்சேகா, இப்போது தியாகி அளவுக்குச் சித்திரிக்கப்படுகிறார்.

தமிழர் பகுதியைச் சுடுகாடாக மாற்றிய பெருமைக்குரிய இவரைத்தான் அதிபர் தேர்தலில் சில தமிழ் அமைப்புகள் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கடைசிநாள் வரை யுத்தகளத்தில் தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, திடீரென ராஜபக்சவுக்கு எதிராகத் திரும்பி, படுகொலைகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காட்டிக் கொள்ள முற்பட்டவர் பொன்சேகா.

கோத்தபயவும் பிறரும் உத்தரவிட்டதால் தான் சரணடைய வந்தவர்களை ராணுவத்தினர் கொன்றார்கள் என்று கூறி தப்பிக்க முயன்றார்.

இதையெல்லாம் தமிழர்கள் நம்பினார்களோ தெரியாது. ஆனால், அரசியல் கட்சிகள் நம்பின.

ராஜபக்சவை பொன்சேகா ஏன் எதிர்த்தார்? ராஜபக்ச சகோதரர்கள் மீது பொன்சேகாவுக்கு என்ன காழ்ப்பு? பொன்சேகா அதிபராகியிருந்தால் தமிழர்களுக்கு என்ன செய்திருக்க முடியும்?

பொன்சேகா சிறையில் இருந்தபோது கருணை வேண்டுமா என ராஜபக்ச அடிக்கடி கேட்டுக் கொண்டது ஏன்?

இதில் எந்தக் கேள்விக்கும் உறுதியான பதில் தெரியாமல் ஒருவித உத்தேசக் கணிப்பில்தான் பொன்சேகாவுக்கு தமிழ் இயக்கங்கள் ஆதரவளித்தன.

தங்களது கோபத்தால் பொன்சேகாவை பொசுக்க வேண்டியவர்கள்கூட, அவர் அதிபரானால் தமிழினத்துக்கு மறுவாழ்வு கிடைத்து விடும் என்று நம்பும் அற்ப நிலை ஏற்பட்டது.

அரசியல் தந்திரோபாயம், மக்களைப் பாதுகாக்கும் அக்கறையில் எடுக்கப்படும் நடவடிக்கை என்றெல்லாம் நியாயப்படுத்தினாலும் கூட, பொன்சேகாவை ஆதரித்தது அருவருக்கத்தக்க நிலை என்பது எல்லா தமிழர்களின் மனசாட்சிக்கும் தெரியும்.

நாட்டைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தார் என்று யார்மீது குற்றம்சாட்டினார்களோ அதே பொன்சேகாவை விடுவிப்பதற்கு ராஜபக்ச குடும்பம் ஓடோடி வருகிறது.

முன்னர் ராஜபக்ச கேட்டுக் கொண்டது போல, பொன்சேகாவோ அவரது குடும்பத்தினரோ கருணை கோராதபோது, வலியவந்து விடுவிப்பதற்குப் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தமோ, வேறு எதுவோ இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால், பொன்சேகாவுக்கும் - ராஜபக்சவுக்கும் இடையே எப்போதும் ஒரு பிணைப்பு இருந்து வருகிறது என்பது மட்டும் உண்மை.

இனப்படுகொலையில் உறவுகளை இழந்தவர்களால் பல விஷயங்களில் உறுதியான முடிவெடுக்க முடியவில்லை.

ராஜபக்ச அரசையும், தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் எப்படி அணுகுவது என்பதில்கூட ஒருமித்த கருத்து இல்லை.

அவ்வளவு ஏன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லை இலங்கை அரசு கூறுவது போல நந்திக்கடல் பகுதியில் கிடைத்தது அவரது உடல்தானா என்கிற குழப்பத்துக்கே இன்னமும் விடை கிடைக்கவில்லை.

இறந்துவிட்டார் என்று அஞ்சலி செலுத்தவும் முடியாமல், உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக்கை வைக்கவும் முடியாமல் தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருபக்கம் போர்க்குற்றங்களுக்காக ராஜபக்சவையும் அவரது சகோதரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர் அமைப்புகள் போராடி வருகின்றன.

இன்னொரு பக்கம், இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியா சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்படுகின்றன; வீட்டுச் சாவிகளை மகிழ்ச்சியுடன் பெறும் தமிழ்ப்பெண்களின் படங்கள் ஊடகங்களில் பிரசுரமாகின்றன.

"மேற்கூரை இன்னும் உயரமாக வேண்டும், புகைபோக்கி பெரிதாக அமைக்க வேண்டும்' என்று அவர்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகின்றன.

இதையெல்லாம் பார்த்தால், நிவாரணப் பணிகள் முக்கியமா, நீதி பெறுவது முக்கியமா என்று குழப்பம் எழுந்து விடுகிறது.

சுஷ்மா ஸ்வராஜ் களுத்துறைக்குப் போய் இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்பில் உருவான ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். கூடவே "இங்கு யாரும் தனி ஈழம் கேட்கவில்லை' என்றும் கூறுகிறார்.

உடன் சென்ற தமிழ்த் தலைவர்களும் "ஆமாம்' என்கின்றனர். சில நாள்கள்வரை சுஷ்மாவின் நிலைப்பாட்டைத் திட்டித் தீர்த்த ஊடகங்கள், பிறகு "ஆளுத்கம - களுத்துறை இடையே ரயில்பாலங்கள் புனரமைக்கப்படுவதால் சில நாள்கள் ரயில்கள் இயங்காது' என்று சேவைச் செய்தி வாசிக்கக் கிளம்பி விடுகின்றன.

"இலங்கையிலுள்ள தமிழர்களே ஈழம் கேட்காதபோது...' என்கிற வாதம் தமிழர்கள் மத்தியில் நுழைந்துவிடுகிறது.

இப்போதைக்கு தனி ஈழம் தேவையா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

ஏற்கெனவே இருக்கும் தடுமாற்றங்களுக்கு மத்தியில், யுத்தத்தில் கொன்றது போக எஞ்சியிருந்த தமிழர்களின் வாக்குகளைப் பெற்ற பொன்சேகா இப்போது விடுதலையாகிறார்.

இவர் ரணிலுடன் சேர்ந்து புதிய அரசியல் அவதாரம் எடுக்கலாம். அல்லது ராஜபக்சவுடன் போய் ஒட்டிக் கொள்ளலாம்.

ஒருவேளை ராஜபக்சவின் மோசடிகளை அம்பலப்படுத்துவேன் என்று கூடச் சூளுரைக்கலாம்.

என்னவாக உருவெடுத்தாலும், தமிழர்களைக் கொன்றொழித்த அவரே, ஐ.நா.விலும், சர்வதேச நீதிமன்றத்திலும் ராஜபக்சவுக்கு எதிராக நின்று நீதியைப் பெற்றுத் தருவார் என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது.

ராஜபக்சவை எதிர்த்தாலும், எதிர்க்கா விட்டாலும் மே 18 என்பது பொன்சேகாவுக்கு வெற்றி நாள்.

தமிழர்களுக்கு அதுவே இனப்படுகொலை நாள்.

இந்தப் புரிதல் இல்லாமல் தமிழர்களின் ரத்தக்கறை படிந்த அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு நீதியைத் தேடிச் செல்வது, முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

வழிமூலம் - தினமணி

Thursday, May 10, 2012

ஈழம் - இந்தியாவுக்​குப் பாதுகாப்பா​க நட்பு நாடாக அமையும்: தினமணி

ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார்.

ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது. வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள். இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.
அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.
ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.
1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.
1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.
அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது.
இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.
இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.
தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால்வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.
இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது. இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார். மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை. கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம்.
ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம். யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.
இந்தியா, சீனா போர் நடக்கும்போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீர சிங்க அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.
வங்க தேசப் பிரச்சனையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது. வங்க தேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன்தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.
இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது. அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக்கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது. ராணுவத் தளவாடங்கள், கெம்பன்கோட்டா துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.
ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.
தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராஜபட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார். இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.
இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்சினையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.
- தினமணி -

Wednesday, April 25, 2012

கலைஞர் அய்யா... தயவு செய்து பேச வேண்டாம்! சிரித்தபடி கேட்கும் சீமான் - ஜுவி பேட்டி


தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்’ என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது. 'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். 
''ஆற்ற முடியாத காயங்​களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீ​ரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவரு​டைய திடீர் 'தமிழீழ’ ஆர்​வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ?
இறுதிப்போர் நடந்துகொண்டு இருந்த​போது, 'ஈழம் இனி சாத்தியம் இல்லை’ என பேசினீர்கள். 'மத்திய அரசின் நிலைப்​பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு’ என்றீர்கள். 
ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாகச் சொன்னார். 65 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், மிகப்பெரிய வலிமையான கட்சியை நடத்தும் கலைஞரின் முழக்கமே 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதுதான். அதையே அவரால் அடைய முடியவில்லை. இந்தியாவிலேயே இந்த நிலைமை என்றால், இலங்கை ஜனநாயக நாடே இல்லை. அது, பவுத்த மதத் தீவிரவாத நாடு. அங்கு ஒரு சிங்கள பவுத்தனைத் தவிர யாருமே தலைமை அமைச்சராக வரமுடியாது. அங்கே எப்படி மாநில சுயாட்சி கிடைக்கும்? இதை உணராத கலைஞர், மாநில அதிகாரம் பெற வேண்டும் என்று ஈழத் தமிழனுக்கு அறிவுரை சொன்னார். இப்போது, 'ஈழத்தை அடையும் வரை ஓயமாட்டேன்’ என்று சொல்கிறார். நியாயப்படி, அவர், 'ஈழத்தை அழிக்கும் வரை ஓயமாட்டேன்’ என்றுதான் சொல்லி இருக்க வேண்டும்!
அண்ணன் திருமாவளவன், சென்னையில் ஈழஆதரவு மாநாடு நடத்தியபோது, அதற்கான விளம்பரங்களில் 'ஈழம்’ என்ற வார்த்தையைக் காவல்துறையைக் கொண்டு அழித்தவர் நீங்கள். அதை மறைக்க முடியுமா? ஈழம் என்ற சொல் இருக்கக் கூடாது என்​பதற்காக, இலங்கைத் தமிழர்... இலங்கைத் தமிழர் என்று பேசி​வந்தவர்.  தொடர்ச்சியாக, என்னை ஐந்து முறை சிறைப்படுத்தினீர்களே, நான் என்ன பேசினேன்?
இன்றைக்கு நீங்கள் பேசியிருப்பதைத்தானே, அன்றைக்கு நான் பேசினேன்? 'இறுதிப்போர் காணொளி காட்சியைப் பார்க்க முடியவில்லை’ என்கிறீர்கள். இந்தக் காணொளிக் காட்சியை, அச்செடுத்து, வீடுவீடாகக் கொடுத்த​போது, கொடுத்தவர்களைத் தேடித்தேடி சிறைப்​பிடித்தீர்களே ஏன்? நீங்கள் இன்றைக்குச் சொல்லும் ஈழ விடுதலைக்காகத்தானே தம்பி முத்துக்குமார் தீக்குளித்தான்? ஏன் நீங்கள் அவனுக்காக ஒரு இரங்கல்கூட தெரிவிக்க​வில்லை? அவன் மரணத்துக்காகத் திரண்ட இளைஞர்களின் எழுச்சியை, கல்லூரி விடுதிகளை மூடி ஏன் அடக்கினீர்கள்? பெரும் ஊடகம் வைத்திருக்கிற நீங்கள் அதைப்பற்றி சிறு செய்திகூட அதில் வெளியிடவில்லையே, ஏன்? இன்றில்லாவிட்டாலும் நாளை மலரும் என்று நீங்கள் சொல்லும் ஈழத்துக்காகத்தானே, வழக்கறிஞர்கள் போராடி​னார்கள்? ஏன் அவர்களைக் காவல்துறையை விட்டு வெறிபிடித்த மாதிரி அடித்தீர்கள்?
'ஈழம் அடையும்வரை ஓயமாட்டேன்’ என்று, என் தலைவர் பிரபாகரன், அந்த ஈழ மண்ணில் கருவியோடு நின்றுகொண்டு இருந்தபோது, ஏன் நீங்கள் சொல்லவில்லை? பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் சிந்திய ரத்தம் வீண்போகாது என்று இப்போது சொல்கிற நீங்கள், 'மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டினதைவிட வேற காரியத்துல கவனம் செலுத்தியிருக்கலாம்’ என்று அப்போது சொன்னது ஏன்?
'தேவையில்லாமல் ஈழத்தைப் பற்றிப் பேசி தமிழகத்தில் வீணாக அரசியல் செய்கிறார்கள்’ என நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பேசினீர்களா, இல்லையா? அந்த மக்களின் மீது இவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டிருக்கிற நீங்கள், போர்க்குற்ற வீடியோவை உங்களின் ஊடகத்தின் மூலம் வெளியிடாதது ஏன்? இறுதிப் போரிலே, எதிரியால் உருக்குலைக்கப்பட்ட தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழகம் முழுவதும் குருவி சேர்த்ததுபோல, அத்தியாவசிய மருந்துப் பொருட்களைச் சேகரித்தார்களே, தமிழ் இளைஞர்கள். அவர்களை எல்லாம்  வேட்டையாடி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்தீர்களே, ஏன்?
'சிங்களர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்​கூடாது’ என்று அப்போது  சொன்னீர்கள். இன்று, நீங்கள் ஈழத்துக்காகப் பேசுவதற்கு கோத்தபய ராஜ​பக்ஷே கோபப்படுகிறாரே?
ஈழத் தமிழர்களுக்காக கண்ணீராக வருகிறது என இன்று சொல்கிறீர்களே. அன்று இறுதிப் போரில் தமிழ்க் குழந்தைகள் கரிக்கட்டையாகக் கிடந்த படங்கள் வரும்போது, பத்திரிகையின் அதே பக்கங்களில், உங்கள் பிள்ளை மதுரையில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய படமும் வந்ததே ஐயா? மறக்க முடியுமா எங்களால்? இன்றும் நா கூசாமல் சகோதர யுத்தம் என்று பேசுகிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் நடப்பது என்ன அன்பு முத்தமா? அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒன்றாக இருக்க முடியுமா? எம்.ஜி.ஆரை ஏன் நீக்கினீர்கள்? வைகோவை ஏன் நீக்கினீர்கள்?
ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.
இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?

- இரா. தமிழ்க்கனல்


Monday, March 26, 2012

கமலா ஹசன் வரிகள்

போர் நல்ல முறை அல்ல என்பது உலகு அறிந்த விஷயம்
அஹிம்சை நல்லது என்பது இந்திய உணர்ந்த விஷயம்
இருந்தாலும் உரிமைகளுக்கு உத்திரவாதம் இல்லாத பொது தீவிரவாதம் பிறந்தே தீரும்...
நாளை சுதந்திரம் என்று ஒன்று கிடைக்கும் பொது தீவரவாதிகளை தியாகிகள் என்று சொல்வார்கள்..

Above quote is not said by any leading politician,freedom fighter or leader..
WORDS FROM DR.KAMALHAASAN.HE IS NOT UNDER A CIRCLE CALLED "HERO OR CINE CELEBRITY"

Hit like and share f am true..

Saturday, March 24, 2012

சயாம் மரண ரயில் - மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!

எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார். அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது, அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.

இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது. அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.

அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர். இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.

போரினால் கடும் பஞ்சம் வேறு. உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai" என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன. நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன. எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.

ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது. அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர், அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே!!)..

மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான், முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம். எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும்

குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.

ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள்,, மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை. இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, லேசாய் பயம் பற்றிக் கொள்கிறது. அங்கேயும் சந்தடி சாக்கில்

சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.

இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது. சான்றுகளுக்கும் மேல்விவரங்களுக்கும் கூகிள் செய்ததில், சமீபமாக இன்னொரு புத்தகமும், அதன் வரலாறை அப்படியே சொல்ல வந்திருப்பது தெரிய வந்தது. அதற்கான தகவல்களும் சுட்டிகளும் முடிவில்.

இந்த பதிவின் மூலமாக உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் சார்பாகவும், இந்த களத்தில் உயிர்துறந்த அப்பாவித் தமிழர்களுக்கும் பிற நாட்டவர்க்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். மேலும் புலம் பெயர்ந்து தங்கள் முகம் தொலைத்து முகவரி இழந்து தவிக்கும் அத்தனை தமிழருக்கும் இப்பதிவினை அர்ப்பணிக்கிறேன்.

இப்புத்தகத்தின் விவரம் :

சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்

ஆசிரியர் : சண்முகம்

தமி​ழோசை பதிப்​ப​கம்,​​

21/8,​ கிருஷ்ணா நகர்,​​ மணி​ய​கா​ரம்​பா​ளை​யம் சாலை,​​ கண​பதி,​​ கோய​முத்​தூர்-​641 012.​ ​

தொலை பேசி - 9486586388, விலை ரூ 150.

இதே பதிப்பகத்தின் சமீபத்திய இன்னுமொரு நூல் -

சயாம்-​பர்மா மரண ரயில்​பாதை மறக்​கப்​பட்ட வர​லாற்​றின் உயிர்ப்பு -​ சீ.அருண்;​ பக்.224; ரூ.130

மேல்விவர சுட்டிகள் :

http://en.wikipedia.org/wiki/Burma_Railway

http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/death_railway.htm

http://www.cofepow.org.uk/pages/asia_thailand1.html

Sunday, March 18, 2012

Ram journalism faces criticism in JNU for pro-Sri Lanka bias, endorsing genocide

Ram journalism faces criticism in JNU for pro-Sri Lanka bias, endorsing genocide

[TamilNet, Thursday, 15 March 2012, 06:04 GMT]
Activists of Delhi Tamil Students’ Union, Democratic Students Union, Students for Resistance and other common students raised slogans against N. Ram accusing him of being a ‘media fascist’ and ‘a stooge of Rajapaksa’ at a public meeting in JNU after his reply to a question on The Hindu’s role in whitewashing the Sri Lankan state genocide of the Eezham Tamils, wherein he had extensively blamed the LTTE. The meeting on ‘Paid news and media ethics’ was organized at JNU on Wednesday by the Student’s Federation of India, which is the students wing of the CPI(M). The fact that N.Ram and The Hindu have unethically manipulated news to cover up the war crimes of Colombo makes them complicit in the genocide committed on the Eezham Tamils, a Tamil Nadu research scholar in JNU told TamilNet.

Mr. Ram was talking about journalist coverage in India elections and during the US’ wars and on the theme of media ethics, referring greatly to Noam Chomsky’s Manufacturing Consent, a classic on understanding how news is manipulated and on editorial bias.

An activist of the DTSU raised a question on why Ram, who had talked about journalists being attacked in Palestine and Iraq, had nothing to say about media freedom and assault on journalists in Sri Lanka, including murder of Sinhala journalist Lasantha Wikramatunga.

When he has been silent about this, used his newspaper to support the genocidal war on the Eezham Tamils, called a visit to the IDP camps in Vavuniya an uplifting experience when they were reality in concentration camps, how could he talk about the ethics of journalism, the activist further asked.

As a reply, N. Ram had said that those who criticize the GoSL do not criticize the LTTE [an argument highlighted by Mahinda Rajapaksa too nowadays]. After criticizing the ‘ruthlessness’ of the LTTE in his reply, he added a line that had the GoSL committed excesses, he would criticize that too.

When an activist of the DSU observed that his bias was obvious in his reply itself, where he had criticized the LTTE for ten minutes, but had only one line to say about the GoSL, and whether this was his idea of media ethics, Ram fumbled for a response. At this, students in the audience remarked loudly that ‘this is why they gave you Sri Lanka Ratna’ and shouted ‘shame’.

Student organizations and common students then raised slogans calling him a ‘media fascist’ and a ‘stooge of Rajapaksa’.

“More than anyone else, N. Ram and The Hindu know what happened in Vanni was genocide. They had access to not just the highest rungs of power, but their reporters were also in the field, with the invading Sinhala army. The fact that they have unethically manipulated news to cover up all the war crimes which are now being exposed by outlets like Channel 4, makes them complicit in the genocide of the Eezham Tamils,” a DTSU activist in JNU told TamilNet.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34994