Saturday, May 7, 2016

மக்கள் நோயும், பண பல கட்சிகளின் தந்திரமும்


அநேக மக்களின் எண்ணம் ( இது நோய் )

"வெற்றி பெறும் கட்சிக்கே எனது வாக்கு".

இந்த மன நோயை புரிந்து கொண்ட பண பல கட்சிகள்,  தான் ஒரு வெற்றி பெரும் கட்சி என்ற மாயையை உருவாக்க நினைக்கிறது. அதற்க்கு ஒரு ஆயுதமாக ஊடகத்தை வைத்து "கருத்து கணிப்பு" என்ற போர்வையில் தான் ஒரு வெற்றி பெரும் கட்சி என பிரகடன படுத்தி கொள்கிறது. ஆளுக்கு ஒரு உடகம், ஆளுக்கு ஒரு கருத்து கணிப்பு. இந்த சந்தர்பத்தை ஊடகமும் நன்றாக பயன்படுத்தி கொண்டு, எவ்வளவு அறுவடை வேண்டுமோ அவ்வளவு பணத்தை அறுவடை செய்கிறது .

இவ்வுலகில் ஒவ்வெரு   உயிரியும்,தான் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் , தன்னுடைய மரபணு தான் தன் சந்ததியுனருக்கு தருகிறது .

"வெற்றி பெறும் கட்சிக்கே எனது வாக்கு என்பது,  பலமானவன் தன் குழந்தைக்கு தகப்பனாக இருந்து விட்டு போகட்டுமே " என்பதுக்கு சமமானது ...
உங்கள் நம்பிக்கையை, நீங்கள் பதிவு செய்யுங்கள். வெற்றி தோல்வி பொருட்டே அல்ல 

Friday, April 22, 2016

யார் எல்லாம் சீமானின் எதிரிகள்?

யார் எல்லாம் சீமானின் எதிரிகள்?

வளர விடுவார்களா சீமானை ... எவ்வளவு பணத்தை அள்ளி விசியாவது உள்ளூர் தமிழர்களை கை கூலி ஆக்கி, அவர்கள் மூலமாக பொய்களை பரப்பி அழிக்க நினைப்பார்கள் என்பதே உண்மை ....

1.       கல்வி : பள்ளி, கல்லுரி நிறுவனகளை நடத்தும் கல்வி கொள்ளையர்கள் (அரசியல்வாதிகள், மற்றும்    பெரும் புள்ளிகள் )
2.       அரசியல் மற்றும் அரசு தொழில் :  ஊழல் வாதிகள் ( அரசியல் மற்றும் அரசு உழியர்கள் )
3.        ரௌடிகள், குண்டர்கள்
4.       இயற்கை வள கொள்ளையர்கள் (உள் நட்டு மற்றும் வெளிநாட்டு கொள்ளையர்கள் ) :
a.       மணல் கொள்ளையர்கள்
b.      கனிம கொள்ளையர்கள்/ இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பவர்கள்

5.       பண்ணாட்டு கொள்ளையர்கள்/ சதியாளர்கள்
a.        சர்வ தேச பொருட்களை இறக்குமதி செய்யும் மற்றும் ஊக்கு  வைக்கும் நிறுவனங்கள் (உணவு பொருட்கள் , எண்ணை , சக்கரை, செயற்கை மருந்து, உரம், பூச்சி கொல்லி, மருந்து)
b.       பண்ணாட்டு ஆங்கில மருந்து கம்பனிகள் ( சக்கரை இல்லை என்றால் பாதி நோய் வராது,  இயற்கை விவசாயம் நிலைத்து விட்டால் ஆங்கில மருந்து கம்பனிகள் ஆட்டம் கண்டு விடும்.) அதை நம்பி இருக்கும்  பெரிய முதலிட்டுடன் ஆரம்பிக்க பட்ட மருத்துவமனைகள், அதை சார்ந்த நிறுவனங்கள் (laboratory , இன்சூரன்ஸ்)அதன் பின்னல் இருக்கும் அரசியல் வாதிகள், பெரும் புள்ளிகள்
c.       பண்ணாட்டு நிறுவனங்கள் ( கோலா, பெப்சி, மீதேன், மோன்சண்டோ - பீடி பருத்தி, கத்திரிக்காய்)
d.       விவசாயதை அழித்து விவசாய பொருட்களை இறக்குமதி செய்யா வைபவர்கள். (Dependency creators )
e.      வெளிநாட்டு கை கூலிகள் (பண்ணாட்டு நிறுவனங்கள் மறைமுகமாக இதை செய்யும்)
6.        உள்நாட்டு கொள்ளையர்கள் ( சக்கரை, செயற்கை மருந்து, உரம், பூச்சி கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள்)
7.        மது பான நிறுவனகளை நடத்தும் அரசியல் மற்றும் பெரும் புள்ளிகள்.
8.       போதை பொருட்கள் விற்பனையாளர்கள்
9.        தமிழ் நாட்டின் வளர்ச்சியை கைக்குள் அடைக்கி வைக்க நினைபவர்கள்.
மற்றும் பலர் ....

வளர விடுவார்களா சீமானை ... எவ்வளவு பணத்தை அள்ளி விசியாவது உள்ளூர் தமிழர்களை கை கூலி ஆக்கி, அவர்கள் மூலமாக பொய்களை பரப்பி அழிக்க நினைப்பார்கள் என்பதே உண்மை ....

இப்படிக்கு
செந்தில்


Sunday, January 3, 2016

வாயடைத்து நின்றேன்

இன்று (04/01/2016) ஒரு ஆண்,  இருசக்கிர வாகனத்தில் இருந்து கிழே விழ ...அவரை தூக்கி விட ஒரு அழகான இளம் பெண் ஓடோடி வந்தார்.

வாயடைத்து நின்றேன் நான்