உறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறும் ஈழத்தமிழர்கள் - தினமணி
[ சனிக்கிழமை, 19 மே 2012, 00:36 GMT ]
ராஜபக்சவுக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒருவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஆகிவிட முடியுமா, முடியாதல்லவா?
ஆனால், சரத் பொன்சேகா விஷயத்தில் மட்டும் இப்படி யாரும் யோசிக்கவில்லை.
இப்போது ராஜபக்சவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையேயான மோதல் நாடகத்துக்கு ஒருவழியாக சுபம் போடப்பட்டிருக்கும் வேளையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவராகிவிட்டார் அவர்.
அதாவது, தமிழ் இனப்படுகொலையை இறுதிவரை முன்னின்று நடத்தி எல்லா வகையான மனித உரிமை மீறல்களையும் செய்த பொன்சேகா, இப்போது தியாகி அளவுக்குச் சித்திரிக்கப்படுகிறார்.
தமிழர் பகுதியைச் சுடுகாடாக மாற்றிய பெருமைக்குரிய இவரைத்தான் அதிபர் தேர்தலில் சில தமிழ் அமைப்புகள் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
கடைசிநாள் வரை யுத்தகளத்தில் தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, திடீரென ராஜபக்சவுக்கு எதிராகத் திரும்பி, படுகொலைகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காட்டிக் கொள்ள முற்பட்டவர் பொன்சேகா.
கோத்தபயவும் பிறரும் உத்தரவிட்டதால் தான் சரணடைய வந்தவர்களை ராணுவத்தினர் கொன்றார்கள் என்று கூறி தப்பிக்க முயன்றார்.
இதையெல்லாம் தமிழர்கள் நம்பினார்களோ தெரியாது. ஆனால், அரசியல் கட்சிகள் நம்பின.
ராஜபக்சவை பொன்சேகா ஏன் எதிர்த்தார்? ராஜபக்ச சகோதரர்கள் மீது பொன்சேகாவுக்கு என்ன காழ்ப்பு? பொன்சேகா அதிபராகியிருந்தால் தமிழர்களுக்கு என்ன செய்திருக்க முடியும்?
பொன்சேகா சிறையில் இருந்தபோது கருணை வேண்டுமா என ராஜபக்ச அடிக்கடி கேட்டுக் கொண்டது ஏன்?
இதில் எந்தக் கேள்விக்கும் உறுதியான பதில் தெரியாமல் ஒருவித உத்தேசக் கணிப்பில்தான் பொன்சேகாவுக்கு தமிழ் இயக்கங்கள் ஆதரவளித்தன.
தங்களது கோபத்தால் பொன்சேகாவை பொசுக்க வேண்டியவர்கள்கூட, அவர் அதிபரானால் தமிழினத்துக்கு மறுவாழ்வு கிடைத்து விடும் என்று நம்பும் அற்ப நிலை ஏற்பட்டது.
அரசியல் தந்திரோபாயம், மக்களைப் பாதுகாக்கும் அக்கறையில் எடுக்கப்படும் நடவடிக்கை என்றெல்லாம் நியாயப்படுத்தினாலும் கூட, பொன்சேகாவை ஆதரித்தது அருவருக்கத்தக்க நிலை என்பது எல்லா தமிழர்களின் மனசாட்சிக்கும் தெரியும்.
நாட்டைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தார் என்று யார்மீது குற்றம்சாட்டினார்களோ அதே பொன்சேகாவை விடுவிப்பதற்கு ராஜபக்ச குடும்பம் ஓடோடி வருகிறது.
முன்னர் ராஜபக்ச கேட்டுக் கொண்டது போல, பொன்சேகாவோ அவரது குடும்பத்தினரோ கருணை கோராதபோது, வலியவந்து விடுவிப்பதற்குப் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தமோ, வேறு எதுவோ இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால், பொன்சேகாவுக்கும் - ராஜபக்சவுக்கும் இடையே எப்போதும் ஒரு பிணைப்பு இருந்து வருகிறது என்பது மட்டும் உண்மை.
இனப்படுகொலையில் உறவுகளை இழந்தவர்களால் பல விஷயங்களில் உறுதியான முடிவெடுக்க முடியவில்லை.
ராஜபக்ச அரசையும், தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் எப்படி அணுகுவது என்பதில்கூட ஒருமித்த கருத்து இல்லை.
அவ்வளவு ஏன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லை இலங்கை அரசு கூறுவது போல நந்திக்கடல் பகுதியில் கிடைத்தது அவரது உடல்தானா என்கிற குழப்பத்துக்கே இன்னமும் விடை கிடைக்கவில்லை.
இறந்துவிட்டார் என்று அஞ்சலி செலுத்தவும் முடியாமல், உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக்கை வைக்கவும் முடியாமல் தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருபக்கம் போர்க்குற்றங்களுக்காக ராஜபக்சவையும் அவரது சகோதரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர் அமைப்புகள் போராடி வருகின்றன.
இன்னொரு பக்கம், இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியா சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்படுகின்றன; வீட்டுச் சாவிகளை மகிழ்ச்சியுடன் பெறும் தமிழ்ப்பெண்களின் படங்கள் ஊடகங்களில் பிரசுரமாகின்றன.
"மேற்கூரை இன்னும் உயரமாக வேண்டும், புகைபோக்கி பெரிதாக அமைக்க வேண்டும்' என்று அவர்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகின்றன.
இதையெல்லாம் பார்த்தால், நிவாரணப் பணிகள் முக்கியமா, நீதி பெறுவது முக்கியமா என்று குழப்பம் எழுந்து விடுகிறது.
சுஷ்மா ஸ்வராஜ் களுத்துறைக்குப் போய் இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்பில் உருவான ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். கூடவே "இங்கு யாரும் தனி ஈழம் கேட்கவில்லை' என்றும் கூறுகிறார்.
உடன் சென்ற தமிழ்த் தலைவர்களும் "ஆமாம்' என்கின்றனர். சில நாள்கள்வரை சுஷ்மாவின் நிலைப்பாட்டைத் திட்டித் தீர்த்த ஊடகங்கள், பிறகு "ஆளுத்கம - களுத்துறை இடையே ரயில்பாலங்கள் புனரமைக்கப்படுவதால் சில நாள்கள் ரயில்கள் இயங்காது' என்று சேவைச் செய்தி வாசிக்கக் கிளம்பி விடுகின்றன.
"இலங்கையிலுள்ள தமிழர்களே ஈழம் கேட்காதபோது...' என்கிற வாதம் தமிழர்கள் மத்தியில் நுழைந்துவிடுகிறது.
இப்போதைக்கு தனி ஈழம் தேவையா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
ஏற்கெனவே இருக்கும் தடுமாற்றங்களுக்கு மத்தியில், யுத்தத்தில் கொன்றது போக எஞ்சியிருந்த தமிழர்களின் வாக்குகளைப் பெற்ற பொன்சேகா இப்போது விடுதலையாகிறார்.
இவர் ரணிலுடன் சேர்ந்து புதிய அரசியல் அவதாரம் எடுக்கலாம். அல்லது ராஜபக்சவுடன் போய் ஒட்டிக் கொள்ளலாம்.
ஒருவேளை ராஜபக்சவின் மோசடிகளை அம்பலப்படுத்துவேன் என்று கூடச் சூளுரைக்கலாம்.
என்னவாக உருவெடுத்தாலும், தமிழர்களைக் கொன்றொழித்த அவரே, ஐ.நா.விலும், சர்வதேச நீதிமன்றத்திலும் ராஜபக்சவுக்கு எதிராக நின்று நீதியைப் பெற்றுத் தருவார் என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது.
ராஜபக்சவை எதிர்த்தாலும், எதிர்க்கா விட்டாலும் மே 18 என்பது பொன்சேகாவுக்கு வெற்றி நாள்.
தமிழர்களுக்கு அதுவே இனப்படுகொலை நாள்.
இந்தப் புரிதல் இல்லாமல் தமிழர்களின் ரத்தக்கறை படிந்த அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு நீதியைத் தேடிச் செல்வது, முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
வழிமூலம் - தினமணி