Friday, January 8, 2010

நதிகளை இணைத்தால் வெள்ளப்பெருக்கை தடுக்கலாம் - அப்துல் கலாம்

நதிகளை இணைத்தால் வெள்ளப்பெருக்கை தடுக்கலாம் - அப்துல் கலாம்

நாட்டில் வெள்ளப்பெருக்கைத் தடுக்க நதிகளை இணைக்க வேண்டும், இது சாத்தியம் தான் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.


சென்னை தியாகராய நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் பவள விழாவில் பங்கேற்ற அப்துல் கலாம் மாணவிகள் மத்தியில் பேசுகையில், இங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது எங்கள் வீட்டில் நூலகம் அமைப்பேன். தினமும் ஒரு மணி நேரம் ஏதாவது புத்தகத்தை படித்து அறிவை பெருக்கிக் கொள்வேன் என்று நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.


இந்த நூலகத்தை குறைந்தபட்சம் 500 புத்தகங்கள் கொண்ட நூலகமாக மாற்றுவதை அவர்களுடைய பெற்றோர் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இந்த வீட்டு நூலகத்தில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவிட வேண்டும்.


அப்போது நதிகள் இணைப்பு சாத்தியமா? என்று ஒரு மாணவி கேட்க, பதிலளித்த கலாம்,


இந்திய அளவில் நதிகளை இணைக்க முடியாவிட்டாலும் மாநில அளவிலாவது நதிகளை இணைக்க முடியும். இது சாத்தியம். கோவாவில் இணைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் நதிகளை இணைந்தால் வெள்ள அபாயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதனுடன் குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்பட வேண்டும் என்றார்.


நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் ஒரு பகுதியாக வீடுகளின் சிறு தேவைகளுக்காக ஒவ்வொரு வீட்டுக்கும் சூரியனிலிருந்து மின்சாரம் தயாரிக்க உதவும் சோலார் பேனல்களை அரசே இலவசமாக அளிக்கலாம் என்றார் கலாம்.


நதிகள் இணைப்பு சாத்தியமில்லை என்று ராகுல்காந்தி என்ற 'மாபெரும் விஞ்ஞானி' கூறிவிட்டதால் அதையே பிடித்துக்கொண்டு இந்தத் திட்டத்தையே மத்திய அரசு கைவிட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

====
நன்றி : http://dinaithal.com/tamilnadu/11596-abdul

நதியை இணைசிட்ட உற்பத்தி பெருகும் . உதாரணமாக பால், உணவு பொருட்கள் , முட்டை , மீன் , மாடு, ஆடு வளர்ப்பு அதிகரிக்கும். மின்சாரம் உற்பத்தி அதிகரிக்கும் . மக்களின் அடிப்படை தேவைகள் தீரிந்து விடும். சுருக்கமா சொல்ல போன ஏழைகள் இருக்க மாட்டங்க.
ஏழைகள் இல்லாட்டி பிச்சை போடுவது எப்படியா ?. மன்னிக்கவும் இலவச வெட்டி, சேலை , பனியன் , ஜட்டி, சோப்பு டப்பா , போட்டுக்க குலிங் கிளாஸ், சிரகம், மிளகு , கத்திரிக்காய் எல்லாம் மக்கள் வாங்க மாட்டங்க. நல்ல படிக்க ஆரம்பிச்சிருவாங்க ...

"இதை தான் நதியை இணைச்ச பல விளைவுகள் ஏற்படும்னு பயபடுரங்கா அரசியல் வாதிங்க..."

ஜனநாயகம்னா ஒட்டு வேணும்

ஒட்டு வேணும்னா ஏழைகள் வேணும் ...

ஏழைகள் இருந்தாதான் அரசியல் பண்ண முடியும்

அதனால் ஏழைகளை பாதுக்கபோம்.


1 comment:

ஜோதிஜி said...

ராகுல் இதைப்பற்றி (தத்துவத்தை) கூறியதை விட முத்தமிழ் அறிஞர் கூட அடக்கி வாசித்த வாசிப்பு தான் ஆச்சரியமாக இருந்தது. அறிவுஜீவி ஊடகம் அதற்கு மேல். என்ன சொல்வது இவர்களைப் பற்றி?