(நன்றி : Source: http://santhoshpakkangal.blogspot.com/2008/10/blog-post_14.html )
பொதுவா ஒரு வங்கி திவாலானால் அதில் உள்ள பணம் அனைத்தும் அவ்வுளவு தான் என்ற தவறான ஒரு கண்ணோட்டம் உள்ளது. ஆனால் அது முற்றிலும் நிஜம் அல்ல. ஏனெனில் வங்கிகள் அனைத்தும் அவை பெறும் வைப்பு நிதிக்கு காப்பீடு செய்து இருக்கும் (புரியற மாதிரி தமிழல சொல்லணுமுன்னா நீங்க bankல டெபாசிட் செய்யும் பணத்தை வங்கிகள் Insure செய்து இருக்கு.). ஆனாலும் இதுல ஒரு பிரச்சனை இருக்கு அது என்னானா நீங்க முதலீடு செய்து இருக்குற ஒரு லட்ச ரூபாய்க்கு தான் அவர்கள் இந்த காப்பீட்டை எடுத்து இருப்பாங்க (இது தான் RBIயோட limit).எனவே நீங்க எவ்வுளாவு போட்டு இருந்தாலும் ஒரு லட்சம் மட்டும் தான் திரும்ப வரும், இது வட்டியையும் சேர்த்து.உதாரணமா நீங்க வங்கி Xயோட அண்ணாசாலை கிளையில் ஒரு 50 ஆயிரம் fixed deposit, வேளச்சேரி கிளையில் ஒரு 50 ஆயிரம் fixed deposit, திருச்சி கிளையில் ஒரு 25 ஆயிரம் saving accountல போட்டு வெச்சியிருக்கீங்கன்னு வையுங்க. ஒரு நாள் வங்கி X திவால் ஆயிடுது. ஆனால் அந்த வங்கி செய்து இருக்கிற காப்பீட்டின் காரணமாக நீங்க போட்டு வெச்சியிருக்கிற 1.25 லட்சத்துல ஒரு லட்சம் திரும்ப கிடைத்துவிடும். ஆனால் 25ஆயிறத்தை நீங்க இழக்க நேரிடும் இந்த மாதிரி நிலைமையை தவிர்க்கவும் ஒரு வழி இருக்கு.வங்கிகளில் பணத்தை முதலீடு செய்யும் பொழுது மொத்த பணத்தையும் ஒரே வங்கியில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.அப்படி தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒரே வங்கியில் மொத்த பணத்தையும் முதலீடு செய்ய வேண்டி வந்தால், அதை joint அக்கவுண்டாக முதலீடு செய்வது உசிதம். அதாவது மேல சொன்ன உதாரணத்தையே எடுத்துகலாம். 50ஆயிரம் + 50 ஆயிரம் + 25 ஆயிரம் என்று ஒருவர் பெயரில் மூன்று தனித்தனி கணக்குகளில் முதலீடு செய்து 25 ஆயிரத்தை இழப்பதை காட்டிலும். அதே முதலீட்டை மூன்று தனித்தனி joint accountஜ திறந்து கொள்ளவும் எப்படின்னா முதல் accountஇல் உங்களை primary ஆகவும் இரண்டாவது கணக்கில் உங்கள் மனைவியை primary ஆகவும் மூன்றாவது கணக்கில் உங்க பசங்களை primary ஆகவும் நீங்க primaryயாக உள்ள கணக்கை தவிர்த்து மற்ற கணக்குகளில் உங்களை secondaryஆகவும் வைத்து கணக்கை துவங்கிக்கொள்ளவும். மேலே சொன்ன மூன்று வங்கிகணக்கிலும் நீங்க இருந்தாலும் மற்ற இரண்டு கணக்குகளில் primaryயாக வேறு ஒருவர் இருக்கும் காரணத்தினால் இவை மூன்றும் தனித்தனியே காப்பீடு செய்யப்படும்.இதன் மூலம் ஒரே வங்கியில் மூன்று லட்ச ரூபாய் வரை முதலீடு செய்து கவலையின்றி இருக்கலாம்.இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் இருப்பது போல அமெரிக்காவில் இது ஒரு லட்ச டாலர் (சமீபத்தில் இதை 2.5 லட்ச டாலராக உயர்த்தி உள்ளதாக கேள்வி யாருக்காவது தெரியுமா?) வரை முதலீடுகளுக்கு காப்பீடு உண்டு.இது பற்றி மேலும் விவரம் அறிய இங்கே செல்லவும்.
No comments:
Post a Comment