Saturday, May 7, 2016

மக்கள் நோயும், பண பல கட்சிகளின் தந்திரமும்


அநேக மக்களின் எண்ணம் ( இது நோய் )

"வெற்றி பெறும் கட்சிக்கே எனது வாக்கு".

இந்த மன நோயை புரிந்து கொண்ட பண பல கட்சிகள்,  தான் ஒரு வெற்றி பெரும் கட்சி என்ற மாயையை உருவாக்க நினைக்கிறது. அதற்க்கு ஒரு ஆயுதமாக ஊடகத்தை வைத்து "கருத்து கணிப்பு" என்ற போர்வையில் தான் ஒரு வெற்றி பெரும் கட்சி என பிரகடன படுத்தி கொள்கிறது. ஆளுக்கு ஒரு உடகம், ஆளுக்கு ஒரு கருத்து கணிப்பு. இந்த சந்தர்பத்தை ஊடகமும் நன்றாக பயன்படுத்தி கொண்டு, எவ்வளவு அறுவடை வேண்டுமோ அவ்வளவு பணத்தை அறுவடை செய்கிறது .

இவ்வுலகில் ஒவ்வெரு   உயிரியும்,தான் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் , தன்னுடைய மரபணு தான் தன் சந்ததியுனருக்கு தருகிறது .

"வெற்றி பெறும் கட்சிக்கே எனது வாக்கு என்பது,  பலமானவன் தன் குழந்தைக்கு தகப்பனாக இருந்து விட்டு போகட்டுமே " என்பதுக்கு சமமானது ...
உங்கள் நம்பிக்கையை, நீங்கள் பதிவு செய்யுங்கள். வெற்றி தோல்வி பொருட்டே அல்ல