Wednesday, November 26, 2014

PAATHAI - Palanibharathi பாதை - பழநிபாரதி

PAATHAI - Palanibharathi பாதை - பழநிபாரதி

பாடலாசிரியரும் கவிஞருமான பழநி பாரதி, தாஜ்நூரின் இசையோடு இணைந்து இன்றைய நாளில் எழுதியிருக்கும் வரிகள்,
வரலாற்றின் பொருள் கூறுகின்றன. பழநிபாரதி படைத்திருக்கும் "பாதை" யினை இங்கே காணலாம்.

courtesy 

தன்னிகரில்லா தமிழன்

தன்னிகரில்லா தமிழன்
சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!
* * * * *
இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!
---------- தெய்வத்திரு கவிஞர் வாலி...