Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, August 12, 2014

நல்ல திட்டுங்க


“ ஈழத்தில் நடந்தது போர் குற்றம் அல்ல”
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும் ...

“ஈழத்தில் நடந்தது இன படுகொலை அல்ல”
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும் ...

“ ராஜபக்சே செய்தது சரியே “ 
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும்

ஈழ தமிழகளுக்கு சம உரிமை பற்றி வாய் திறக்காத ஓநாய்களும், தந்திர நரிகளும்...

தமிழ் உணர்வையும் , இருக்கிற கொஞ்ச நஞ்ச உணர்வாளர்களையும்
ஒடுக்க


சூழ்ச்சி செய்ய தக்க தருணம் பாத்து காத்து கொன்டிருந்த

ஓநாய் களுக்கு 


நல்ல வாய்ப்பு
சீமான் பற்றி அவதூரு பரப்புரை செய்ய

எதற்க்கெடுத்தாலும் லைக் போட்டு share  செய்யும்  facebook  தமிழர்களே!


நல்ல திட்டுங்க

சீமான் னையும் ,

 நெடுமாறனையும்,

 வைகோவையும் ..

உங்கள் கொள்ளு பேரனுக்காக காத்திருகிறது ....


ஸ்டாலலினின்  கொள்ளு பேரன்
தமிழக மீனவர்கள் கைதுக்கு எதிர பிரதமருக்கு கடிதம் ,

ஸ்டாலலினின்  கொள்ளு பேரன் 1 மணி நேர உண்ணாவிரதம் ,

ஸ்டாலலினின்  கொள்ளு பேரன் கொட்டும் மலையில்

ஈழ தமிழருக்காக மனித சங்கிலி னு ...

Monday, December 2, 2013

வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் சொல்றதுடைய நியாயம்

என் சாதி காரன் நீதிபதியா வேனும் ! 

என் சாதி காரன் IAS a வேனும் ! 

என் சாதி காரன் top 10 சீனியர் லாயர் ல ஒருவர் வேணும் !

என் சாதி காரன் IG யா வேணும் !

என் சாதி காரன் முதலமைச்சரா வேணும் !

என் சாதி காரன் மத்திய மந்திரியா வேணும் னு 

வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் சொல்றதுடைய நியாயம் 
சங்கர ராமன் கொலைவழக்கு ஒரு நேரடி சாட்சி !

Share Please 
Senthil kumar

Thursday, February 14, 2013

காந்திய வழியில் நடப்பவர்களா காங்கிரஸ் காரர்கள் ?


1) காந்திய வழியில் நடப்பவர்கள் என்றால்... எத்தானை காங்கிரஸ் காரர்கள் சில்லி சிக்கன் மட்டன் பிரியாணி , மீன் ப்ரை உண்ணாமல் சைவம் சாப்பிடுகிறவர்கள்?

2) அவர் குடும்பங்களில் எத்தனை பேர் சைவம் ?
 அவ்வாறாக இல்லை என்றால் அகிம்சையை பின்பற்றாத அவரும், அவர்கள் குடும்பம்மும்  இப்படி இருக்க , எப்படி மேடை ஏறி பேச முடிகிறது ? காந்தியின் கதரை கட்டி கொண்டு வலம் வர முடிகிறது ? காந்தியின் படத்தை வைத்து
ஓட்டு கேக்க முடிகிறது ?

3) காந்தியுன் அகிம்சை உண்மை என்றால் "மரண தண்டனை" என்ன ?

4) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் எப்படி ஊழலில் ஈடுபடுகிறார்கள் ?

5) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் மது அருந்தாத காங்கிரஸ் காரர்கள் எத்தனை பேர் ?

6) காந்தியவாதியகவும் காங்கிரஸ் காரர் ராக தொப்பி , ஜுப்ப உடன் திரிந்த கிழ வயது N  T திவாரி ( முன்னால் ஆந்திர ஆளுனர் ) பெண்களுடன்  உருண்டு பிரண்டது ஏனோ ? (இவர் அடிமட்ட தொண்டர் இல்லை இவர் மதிப்பிற்குரிய  தலைவர்களில் ஒருவர் )

7) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் இந்திர காந்தி அம்மையார் கொலையுண்ட போது சீக்கியர்களை தாக்கி , பலரை கொலை செய்தது ஏனோ ?

8) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால், அகிம்சை வாதிகள் என்றல் ராஜீவ் காந்தி கொலையுண்ட போது வன்முறையில் ஈடுபட்டது ஏன் ?

வாய்ப்பு ஒன்று தான்  இறுதி என்றால் இதற்க்கு ஏன் காந்தி போட்டோ, காதர் ...

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் யார் ?


Wednesday, December 26, 2012

Swiss Bank - Black Money

"While cutting hair, the official Barber asked the Minister Kapil Sibal,
‘’What’s this Swiss Bank issue?”

Kapil Sibal shouted, “YOU, you are you cutting hair ...or conducting an inquiry?”
Barber: Sorry Sir, I just asked.

Next day, while cutting the hair, he asked President Pranab Mukherjee,
“Sir, what’s this Black money issue?’’

Pranab shouted, ‘’Why did you ask me this question?’’

Barber: ‘’Sorry Sir, just asked you’’

Next day, CBI interrogated the Barber, ‘’Are you an agent of Baba Ramdev?’’

Barber: No Sir.

CBI: Are you the agent of Anna Hazare?

Barber: No Sir.

CBI: Then while cutting the hair, why do you ask Congress Ministers about
Swiss Bank and Black money issues?

Barber: Sir, I do not know why, when I ask about Swiss Bank or Black money, Congress Ministers’ hairs stand up straight; and that helps me to cut the hair easily; that’s why I keep asking."
Courtesy : Admin:♥ Ganesh Kumar ♥ through
Facebook

Friday, July 29, 2011

Politics in INDIA

Politics in INDIA
Recently Sonia Gandhi went to a school to interact with the children there.After a brief talk she asked if anyone had any questions. One boy raised his hand.

Sonia: "What's your name"?

Boy : "RAHIM"

Sonia: "What are your questions"?

Rahim: "I've 3 questions...

1. Why did you attack & kidnap Baba Ramdev without approval of Court?
2. Why there is no punishment to KASAB as yet?
3. Why does Manmohan singh & the Congress party not support Baba againstcorruption?

Sonia: "You are an intelligent student Rahim."

Just then the recess bell rang.

Sonia: "Oh students, we wil continue after the recess is over".

After the recess...

Sonia: "Ok children where were we? So, anybody wants to ask a question"?
RAM raises his hand.

Sonia: "What's your name"?

Ram: "I'm Ram and I've 5 questions...

1. Why did you attack Baba without approval of the court?
2. Why no punishment to Kasab as yet?
3. Why does Manmohan Singh not support the fight against corruption?
4. Why did the recess bell ring 20 mins before the time?
5. Where is Rahim?

Monday, June 27, 2011

டாஸ்மாக்

அரசாங்கம் நடத்தும்
அவமானச்சின்னம்
டாஸ்மாக்

பாதை தவறியவர்கள்
போதை வாங்குமிடம்
டாஸ்மாக்

காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
குடிமகன்களுக்கு பிடித்த இடம்
டாஸ்மாக்

குடிமகன்களிடமிருந்து கரந்து
அரசாங்கத்திற்கு வழங்கும்
கற்பக காமதேனு டாஸ்மாக்

வருமானம் பெருகப் பெருக
அவமானம் பெருகுகின்றது
டாஸ்மாக்

பாஸ் மார்க் வாங்கியும்
க்ளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக்

ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
நிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மாக்

போதை சுகத்தில் குடிமகன்
சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
டாஸ்மாக்

விதவைகளின் எண்ணிக்கையை
விரிவாக்கம் செய்யுமிடம்
டாஸ்மாக்

வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
டாஸ்மாக்

இலவசமாய் நண்பன் தருவதாக
இளித்துக் கொண்டு போகுமிடம்
டாஸ்மாக்

இமயமாக உயர வேண்டியவன்
படு பாதாளத்தில் விழுமிடம்
டாஸ்மாக்

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Wednesday, March 23, 2011

இப்படிக்கு ...தமிழ் நாட்டின் பரம ஏழை

தமிழ் நாட்டில் வாழ்வதற்கு உண்டான தகுதிகள்
நீங்கள் படித்தவரா ? ..............
உங்களுக்கு சொந்த வீடு உள்ளதா ?.............
டேக்ஸ் அதிகம் கட்டுபவரா ?...........
சொந்த தொழில் செய்பவரா ?.................
அப்படியானால் நீங்கள் புத்திசாலி இல்லை
ஆமாம் ........ நீங்கள் தமிழ் நாட்டில் வாழும் புத்திசாலி இல்லை
ஏனென்றால்
நாங்கள் படிக்காதவர்கள் .......
சொந்த வீடு , தொழில் எதுவுவுவும் ........
இல்லை .........
பரம ஏழை ..........
ஆனால் வாழ்வதற்கு வீடு ............
மாதம் தோறும் 35 கிலோ அரிசி
அதை பொங்கி திங்க காஸ் அடுப்பு ........
அரைத்து திங்க கிரைண்டர் , மிக்சி ......
இதற்க்கு ஏற்ப மளிகை சாமான்கள் .....
தீபாவளி பொங்கலுக்கு துணிகள் .....
காலை உணவு முடித்து பகல் பொழுது கழிய மாலை வரை வண்ண தொலைகாச்சி பெட்டி ...
இடையே அரட்டை அடிக்க செல் போன் ....
இரவு வந்தா மலிவு விலை மது , இலவச மின்சாரம் ....
பிறகு சும்மானச்சுக்கும் போரடிச்சா 100 நாள் வேலை ( இஷ்டம் இருந்தா .. போன போவுது )
எங்கள் குழந்தைகள் படிக்க ...
இலவச பஸ் பயணம் , சைக்கிள் , மதிய உணவு ,, லேப்டாப் ...
உதவி தொகை ....
அவர்கள் கல்யாண செலவு , பிறகு புள்ள பேருக்கு ஊக்க தொகை ,..
பிறகு எதுக்குங்க நாங்க உங்கள மாதிரி கஷ்ட படனும் நாங்க செய்வது தினமும் இரண்டு வேலை ....
ஒன்னு எங்க காலை கடனை நாங்களே முடிக்கணும் ,இரண்டு நைட் சமா சரத்தே நாங்களே முடிக்கணும் ( ரொம்ப கஷ்டமான வேலை )
பிறகு 5 வருசத்துக்கு ஒரு முறை போய் ஒரு பட்டனை அழுதிட்டு வந்தா எங்களுக்கு எல்லாமே வீடு தேடி வந்திடும் இவ்வளவு நல்வங்கள ..
தமில் நாட்டில் மட்டுமே பார்க்கமுடியும் ...
என்னவோ போங்க நீங்க எல்லாம் கஷ்டபடுறத எங்களாலே சகிக்க முடியலே ...
சீக்கிரம் நீங்களும் எங்களோட சேர்ந்துடுவீங்க ....
நிச்சயமா ...
எங்க குலதெய்வம் ..
முனியப்பா சாமி சத்தியம் ...
குலதெய்வம் பக்கத்துக்கு உங்களுக்கு துணையா இருக்கும்
என்னவோ நான் சொல்லறத சொல்லிட்டேன் ..
அப்புறம் கஷ்ட படறதும் படா ததும் உங்க இஷ்டம் ...
உங்களுக்கு புத்தி சொல்லறளவுக்கு நான் ஒன்னும் பெரிய புத்திசாலி இல்லை
ஏனென்றால் நான் படிக்காதவன்.......
பரம ஏழை ......
இப்படிக்கு ..,
தமிழ் நாட்டின் பரம ஏழை

நன்றி :
Vijay Computers,18A,APM Complex 2nd FloorSathy ரோடு Erode - 638 00198427 716760424-4271676
tvijee@yahoo.com ; vijaycomputerserode@gmail.com
( Hi Very nice .....
Actually in tamil nadu .... we have
1) Poultry Farms - Where Birds were feeded for one day...
2) Cattle Farms - Where Cattles were feeded for one day...
3) Human Farms - where Peoples were feeded for Election Day Nothing to say ....

Monday, March 2, 2009

காங்கிரஸ் தேர்தல் சாதகமும், பாதகமும்

தேர்தல் வருகை - காங்கிரசின் நிலை :

தேர்தல் வருவதால், இவ்வளவு நாளாக கூறி வந்தது போல் " போரை நிறுத்த சொல்லி இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது" என்பதை விட்டுவிட்டு

1) "போரை நிறுத்தி பொது மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதை கூ றுகிறார் வெளி உறவு துறை அமைச்சர்.
2) தமிழர் அதிகார பகிர்வு பற்றி பேசியுள்ளார்.
( இதை பற்றி நாம் பேசுவது கனவில் உணவு அருந்துவது போல். இலங்கை அதிபர் வாய் திறக்காமல் எந்த முடிவும் வர போவது இல்லை).
இதற்க்கு தான் வெளி உறவு துறை அமைச்சர் நாசுக்ககா கூறுகிறார் "விடுதலை புலிகள் கோரும் போர் நிறுத்தத்தை பயன் படுத்தி , பொது மக்களை வெளியற்றி விட்டு, புலிகளை அழித்துவிட்டு, பிரபாகரனை பிடித்துவிடலாம் என்று இலங்கைக்கு அறிவுறுத்துகிறார். இலங்கை அதிபர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என தெரியவில்லை. ( விடுதலை புலிகளை போரிட்டு அழிக்க வேண்டும் என்பதிலும் , பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படிக்க வேண்டும் என்பதிலும் எந்த ஒரு மாற்று கருத்தே இல்லை காங்கிரசிடம். இதை தேர்தல் என்பதால் வெளிபடையாக கூற முடியாத சூழ்நிலை உள்ளது.)
பாதகம் ;

1) போரை நிறுத்த இந்திய கோர முடியாது என்றது பாதகமே.

2) ஆயுதமோ, பண உதவியோ இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறி வந்த நிலையுல், ஊடகங்கள் வாயிலாக ஆதாரத்தோடு செய்தி வெளி வந்த நிலையில், மௌனம் காப்பதால், மக்களுக்கு காங்கிரஸ் கூறுவது எல்லாம் உண்மையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. நம்பக தன்மை மீதும் எழுந்த கேள்வி தான் இது. இது பாதகமே.

3) சட்டம், ஒழுங்கு, நியாயம், நீதி என்று பேசினாலும், அங்கே மக்களுக்கு ஏற்படும் கொடுமைகளை, அநிதி, கொலை, மனித உரிமை மீறல், கற்பழிப்பு எல்லவற்றையும் கை கட்டி வேடிக்கை பார்க்க தான் வேண்டி இருக்கிறது. தமிழகத்தில் விடுதலை புலிகள் என்று வாய் திறந்தாலே உள்ளே போக வேண்டிய நிலை மாறி, இப்போது விடுதலை புலிகள் ஆதரவாக வெளிப்படியாக கோஷங்கள் போடுவது, கையில் கொடி ஏந்தி போராடுவது என நடப்பது ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிகிறது. இதில் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்திருப்பது காங்கிரஸின் ஆதரவு குறைதிருப்பதையே காட்டுகிறது. ஆதரவு அளிப்பவர்கள் பாமர மக்கள் மட்டும் அல்ல படித்தவர்களும் தான். பேராசிரியர்கள், எழுத்தாளர்கள். இது பாதகமே.
சாதகம் :
1) விடுதலை புலிகளை அழிப்போம், பிரபாகரனை பிடிப்போம் என்று வெளிபடையாக கூறுவதை விட்டது சாதகமே.
2) போர் நிறுத்தம்,அதிகார பகிர்வு என்று பேச துவங்கியது தேர்தலுக்கு சாதகமே.

தேர்தல் காங்கிரசாரின் எண்ணத்தில் இன்னும் மாற்றம் ஏற்படுத்தும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.
மக்களுக்கு தகுந்தார் போல் காங்கிரஸ் மாறுமா ?.
காங்கிரஸ் தகுந்தார் போல் தமிழக மக்கள் மாறுவர்கள?.
கிராம புற மக்களின் எண்ணம் மிகுந்த தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தும். அந்த மக்களின் எண்ணம் என்ன?.
அவர்கள் பிரச்சனை ஈழ மக்கள? இல்லை வேறு பல பிரச்சனை உள்ளாத?. தேர்தலுக்கு ஈழ பிரச்சனைக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கும் ?
எனபது எல்லாம் தேர்தல் முடிவு தான் சொல்லும்.
இது பாமர மக்களின் எண்ணம் மட்டுமே.

(பின் குறிப்பு : மேல் கூறியாவை அனைத்தும் உறங்கி கொண்டிருக்கும் போது கனவில் ஜோதிடர் ஒருவர் கூறினார். இது அவர் கனவில் கடவுள் வடிவில் வந்தவர் கேள்வி எழுப்பியதாக அவர் கூறினார். இது கனவே தவிர வேறு ஒன்றும் இல்லை. )

Wednesday, February 18, 2009

ஒரு முட்டாளின் முன்று கேள்விகள்

ஒரு சாதாரண இந்திய குடிமகனான என்னுள் எழுந்த முன்று கேள்விகள்.

1) இந்தியா, ஈழத்தில் உள்ள தமிழர்களின் உரிமைகளை வாங்கி கொடுக்க உத்திரவாதம் தர முடியுமா?.

இந்தியாவின் பதில் : இது உள்நாட்டு பிரச்சனை. வலியுறுத்தலாம் தவிர, ஒரு நாடு இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது.

2) இந்தியா, ஈழத்தில் உள்ள ராணுவத்தால் கொல்லபடுகின்ற தமிழர்களின் உயிருக்கு உத்திரவாதம் தர முடியுமா?.

இந்தியாவின் பதில் : இது உள்நாட்டு பிரச்சனை. வலியுறுத்தலாம் தவிர ஒரு நாடு இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது.

அப்போ இப்ப இலங்கையில் நடக்குற சண்டையும் உள்நாட்டு பிரச்சனை தானே?. இலங்கை நாட்டில் ஒரு தரப்பு மக்கள் தங்களின் உரிமைக்காக அந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளரை எதிர்த்து போராடுகிறார்கள்.

இந்த உள்நாட்டு பிரச்சனைகாக இந்தியா ஏன் பணம், ஆயுத உதவி செய்ய வேண்டும்?.

இந்தியா பணம், ஆயுத உதவி செய்யும் போது மட்டும் இது உள்நாட்டு பிரச்சனையில் தலையிடுவதா தெரியுலையா?.

என்னை போன்ற பல பேருக்கு புரியாத புதிரா தான் ....

Friday, February 13, 2009

இறப்பது இந்தியர்களா ? தமிழர்களா ?

அதிகம் பேசவும் தேவை இல்லை விளக்கவும் தேவை இல்லை. கேள்வி ஒன்றே போதுமானது. ஆனால் ஆதங்கம் விடுவதா இல்லை என்ன செய்வது ?. வேறு மாநிலத்தில் வாழும் என்னைப்போலவர்களிடம் மற்றவர்கள் பேசும் போது தான் தெரிகிறது நமக்கு. பேசும் போது "This is the problem of Tamils in SriLanka" ( இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை ). நானும் நுட்பமாக கவனிக்காமல் சாதாரணமாக நினைத்தேன். பிறகு தான் கேள்வி எழுந்தது "இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை" சரியா ? என்று. ஏன் இது இலங்கையில் வாழும் இந்தியர் பிரச்சனை இல்லையா? . தமிழர் பிரச்சனை வேறு இந்தியர் பிரச்சனை வேறா? . பிரச்சனை முடிவுக்கு வராத காரணம் இப்போது தான் புரிந்தது என்னக்கும். புரிந்தது இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று. சரிதானே இறப்பது தமிழன் தானே ... இந்தியர்கள் பழி யானால் துடி துடித்து போகும் இந்தியாவிற்கு ஏன் பல இந்தியர்கள் இலங்கையில் ரத்தம் சிந்துவதை பார்த்து கொண்டிருக்கிறது ?. இறப்பது இலங்கையில் வாழும் இந்தியன் என்று இந்தியா நினைக்குமேனால் பிரச்சனை முடிந்துவிடும் . "மறப்பவர்கள் தான் தமிழ் மக்கள் " எல்லாம் ஆறு மாதத்தில் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தால்...
மிகவும் வருத்த பட வேண்டிய விஷயம் தான் இது