Saturday, May 7, 2016

மக்கள் நோயும், பண பல கட்சிகளின் தந்திரமும்


அநேக மக்களின் எண்ணம் ( இது நோய் )

"வெற்றி பெறும் கட்சிக்கே எனது வாக்கு".

இந்த மன நோயை புரிந்து கொண்ட பண பல கட்சிகள்,  தான் ஒரு வெற்றி பெரும் கட்சி என்ற மாயையை உருவாக்க நினைக்கிறது. அதற்க்கு ஒரு ஆயுதமாக ஊடகத்தை வைத்து "கருத்து கணிப்பு" என்ற போர்வையில் தான் ஒரு வெற்றி பெரும் கட்சி என பிரகடன படுத்தி கொள்கிறது. ஆளுக்கு ஒரு உடகம், ஆளுக்கு ஒரு கருத்து கணிப்பு. இந்த சந்தர்பத்தை ஊடகமும் நன்றாக பயன்படுத்தி கொண்டு, எவ்வளவு அறுவடை வேண்டுமோ அவ்வளவு பணத்தை அறுவடை செய்கிறது .

இவ்வுலகில் ஒவ்வெரு   உயிரியும்,தான் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் , தன்னுடைய மரபணு தான் தன் சந்ததியுனருக்கு தருகிறது .

"வெற்றி பெறும் கட்சிக்கே எனது வாக்கு என்பது,  பலமானவன் தன் குழந்தைக்கு தகப்பனாக இருந்து விட்டு போகட்டுமே " என்பதுக்கு சமமானது ...
உங்கள் நம்பிக்கையை, நீங்கள் பதிவு செய்யுங்கள். வெற்றி தோல்வி பொருட்டே அல்ல 

Friday, April 22, 2016

யார் எல்லாம் சீமானின் எதிரிகள்?

யார் எல்லாம் சீமானின் எதிரிகள்?

வளர விடுவார்களா சீமானை ... எவ்வளவு பணத்தை அள்ளி விசியாவது உள்ளூர் தமிழர்களை கை கூலி ஆக்கி, அவர்கள் மூலமாக பொய்களை பரப்பி அழிக்க நினைப்பார்கள் என்பதே உண்மை ....

1.       கல்வி : பள்ளி, கல்லுரி நிறுவனகளை நடத்தும் கல்வி கொள்ளையர்கள் (அரசியல்வாதிகள், மற்றும்    பெரும் புள்ளிகள் )
2.       அரசியல் மற்றும் அரசு தொழில் :  ஊழல் வாதிகள் ( அரசியல் மற்றும் அரசு உழியர்கள் )
3.        ரௌடிகள், குண்டர்கள்
4.       இயற்கை வள கொள்ளையர்கள் (உள் நட்டு மற்றும் வெளிநாட்டு கொள்ளையர்கள் ) :
a.       மணல் கொள்ளையர்கள்
b.      கனிம கொள்ளையர்கள்/ இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பவர்கள்

5.       பண்ணாட்டு கொள்ளையர்கள்/ சதியாளர்கள்
a.        சர்வ தேச பொருட்களை இறக்குமதி செய்யும் மற்றும் ஊக்கு  வைக்கும் நிறுவனங்கள் (உணவு பொருட்கள் , எண்ணை , சக்கரை, செயற்கை மருந்து, உரம், பூச்சி கொல்லி, மருந்து)
b.       பண்ணாட்டு ஆங்கில மருந்து கம்பனிகள் ( சக்கரை இல்லை என்றால் பாதி நோய் வராது,  இயற்கை விவசாயம் நிலைத்து விட்டால் ஆங்கில மருந்து கம்பனிகள் ஆட்டம் கண்டு விடும்.) அதை நம்பி இருக்கும்  பெரிய முதலிட்டுடன் ஆரம்பிக்க பட்ட மருத்துவமனைகள், அதை சார்ந்த நிறுவனங்கள் (laboratory , இன்சூரன்ஸ்)அதன் பின்னல் இருக்கும் அரசியல் வாதிகள், பெரும் புள்ளிகள்
c.       பண்ணாட்டு நிறுவனங்கள் ( கோலா, பெப்சி, மீதேன், மோன்சண்டோ - பீடி பருத்தி, கத்திரிக்காய்)
d.       விவசாயதை அழித்து விவசாய பொருட்களை இறக்குமதி செய்யா வைபவர்கள். (Dependency creators )
e.      வெளிநாட்டு கை கூலிகள் (பண்ணாட்டு நிறுவனங்கள் மறைமுகமாக இதை செய்யும்)
6.        உள்நாட்டு கொள்ளையர்கள் ( சக்கரை, செயற்கை மருந்து, உரம், பூச்சி கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள்)
7.        மது பான நிறுவனகளை நடத்தும் அரசியல் மற்றும் பெரும் புள்ளிகள்.
8.       போதை பொருட்கள் விற்பனையாளர்கள்
9.        தமிழ் நாட்டின் வளர்ச்சியை கைக்குள் அடைக்கி வைக்க நினைபவர்கள்.
மற்றும் பலர் ....

வளர விடுவார்களா சீமானை ... எவ்வளவு பணத்தை அள்ளி விசியாவது உள்ளூர் தமிழர்களை கை கூலி ஆக்கி, அவர்கள் மூலமாக பொய்களை பரப்பி அழிக்க நினைப்பார்கள் என்பதே உண்மை ....

இப்படிக்கு
செந்தில்


Sunday, January 3, 2016

வாயடைத்து நின்றேன்

இன்று (04/01/2016) ஒரு ஆண்,  இருசக்கிர வாகனத்தில் இருந்து கிழே விழ ...அவரை தூக்கி விட ஒரு அழகான இளம் பெண் ஓடோடி வந்தார்.

வாயடைத்து நின்றேன் நான் 

Tuesday, January 13, 2015

பூஜையும் கடவுளும்





மக்கள் பூஜை நாட்களில் மாந்தளிர்களை கொண்டு அலங்கரிக்கின்றனர்... நல்ல விடையம் தானே அலங்கறியுங்கள், பூஜை செய்யுங்கள் , சாமிக்கு நல்ல ஐஸ் வைச்சி வாரம் வாங்குங்க....

நாங்கள் இருக்கும் காலனியில் பல மரங்களை வளர்க்கும் முயற்சியில் தப்பி பிழைத்தது   இரண்டு மா கன்றுகளே. 

இன்று சங்கராந்தி, 

பண்டிகை நாட்களில் வழக்கம் போல மாதளிர்களை காணோம்... இந்த சிறும் செடியில் இருக்கும் ஒரு சில இலைகலை பறித்து பூஜைக்கு  அலங்கரிக்கின்றனர்...  இதில் என்னவென்றால் ..மங்கொட்டையை  நட்டது நான் , அந்த செடிக்கு தண்ணீர் உற்றியது நான் . வளர்வது செடி .... இங்கே எங்கே இருந்து நீயும், கடவுள் வருகிறிர்கள்?.

பல  வருடங்களாக இதே பிரச்சனை தான் 

ஏன் கேள்வி என்னவென்றால் 

1. பூஜைக்கு மா இழையை கட்ட சொன்னாரா கடவுள் ?
2. அப்படிஎன்றால் ஊரன் வளர்த்த செடியில் இருந்து திருடி கொண்டுவந்து பூஜை செய் என்றாரா ?
3. திருட்டு மாந்தளிரில் அலங்கரித்து பூஜை செய்தால் வரம் தருவாரா ?
4. வரம் கிடைக்காது என்றால் எதற்கு இந்த திருட்டு வேலை ?
5. வரம் கிடைக்கும் என்றால் கடவுளின் யோகிக்கியதை என்னவாக இருக்கும்?

கடவுள் நேரில் வர போவதும் இல்லை , வரத்தை தர போவதும் இல்லை என்பதே உண்மை.. அப்படி வருவாராயின் அவர் நல்லவராக இருந்தால் உங்கல் போன்ற பக்த கோடிகளை  சவுக்கு எடுத்து வெளு வெளு என்று வெளுப்பராக... 

இந்த செயலுக்குநான் உங்களை அருவெறுப்பான பார்க்கவில்லை மாறாக கடவுளை தான்.

கடவுளையும் மதத்தையும் கேவலபடுத்துவது அவர் அவர்களே தவிர மற்றவர்கள் அல்ல என்பதை நீங்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும்.

Wednesday, November 26, 2014

PAATHAI - Palanibharathi பாதை - பழநிபாரதி

PAATHAI - Palanibharathi பாதை - பழநிபாரதி

பாடலாசிரியரும் கவிஞருமான பழநி பாரதி, தாஜ்நூரின் இசையோடு இணைந்து இன்றைய நாளில் எழுதியிருக்கும் வரிகள்,
வரலாற்றின் பொருள் கூறுகின்றன. பழநிபாரதி படைத்திருக்கும் "பாதை" யினை இங்கே காணலாம்.

courtesy 

தன்னிகரில்லா தமிழன்

தன்னிகரில்லா தமிழன்
சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!
* * * * *
இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!
---------- தெய்வத்திரு கவிஞர் வாலி...

Tuesday, September 16, 2014

டேய் நண்பா எங்கடா இருக்கே இப்போ ?


இப்போ எல்லாம்  நீ போன் ல கூட பேசுறது இல்ல கூகிள் ல சாட் பண்றது இல்ல .. ஆனா நான் உன்ன மறந்தாலும் ஏதோ ஒரு வடிவத்துல உன் ஞாபகம் வர வச்சிரங்க ...

கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி காலைல இருந்து நைட் வரைக்கும் வேணாம் வேணாம் னு ஓடுனாலும் விடாம எனக்கு தெரிஞ்ச கல்யாணம் ஆகாத பொண்ணுக பத்தி கேட்டு கேட்டு கூகிள் ல சாட் செய்வியே?

எங்க ஊரு புள்ளைக கிட்ட என் ப்ரென்ட் நல்லவரு, வல்லவரு னு சொல்ல சொல்லி எனக்கும் “லவ் டார்ச்சர்” கொடுத்தியே ?

 எங்க ஊரு டவுன் பஸ்ல “அலர்ஜி , ஆஸ்த்மா, நரம்பு தளர்ச்சி, எய்ட்ஸ்  .... க்கு உடனே தீர்வு ...அணுகவும் டாக்டர் X ...  னு ஒவ்வேருத்தர் மடியுலும் வேணும்னாலும் வேணாம்னாலும் பிட் நோட்டீஸ் வச்சிட்டு போறவன் மாதிறி,  கல்யாணம் ஆகாத பொண்ணுங்க எல்லாத்துக்கும்  கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம ஒரு பிட் நோட்டீஸ் குடுத்தியே ... உனக்கு ஞாபகம் இருக்க இல்லையோ எனக்கு நல்லவே இருக்கு...

உனக்கு கல்யாணம் னு கேள்வி பட்டதும் சந்தோஷ பட்டது கல்யாணம் ஆகாத பொண்ணுங்க மட்டும் இல்ல ...நானும் தான் ...

ஏண்ணா, சார் உங்க ப்ரென்ட் எனக்கும் அப்ளிகேசன் குடுத்தார் ... எனக்கும் அப்ளிகேசன் குடுத்தார்... னு இனி யாரும் சொல்லமாட்டங்க னு ...
ரொம்ப சந்தோஷ பட்டேன்

 ஆனா...

அந்த சந்தோசம் ரொம்ப நாள் நிலைக்கல ...

சமிபத்துல கல்யாணம் ஆகி குழந்தையோட இருந்த ஒரு பொண்ணு பேசும் போது சார் உங்க பிரெண்ட எனக்கும் தெரியும் ... அவரு “தமிழ் மேட்ரிமோனி” ல எனக்கும் இண்டரெஸ்ட் அனுப்பினார் ... னு சொன்னப்ப இருந்த நிம்மதி யும் போச்சி ...

இப்போ ஒரு குழந்தையோட இருக்கிற பொண்ணுங்கள பாத்தாவே உண் பேர சொல்ல பயமா இருக்குட ...

டேய் நண்பா எங்கடா இருக்கே இப்போ ?